நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, பிப்ரவரி 26, 2022

தரிசனம் 8

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில் -
கோவிந்தபுரம் ஸ்ரீ பாண்டுரங்க தரிசனம்..

கடந்த செவ்வாய்க் கிழமையன்று கும்பகோணத்தை அடுத்துள்ள கோவிந்தபுரம் ஸ்ரீ விட்டல் பாண்டுரங்க ருக்மணி சமஸ்தான தரிசனம்..

நன்றி - கூகிள்

கடந்த 2011 ல் இத்திருக்கோயில்
ஸ்ரீ ஸ்ரீ விட்டல் தாஸ் மகராஜ் ஸ்வாமிகளால் நிர்மாணிக்கப்பட்டு  திருக்குட முழுக்கு கண்டருளிய நிலையில் தற்போது நிகழும் பிலவ வருடம் தை 29  (11.2.22)  வெள்ளிக் கிழமையன்று இரண்டாவது திரு முழுக்கு நிறைவேறியுள்ளது..

நன்றி - கூகிள்

132 அடிகளுடன் மூலஸ்தான விமானம்.. 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் 27 படிகளுடன் கூடிய பிரம்மாண்டமான திருக் கோயில்..



தூண்கள் ஏதும் இல்லாத மகா மண்டபம் அர்த்த மண்டபங்கள் - தங்க மயமான வண்ணங்களுடன்..  கருவறையின் வாசலில் அழகின் அழகாக துவார பாலகர்கள்..

இருப்பினும் கோயிலின் உள்புறம் படங்கள்/  காணொளி எடுப்பதற்கு அனுமதி இல்லை..


பக்தர்களால் எழுதப் பெற்ற நூறு கோடி விட்டல் நாமாவளி புத்தக சாந்நித்தியங்கள் வைக்கப்பட்டிருக்கும்  கீழ் அறையின் மீது நிர்மாணிக்கப்பட்டிருக்கும் மூலஸ்தானத்தினுள் 
கனிவு ததும்பிட ஸ்ரீரங்கனும் ரகுமாயி எனும் ருக்மணித் தாயாரும் நின்ற திருக் கோலத்தில் கருணை மழை பொழிகின்றனர்..


இக்கோயிலின் சிறப்புகளை எல்லாம் விஞ்சியதாக விளங்குவது கோசாலை.. பிரம்மாண்டமான தொழுவம்.. கண்ட மாத்திரத்தில் கண்கள் கலங்கி விட்டன.. ஸ்ரீ தொழுவத்தில் திகழ்ந்த வாசம் என்னை எனது பதினாறு வயதிற்கு இழுத்துச் சென்று விட்டது.. 





கோகுலத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் மேய்த்தருளிய பசுக்களின் வம்சாவளிகளும் இங்கே இருப்பதுடன் புனித பாரதத்தின் அனைத்து வகைப் பசுக்களும் இங்கே பராமரிக்கப்படுவதாக எழுதி வைத்திருக்கின்றார்கள்..
இவைகளைக் கவனித்துக் கொள்வதற்கு மருத்துவர்களும் பணியாளர்களும் இங்கேயே இருக்கின்றனர்..
பால் பொருட்கள் விற்கப்படுவது இல்லை.. 


திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கஸ்வாமியின் அபிஷேகத்திற்கு இருவேளையும் பால் இங்கிருந்தே செல்கின்றது.. இங்கே ஆயிரம் பசுக்கள் இருப்பதாகச் சொல்லப் படுகின்றது.. பதினொரு முறை வலம் வந்தால் கோடி புண்ணியம் என்று இருக்கின்ற நிலையில் நான் மூன்று முறை வலம் செய்ததாக நினைவு..



இந்தப் பசங்களும் இங்கே..

வழியில் என்னை மறித்துக் கொண்ட பசுங்கன்று வாஞ்சையுடன் தன் முகத்தை என் மீது வைத்துக் கொண்டது.. சிறிது நேரம் வருடிக் கொடுத்தேன்..


என் வழி மறித்துக் கொண்ட கன்று
அப்படியும் என்னை விட வில்லை.. மீண்டும் வருகின்றேன் - என்று சொல்லியபடி பால் மணக்கும் அதன் நெற்றியில் முத்தமிட்டபடி விடை பெற்றுக் கொண்டேன்..

மாலை 6:00 மணியளவில் அருகிலிருக்கும் ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகளின் அதிஷ்டான தரிசனம், ஸ்ரீ யோகி ராம்சுரத் குமார் ஸ்வாமிகளின் தியான பீட தரிசனம்..
இதற்கு முன்னரே கைப்பேசி செயல் இழந்து விட்டது..


இரவு 7:30 மணியளவில் 
ஸ்ரீ பாண்டுரங்கனுக்கு மகா ஆரத்தி.. நாம சங்கீர்த்தனம்.. புஷ்பாஞ்சலி.. நிறைவான தரிசனம்..

