நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 11, 2022

தை வெள்ளி 5


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று தை (29)
ஐந்தாவது வெள்ளிக் கிழமை..

அருள் தரும் அம்பிகையை சிந்தித்திருப்பதற்கு
ஸ்ரீ துர்க்கை சித்தர் அருளிய ரோக நிவாரண அஷ்டகத்தில் இருந்து ஒரு பாடலும், துக்க நிவாரண அஷ்டகத்தில் இருந்து ஒரு பாடலும்
ஸ்ரீ அபிராமி பட்டர் அருளிய அபிராமி பதிகத்தில் இருந்து இரண்டு பாடல்களும்
இன்றைய பதிவில்!..


திருமகளானாய் கலைமகளானாய்
மலைமகளானாய் துர்க்கையளே
பெருநிதியானாய் பேரறிவானாய்
பெருவலிவானாய் பெண்மையளே
நறுமலரானாய் நல்லவளானாய்
நந்தினியானாய் நங்கையளே
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாப நிவாரணி ஜெய துர்க்கா..


மங்கள ரூபிணி மதி அணி
சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிடச் சடுதியில்
வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கண பாணியன் களிமுகம்
கொண்டநல் கற்பகக் காமினியே
ஜெயஜெய சங்கரி கௌரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி..
-: துர்கை சித்தர் :-


கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும்
ஒரு துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவி
பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!..
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!..


சந்திர சடாதரி முகுந்த சோதரி துங்க
சலசு லோசன மாதவி
சம்ப்ரம பயோதரி சுமங்கலி சுலட்சணி
சாற்ற அரும் கருணாகரி

அந்தரி வராகி சாம்பவி அமர தோத்ரி
அமலை செகசால சூத்ரி
அகில ஆத்ம காரணி வினோத சய
நாரணி அகண்ட சின்மய பூரணி

சுந்தரி நிரந்தரி துரந்தரி வரை ராச
சுகுமாரி கௌமாரி உத்துங்க கல்யாணி
புஷ்பாஸ்திராம் புய பாணி தொண்டர்கட்கு அருள் சர்வாணி

வந்து அரி மலர் பிரமராதி துதி
வேத ஒலிவளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுபநேமி புகழ் நாமி சிவசாமி மகிழ்
வாமி அபிராமி உமையே!...
-: அபிராமி பட்டர் :-

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
***

18 கருத்துகள்:

  1. மிக அருமை.ரோக நிவாரணி/துக்க நிவாரணியான அம்பிகையின் அருளால் அனைவரின் ரோகங்களும் துக்கங்களும் முற்றிலும் நீங்கப் பிரார்த்திக்கிறோம். காலையில் இனிமையான தரிசனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு..

      அன்பின் வருகைக்கும் இனிய பிரார்த்தனைக்கும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
    2. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. காலை நேரத்தை பயனுள்ளதாக்கியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      எங்கெங்கும் நற்பயன்களே நிறையட்டும்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. மனதிற்கு நிறைவைத் தந்த பாடல் அடிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அனைத்துப் பாடலும், அம்பிகையின் அழகான தரிசனங்களும் இன்றைய ஐந்தாவது வெள்ளியை மிகச் சிறப்பாக்கி இருக்கின்றன. பகிர்ந்த பாடல்களை பாடி அன்னையை மனமாற வணங்கி, உலக மக்கள் அனைவரும், ரோகமின்றி, துக்கமின்றி நலமுடன் வாழ பிரார்த்தித்துக் கொண்டேன்.இதில் துக்க நிவாரணி பாடல் முழுவதும் நான் முன்பு தினமும் சொல்வதுதான். அன்னையின் அருள் என்றென்றும் தடையின்றி நமக்கு கிடைத்திட வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      ரோக நிவாரண/ துக்க நிவாரண அஷ்டகத்தின் பாடல்கள் எல்லாம் நெஞ்சுக்கு நிம்மதியைத் தருபவை..

      அபிராமி பதிகங்கள் காலம் நமக்களித்த பொக்கிஷங்கள்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. ரோக நிவாரண அஷ்டகம். இப்போது தேவையான ஒன்று. மனதிற்கு இதம். வாசித்துக் கொண்டேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      அம்பிகையின் நல்லருளால் நாடும் வீடும் சகல ரோகங்களில் இருந்தும் விடுபடட்டும்..

      வருகைக்கு மகிழ்ச்சி..
      நன்றி துளசிதரன்..

      நீக்கு
  7. தைமாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பாக பதிவுகளை வெளியிட்டு வரும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி. பதிவினை மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..