நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 09, 2013

ஸ்ரீவிநாயக சதுர்த்தி

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்திமகன் தனை ஞானக் கொழுந்தினை 
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே!..
                                                                                   - திருமந்திரம்.


ஆனைமுகப் பெருமானைப் போற்றி வணங்கும் திருநாளான சதுர்த்திப் பெரு விழா கோலாகலமாக நாடெங்கும் கொண்டாடப்படுகின்றது. 

இல்லந்தோறும் களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகளை வாங்கி வந்து வண்ணக் குடையுடன் மனைப்பலகையில் வைத்து, வஸ்திரம் சாத்தி -  திலகம் சூட்டி,


எருக்கம் பூ மாலையுடன் அருகம்புல் மல்லிகை ரோஜா போன்ற நறு மலர்களால் அலங்கரித்து அர்ச்சித்து, 

கொழுக்கட்டை மோதகம், அவல், பொரி, கடலை, சுண்டல், வடை, பாயசம், வாழைப்பழம், திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்பு, தாம்பூலம் என அன்புடன் சமர்ப்பித்து தூப தீபங்களுடன் போற்றி வணங்குகின்றோம். 

பற்பல நலங்களும் வளங்களும் அருள வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்கின்றோம்.  


சிறுவர் முதல் பெரியவர் வரை ஆனந்தம் கொண்டு பெருமானை வணங்கி மகிழ்கின்றனர். 

மூன்றாம் நாளன்று மங்கல ஆரத்தியுடன் மீண்டும் பூஜை செய்து விநாயகப் பெருமானை   ஆற்றிலோ குளத்திலோ கரைத்து விட்டு, மீண்டும் அடுத்த விநாயக சதுர்த்தியை எதிர் நோக்குகின்றோம்!..

இல்லத்திலும் உள்ளத்திலும் நிறைந்திருக்கும் விநாயகப் பெருமான் - பதினாறு திருப்பெயர்களுடன் விளங்குகின்றார். 

வக்ர துண்ட மஹாகாய ஸூர்ய கோடி ஸ்மப்ரப 
அவிக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஸு ஸர்வதா 

ஸுமுகச் ச ஏகதந்தச் ச கபிலோ கஜகர்ணக: 
லம்போத்ரச் ச விகட: விக்னராஜ: விநாயக: 
தூமகேது: கணாத்யக்ஷ: பாலசந்த்ர: கஜானன: 
வக்ர துண்ட: சூர்ப்ப கர்ணக: ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: 

ஷோடசைதாநி நாமாநி ய: படேத் ச்ருண்யாதபி 
வித்யாரம்பே விவாஹேச ப்ரவேச நிர்கமே ததா 
ஸ்ங்க்ராமே ஸர்வ கார்யேஷு விக்ன நஸ்தஸ்ய ந ஜாயதே.

-எனும் ஸ்லோகத்தினைச் சொல்லி விநாயகப் பெருமானைத் தியானிக்க,  எடுத்த காரியங்கள் எவ்வித இடையூறும் இன்றி நிறைவேறும் என்பது நம்பிக்கை.

எல்லா நலன்களையும் அருளும் விநாயகப்பெருமான், 

கணபதி அக்ரஹாரம்
முதல் தலமாகிய - கணபதி அக்ரஹாரத்தில் மகாகணபதி , 

உச்சிப் பிள்ளையார்
திருச்சி மலைக் கோட்டையில் உச்சிப் பிள்ளையார்,  மாணிக்க விநாயகர் ,


பிள்ளையார் பட்டியில் கற்பக விநாயகர் , உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் , காளஹஸ்தி மற்றும் விருத்தாசலத்தில் ஆழத்துப் பிள்ளையார் , 

திரு அண்ணாமலையில் செந்தூர விநாயகர், மாமதுரையில் முக்குறுணி விநாயகர்,  திருச்செந்தூரில் தூண்டுகை விநாயகர், 

திருவலஞ்சுழி
திருவலஞ்சுழியில் ஸ்வேத விநாயகர் , ஆலங்குடியில் கலங்காமல் காத்த விநாயகர், திருவையாற்றில் ஓலமிட்ட பிள்ளையார் , 

திருப்புறம்பியம்
திருப்புறம்பியத்தில் பிரளயம் காத்த விநாயகர், சுவாமிமலையில் நேத்ர விநாயகர் ,