மகிழ்வான நெஞ்சத்துடன் இல்லம் வந்து சேர்ந்தபோது இரவு 10:30..
சிறிது மின்னேற்றம் செய்த பிறகு  செல்போனை இயக்கினால் WhatsApp ல் காணொளி ஒன்று.. 

அது.. அடுத்த பதிவில்!..
***

ஹரே க்ருஷ்ண
ஹரே க்ருஷ்ண
ஓம் ஹரி ஓம்
***

14 கருத்துகள்:

  1. இந்த இடம் பற்றி அறிவேன்.  எங்கள் உறவினர்கள் பலர் இங்கு குடியேறி உள்ளனர்.  ஒய்வு பெற்ற  என் மாமா அத்தை, வயதான (ஒன்றுவிட்ட) சித்தி, இன்னொரு ஒன்றுவிட்ட சித்தியின் பெண்ணும் கணவரும் என்று அவங்கெயே குடியேறி வருகின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் மேலதிக தகவல்களும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. தரிசனம் நன்று படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி.
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. நல்லதொரு பகிர்வு. எனக்குத் தெரிந்த சிலர் இங்கே குடியிருந்தார்கள். சென்று தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்...

      மிகவும் அமைதியான சூழல் அது.. தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. இந்தக் கோயில் முழுதாகக் கட்டும் முன்னர் இருந்தே இங்கே அடிக்கடி போயிருக்கோம். போதேந்திரரின் அதிஷ்டானம் மட்டுமே முதலில் இருந்தது. அங்கே எங்க மாமனார் பக்கத்து உறவுகள் (அப்பாதுரையின் அம்மா உள்பட) வீடு கட்டிக் கொண்டு இருந்தார்கள். இப்போது எல்லோருமே சென்னை/பெரிய நகரங்களுக்குக் குடி பெயர்ந்து விட்டார்கள். போதேந்திரரின் அதிஷ்டானம் மன நிம்மதியை அளிக்கும். ராம நாமம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்.. வருகையும் மேலதிக தகவல்களும் மகிழ்ச்சி..

      ராம நாமம் ஒலித்துக் கொண்டிருக்கின்றது..
      நன்றியக்கா..

      நீக்கு
  6. விட்டல்தாஸ் மஹராஜ் பிரபலம் அடையும் முன்னர் இருந்தே அவரின் பஜனைகளை அடிக்கடி கேட்டிருக்கோம். இங்கே வந்து அவர் கோயில் கட்ட ஆரம்பித்ததில் இருந்து முழுமை அடையும் வரை அங்கே சென்றும் வந்தோம். சாலையில் இருந்தே பார்த்தால் தெரியும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் உயர்ந்த கோபுரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      அங்கு செல்லும் பாக்கியம் எனக்கு இப்போது தான் கூடியது.. நன்றியக்கா..

      நீக்கு
  7. அடிக்கடி போன கோயில். நினைவுகள் வந்து போகிறது.

    படங்கள் எல்லாம் அழகாய் இருக்கிறது. நினைவுகளை கொண்டு வந்தது.

    கோயில் கோபுரம் பெரிதாக பண்டரிபுரம் போல கட்டிய பின் பக்கத்தில் போய் தொட்டு வணங்க முடியவில்லை.முன்பு மிகவும் பக்கத்தில் பார்ப்போம்.

    மூலவரை தொட்டு வணங்கி வந்து இருக்கிறோம் . சாப்பாடு சாப்பிட்டு இருக்கிறோம். பஜனையில் கலந்து கொண்டு இருக்கிறோம்.
    கோசாலை பார்த்து கொண்டு இருக்கலாம், கன்று உங்களிடம் வந்து போகவிடாமல் செயதது நெகிழ்வு. கன்றுகள் மிக அழகாய் இருக்கும்.

    ஸ்ரீ போதேந்திரரின் அதிஷ்டானம் போய் இருக்கிறோம். அனுமன் சன்னதியில் ராமநாமம் சொல்லி கொண்டே இருப்பார்கள் .
    காலையில் கோதுமை கஞ்சி கொடுப்பார்கள் .

    பதிலளிநீக்கு
  8. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

    இப்போது மூலவருக்கு முன்பாக ஸ்ரீ பாண்டு ரங்கன் ருக்மணி விக்கிரகங்களை வைத்து நாமே நம் கையால் துளசி சாற்றி பாதம் தொட்டு வணங்கும் படிக்கு செய்திருக்கின்றனர்..

    மனதுக்கு நிறைவாக இருக்கின்றது..

    ஸ்ரீ போதேந்திரர் அதிஷ்டானத்தில் ராம நாமம் ஒலித்துக் கொண்டிருக்கின்றது..

    அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..