நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 22, 2019

தைப்பூச தரிசனம் 2

பன்னெடுங்காலமாக தமிழ் கூறும் நல்லுலகம்
கொண்டாடி மகிழ்ந்த திருநாட்களுள் ஒன்றாகிய தைப் பூசத் திருநாள் -

எங்களது குலதெய்வக் கோயிலாகிய
உவரி ஸ்ரீ சுயம்புலிங்கஸ்வாமி திருக்கோயிலிலும்
வெகு சிறப்பாக நிகழ்ந்துள்ளது...

வருடம் முழுதும்
சிறப்புறு வைபவங்கள் நிகழ்ந்தாலும் - பெருந்திருவிழாக்களாக
வைகாசி விசாகமும் தைப் பூசமும் திகழ்கின்றன...

திருவிழாவுக்காக கொடியேற்றம் நிகழ்ந்ததிலிருந்து
தைப் பூச நாளை ஒன்பதாம் நாளாகக் கொண்டு தேரோட்டம்..

திருவிழா நாட்கள் தோறும்
ஸ்ரீ மனோன்மணி அம்பிகை உடனாகி ஸ்ரீ சந்த்ரசேகர மூர்த்தி
திருவீதி எழுந்தருளினார்...

திருவிழா நிகழ்வுகளை
இளந்தலைமுறை சிவாச்சார்யார்கள் FB ல் வழங்கியிருந்தனர்...

 அவர்தமக்கு மனமார்ந்த நன்றி...

கிடைத்தவற்றுள்
தேர்ந்தெடுக்கப்பட்ட சில படங்கள் - இன்றைய பதிவில்!...

ஸ்ரீ மனோன்மணி அம்பிகையுடன் ஸ்ரீ சந்த்ரசேகரர்.. 


மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.. (5/90)
-: திருநாவுக்கரசர் :- 






சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை ஆவது நம சிவாயவே.. (4/11) 
-: திருநாவுக்கரசர் :-


இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே.. (4/11)
-: திருநாவுக்கரசர் :- 









நம சிவாயவே ஞானமுங் கல்வியும்
நம சிவாயவே நானறி இச்சையும்
நம சிவாயவே நாநவின்று ஏத்துமே
நம சிவாயவே நன்னெறி காட்டுமே.. (5/90)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

10 கருத்துகள்:

  1. குட்மார்னிங். தைப்பூச தரிசனத் தொடர்ச்சி அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. மனோன்மணி அம்மை சமேத சந்திரசேகர ஸ்வாமி தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  3. படங்கள் எல்லாம் அருமை. தொலைக்காட்சியிலும் மனோமணி அம்மை உடனுறை சந்திரசேகரர் திருத்தேர் எனக் காட்டினார்கள். தேரைச் சுற்றி கருடன் வட்டமிட்டதையும் காட்டினார்கள். உங்கள் ஊர் தானோ? தெரியலை. ஊர்ப்பெயர் போட்டப்போ சரியாப் பார்க்க முடியலை. ஆனாலும் நல்லதொரு தரிசனம் உங்கள் மூலமும் தொலைக்காட்சி தயவிலும் கிடைத்தது.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் மூலம் மனோன்மணி அம்மை சமேத சந்திரசேகர சுவாமியை அருமையான தரிசனம் செய்து கொண்டேன், நன்றி.

    குலதெய்வ கோவில்களிலும் சிறப்பாக பூஜைகள் நடக்கும்.


    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. இதன் முதல் பகுதியும் பார்த்துவிட்டேன் அண்ணா. படங்கள் எல்லாம் மிகவும் அழகாக இருக்கின்றன. மாசில் வீணையும் பார்த்ததும் இப்போது அது நல்ல நினைவில். கல்லூரியில் படித்த போது ஒரு நிகழ்சிக்கு ப்ரேயர் சாங்க் பாட என்னைச் சொல்லியிருந்தாங்க. அப்ப என் மாமி ஹிந்தோள ராகத்தில் மெட்டு அமைத்து கொடுத்தாங்க. அப்படிக் கற்றதால் இன்னும் நினைவில் இருக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
  6. இன்றைக்குத் தேர்ந்தெடுத்துப் போட்டுள்ள முதல் மூன்று பாடல்களும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  7. மனோன்மணி அம்மை சமேத சந்திரசேகர சுவாமியைக் கண்ணாரக் கண்டு தரிசனம் செய்தேன் உங்கள் பதிவின் படங்களின் மூலம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..