வாதாபி கணபதி
திருச்செங்காட்டங்குடியில் வாதாபி கணபதி, வேதாரண்யத்தில் வீரஹத்தி விநாயகர், திருஆரூரில் மாற்றுரைத்த விநாயகர், திருக்கடவூரில் கள்ள வாரணர், 

திருநாரையூர்
திருநாரையூரில் பொள்ளாப் பிள்ளையார் , நாகையில் நாகாபரணப் பிள்ளையார்,
ஸ்ரீ வெள்ளைப் பிள்ளையார், தஞ்சை
தஞ்சையில் வெள்ளைப் பிள்ளையார், ஜோதி விநாயகர், ஆனந்த விநாயகர், குடந்தையில் உச்சிப் பிள்ளையார், இலுப்பையடிப் பிள்ளையார், கரும்பாயிரம் கொண்ட விநாயகர், சூரியனார் கோயிலில் கோள் தீர்த்த விநாயகர், புதுவையில் மணற்குள விநாயகர்,

மணற்குள விநாயகர்
- என்றெல்லாம் திருப்பெயர்கள் கொண்டு விளங்கி, மக்களின் குறைதீர்த்து அருளுகின்றார்.

இன்னும் எத்தனையோ தலங்கள்.. எத்தனையோ திருப்பெயர்கள்!..


எல்லா தலங்களையும் தரிசிக்க -  பெருமான் நமக்கு வரம் அளிக்க வேண்டும்!..

எளியோர்க்கு எளியோனாக இரங்கி வரும் எம்பெருமானே!.. 
எங்களுடைய குற்றங்களை எல்லாம் பொறுத்தருள்க!..
எல்லாக் குறைகளையும் நீக்கி எல்லாரையும் காத்தருள்க!..
உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம்!..

மூஷிக வாகன மோதக ஹஸ்த 
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மகேஸ்வர புத்ர 
விக்ன விநாயக பாதநமஸ்தே!..

ஓம் கம் கணபதயே நமஹ:

14 கருத்துகள்:

  1. பதிவு அருமை. பாராட்டுக்கள். இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களது வருகைக்கும் வாழ்த்தினுக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  2. சிறப்பான பகிர்வு ஐயா...

    இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு.தனபாலன்.. தங்களது வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  3. அழகிய படங்களுடன் மனம் கவர்ந்த பகிர்வு ! உங்களுக்கும் எங்கள்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் ஐயா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்புடையீர்!.. வாழ்க வளமுடன்!.. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு
  5. சிறப்பான பகர்வு...

    நல்வாழ்த்துகள்....அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக.. வெற்றிவேல்!.. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பின் நன்றிகள்!..

      நீக்கு
  6. எனக்கும் வாழ்வில் கிட்டுமோ இப்படிக் கண்ணுறவும் தரிசிப்பதற்கும்
    என்றிருந்த ஏக்கமதை எப்படி அறிந்தீர்கள் ஐயா!...

    அத்தனை திருத்தலத்து நாயகரின் திவ்யத் திருத்தோற்றங்கள்!
    பத்தனைத்தேடிப் பரம்பொருளை வலைக்குக் கூட்டிவந்து காட்டிவிட்டீர்கள்!
    அழகு! அருமை!
    விநாயகர் அருள் எல்லோருக்கும் கிடைத்திட வேண்டுகிறேன்!

    வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புச் சகோதரி!.. சாதித்தது மிகவும் கொஞ்சமே!.. இன்னும் நிறைய தகவல்களை அன்பு நெஞ்சங்களுக்கு வழங்கிட விநாயகப்பெருமான் நல்லருள் புரிவாராக!..

      நீக்கு
  7. எத்தனையோ தலங்கள்..
    எத்தனையோ திருப்பெயர்கள்!..தாங்கி
    உள்ளங்களில் நிறைந்து
    இல்லங்களில் இனிய பூஜைகள்
    ஏற்று அருளும் முதற் கடவுளாம்
    விநாயகப்பெருமான் பற்றிய
    அற்புதப்பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  8. ஐயனின் ஆசியும் பெரியோர்களின் நல்வாழ்த்தும் நம் தளத்தினை வழி நடத்துவதாக!.. என்றும் அன்புடன்,

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..