நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், செப்டம்பர் 11, 2013

நல்லதோர் வீணை

 மகாகவி சுப்ரமணிய பாரதியார்


தந்தையார் - சின்னசாமி ஐயர். தாயார் - லக்ஷ்மி அம்மாள்.


 11.12.1882 அன்று
பாரதி பிறந்ததனால் பெருமை கொண்ட தலம்
எட்டயபுரம்.

 ஐந்து வயதில் தாயின் மரணம்.
11 வயதிலேயே கவி பாடும் திறன்.
நெல்லை ஹிந்து கல்லூரியில் தொடக்கக் கல்வி
 

14 வயதில் செல்லம்மாளுடன் திருமணம்.
16 வயதில் தந்தையின் மரணம்.

1902ல் காசியில் அத்தை வீட்டில் தங்கி 
ஹிந்து சர்வகலாசாலையில் 
ஹிந்தி சமஸ்கிருதம் பயின்று பட்டம் பெற்றார்.

1905 முதற்கொண்டு தீவிர அரசியல்.

கப்பலோட்டிய தமிழன் திரு.வ.உ.சிதம்பரனார்., 
திரு. சுப்ரமணிய சிவா 
ஆகியோருடன் நெருங்கிய நட்பு.

1908 முதல் 1918 வரை புதுவை மண்ணில் வாசம். 
அங்கே தான் மகாகவி பகவத்கீதைக்கு உரை எழுதினார். 
கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் 
போன்றவையுடன் எழுச்சிமிகு தேசியப் பாடல்கள் பிறந்தன.


புதுவையில் இருந்து தமிழ்நாட்டுக்குள் நுழையும் போது
பிரிட்டிஷ் அரசு சிறைப் பிடிக்க - 
ஒரு மாதகாலம் சிறைவாசம்.

பாரதியார் - காந்திஜி சந்திப்பு நிகழ்ந்தது  - 
சென்னையில், மூதறிஞர் ராஜாஜி அவர்களின் இல்லத்தில்.

நன்றி -  விக்கிபீடியா
1920ல் சென்னையில் சுதேசமித்திரன் நாளிதழில் 
உதவி ஆசிரியர் பணிக்குச் சேர்கின்றார் பாரதியார்.


திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி திருக்கோயிலின் யானைக்கு 
பழம் கொடுக்கும் போது  - இடறப்படுகின்றார். 

அந்த அதிர்ச்சியுடன்  - வயிற்றுக் கோளாறும் சேர்ந்து கொள்ள 
இறைவனடியில் ஐக்கியமாகின்றார்.

 
தமிழ்த் தாய் கண்ணீர் சிந்திய நாள் - 11.9.1921.

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ!
சொல்லடி சிவ சக்தி - எனைச் 
சுடர் மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்!..

வல்லமை தாராயோ - இந்த 
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!..
சொல்லடி சிவ சக்தி - நிலச்
சுமையென  வாழ்ந்திடப் புரிகுவையோ!..

விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்!..
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்!..

தசையினைத் தீச்சுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங் கேட்டேன்!..
அசைவறு மதிகேட்டேன் - இவை 
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?..


என்றும் நிலைத்திருக்கும்
எங்கள் பாரதியின் புகழ்!..

8 கருத்துகள்:

  1. மிகவும் அருமையான பகிர்வு.

    பாரதியார் கைப்பட எழுதிய கடிதம் சூப்பர்.

    பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு

  2. பாரதியாரின் வாழ்க்கை சுருக்கத்தை முக்கிய நிகழ்வுகளுடன் பதிவு செய்ததற்கு மிக்க நன்றி. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் மேலான பாராட்டுரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  3. பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்பு அருமை. அழகாய் கோர்வையாய் வெளியிட்டிருக்கிறீர்கள்.
    நன்றி பகிர்விற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  4. பாரதியின் பாங்கினைப் பகிர்ந்த அருமையான
    பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் வருகை தந்து பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..