ஸ்ரீ சாஸ்தா பஞ்சரத்னம்
சபரிமலையில் ஸ்வாமியின் சந்நிதி நடை திறந்து விழாக்கோலம் கொண்டிருக்கும் நன்னாள். ஸ்ரீதர்மசாஸ்தா மணிகண்டனாக அவதரித்த பங்குனி உத்திர திருநாளுக்குப் பின் சந்நிதானத்தில் விசேஷ வழிபாடுகள் நிகழும் காலம் சித்திரை விஷு எனப்படும் புண்ய தினம்.
இந்த வேளையில், ஸ்ரீ ஐயப்பனை வழிபட்டு சகல வளத்தையும் அடைவோம்.
இந்த வேளையில், ஸ்ரீ ஐயப்பனை வழிபட்டு சகல வளத்தையும் அடைவோம்.
ஸ்ரீ ஹரிஹரபுத்திரன் |
சாஸ்தா - சாத்தன் என்றும் ஐயனார் என்றும் வழங்கப்படும் திருப்பெயர்கள் ஸ்ரீஐயப்ப ஸ்வாமியைக் குறிப்பவை. சாத்தன் என்றால் தலைவன் என்பது பொருள். சாத்தன் எனும் சொல்லே வடமொழியில் சாஸ்தா எனப்படுகின்றது.
ஸ்ரீ ஐயப்பன் - சிவபெருமானின் புத்திரன் என்பதைக் குறித்து திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருப்பாசுரம் இதோ...
பார்த்தனுக்கு அருளும்வைத்தார் பாம்பரை யாடவைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதங்
கூத்தொடும் பாடவைத்தார் கோளராமதிய நல்ல
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற்றூரனாரே!... (4/32/4)
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதங்
கூத்தொடும் பாடவைத்தார் கோளராமதிய நல்ல
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற்றூரனாரே!... (4/32/4)
- திருநாவுக்கரசர் தேவாரம்.
தர்ம சாஸ்தா, கல்யாண சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ஞான சாஸ்தா, மகா சாஸ்தா, மோஹன சாஸ்தா, வீர சாஸ்தா, வேத சாஸ்தா - என விளங்கும் பூதநாத சுவாமியே!
உன்னருளால் எங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெருக வேண்டும்!...
உன்னருளால் எங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெருக வேண்டும்!...
ஸ்ரீ சாஸ்தா பஞ்ச ரத்னம்
லோகவீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரக்ஷாகரம் விபும்
பார்வதீ ஹ்ருதயா னந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் -1
விப்ர பூஜ்யம் விச்வ வந்த்யம் விஷ்ணு சம்போ ப்ரியம் ஸுதம்
க்ஷிப்ர ப்ரஸாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் - 2
மத்த மாதங்க கமணம் காருண்யாம்ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் - 3
அஸ்மத் குலேச்வரம் தேவம் அஸ்மத் சத்ரு விநாசனம்
அஸ்மதிஷ்ட ப்ரதா தாரம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் - 4
பாண்ட்யேச வம்ச திலகம் கேரளே கேளி விக்ரஹம்
ஆர்த்தத்ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் - 5
பஞ்ச ரத்னாக்ய மேதத்யோ நித்ய ஸுத்தப் படேந் நர:
தஸ்ய ப்ரசன்னோ பகவான் சாஸ்தா வசதி மானஸே:
ஸ்ரீ சாஸ்தா நமஸ்கார ஸ்லோகம்
பூதநாத ஸதாநந்த ஸர்வபூத தயாபர
ரக்ஷ ரக்ஷ மஹாபாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நம:
ஸ்ரீ சாஸ்தா தியான ஸ்லோகம்
ஆச்யாம கோமள விசால தனும் விசித்ரம்
வாஸோ வஸானம் அருணோத் பல வாம ஹஸ்தம்
உத்துங்க ரத்ன மகுடம் குடிலாக்ர கேசம்
சாஸ்தாரம் இஷ்டவரதம் சரணம் ப்ரபத்யே:
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..