நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 08, 2020

மார்கழி தரிசனம் 23

தமிழமுதம்

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற் கொள்வது..(262) 
***

அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை 
திருப்பாடல் - 23

சீரிய சிங்காதனத்து இருக்க வருகவே..
மாரிமலை முழைஞ்சில் மன்னிக்கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!..
***

ஆழ்வார் அமுதம்

ஸ்ரீ கள்ளழகர் 
ஸ்ரீ நின்ற நாராயணப்பெருமாள் - திருத்தங்கல் - சிவகாசி. 
வண்கையான் அவுணர்க்குநாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண்கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்தவலத்தினான்
எண்கையான் நியமத்துள்ளான் இருஞ்சோலை மேவிய எம்பிரான்
திண்கைம்மா துயர்தீர்த்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சே..(1022)
-: திருமங்கையாழ்வார் :-


ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
திரு ஆலவாய் - திருக்கடம்பவனம்
மதுரையம்பதி


மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மடமானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநாயகன் நால்வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொரும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே.. (3/120)
-: ஞானசம்பந்தப்பெருமான் :-


வேதியா வேதகீதா விண்ணவர் அண்ணா என்றென்று
ஓதியே மலர்கள் தூவி ஒருங்கி நின்கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியஞ்சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே..(4/62)
-: திருநாவுக்கரசர் :-
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை



ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையான் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்... 15


ஸ்ரீ செண்பகவல்லியம்மன் உடனாகிய ஸ்ரீ பூவன நாதர்
கோயில்பட்டி 
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துஉடையான்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டிடையின்
மின்னப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி யவன்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்... 16
 
***

தேவி தரிசனம்



தனம்தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!.. (69)
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
***

8 கருத்துகள்:

  1. அப்பன் பூவனநாதர், அம்மை செண்பகவல்லித்தாயார் தரிசனத்துக்கு நன்றி.

    சுவைத்தேன், ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. என்னடா, நம்மூர்க்காரங்களாட்டமா இருக்காங்களேனு பார்த்தேன். அவங்களே தான். செண்பகவல்லியையும், பூவணநாதரையும் முதல் முறையா தரிசனம் செய்கிறேன். அனைத்துப் பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. சிவகாசியில் இருந்த போது திருத்தங்கல் அடிக்கடி போவோம். கோவில்பட்டியில் உறவினர் வீடுகள் போகும் போது செண்பகவல்லி அம்மனையும் தரிசனம் செய்வோம். தம்பிக்கு செண்பகவல்லி அம்மன் கோவிலில் திடுமணம் நடந்தது. அண்ணன், சித்தப்பாக்கள் எல்லோரும் இருந்த ஊர் கோவில்பட்டி.

    எங்கள் ஊர் அம்மை, அப்பனை தரிசனம் செய்து விட்டேன்.இங்கு உற்சவத்திற்கு வெளியே வரும் போதுதான் நன்றாக தரிசனம் செய்யலாம்.
    கோவிலுக்கு போகவே முடியவில்லை.

    அருமையான மார்கழி தரிசனம்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அருமையான திருப்பாவை, திருவெம்பாவை தரிசனங்கள் , எங்கள் ஆலவாய் அழகனையும், மீனாட்சி அம்மையையும்,
    செண்பகவல்லித் தாயார் உடனுறை பூவண நாதர் தரிசனம்
    மிக அற்புதம். திருத்தங்கல் அப்பனும் பச்சை வண்ணம்.
    தாய் மீனாட்சியும் பச்சை வண்ணம்.
    புதனுக்கு வேண்டிய வண்ணம் பச்சை.
    அனைவரையும் தரிசிக்க வைத்த உங்களுக்கு மிக நன்றி
    அன்பு துரை.

    பதிலளிநீக்கு
  5. அழகிய தரிசனம் நன்று ஜி

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..