நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 07, 2020

மார்கழி தரிசனம் 22

தமிழமுதம்

காலங் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருதுபவர்..(485)
***

அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 22


அங்கண் மாஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்துதலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற்போல்
அங்கண்ணி ரண்டுங்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள் மேல்சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்!..
***

ஆழ்வார் அமுதம்

ஸ்ரீ நித்யகல்யாணப்பெருமாள் - திருவிடந்தை 
பார்த்தர்க்காய் அன்று பாரதம் கைசெய்திட்டு வென்ற பரஞ்சுடர்
கோத்தங்காயர் தம்பாடியில் குரவைபிணைந்த வெங்கோவலன்
ஏத்துவார்தம் மனத்துளான் இடவெந்தை மேவிய எம்பிரான்
தீர்த்த நீர்த்தடஞ் சோலைசூழ் திருவேங்கடம் அடைநெஞ்சே..(1021)
-: திருமங்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
ஸ்ரீராமேஸ்வரம்


தேவியை வவ்விய தென்னிலங்கைத் தசமாமுகன்
பூவியலும் முடி பொன்றுவித்த பழிபோயற
ஏவியலுஞ் சிலையண்ணல் செய்த இராமேச்சுரம்
மேவிய சிந்தையினார் கள்தம் மேல்வினை வீடுமே..(3/10)
-: ஞானசம்பந்தப் பெருமான் :-



கோடிமா தவங்கள் செய்து குன்றினார் தம்மை எல்லாம்
வீடவே சக்கரத்தால் எறிந்துபின் அன்பு கொண்டு
தேடிமால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை
நாடிவாழ் நெஞ்சமே நீ நன்னெறி யாகுமன்றே.. (4/61)
-: அப்பர் ஸ்வாமிகள் :-

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை


ஸ்ரீ பர்வர்தவர்தனி உடனாகிய ஸ்ரீ இராமநாதஸ்வாமி 
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவு வார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பப்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.. 13

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதித் திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்... 1
***

தேவி தரிசனம்


பாரும் புனலும் வெங்காலும் படர்விசும்பும்
ஊரும் உருகுசுவை ஒளிஊறுஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீரடிக்கே
சாரும்தவம் உடையார் படையாத தனமில்லையே!.. (068)
-: அபிராமிபட்டர் :- 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

12 கருத்துகள்:

  1. ஸ்ரீமுஷ்ணம் பூவராஹப் பெருமாள்னு நினைச்சேன். திருவிடந்தை பார்த்தது இல்லை. கடைசிப் படம் தேவி தரிசனம் அருமையோ அருமை! "காதார் குழையாட" பிடிச்ச திருவெம்பாவை!

    பதிலளிநீக்கு
  2. ருசித்தேன், ரசித்தேன், தரிசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. நித்திய கல்யாண பெருமாள் தரிசனமும் பர்வதவர்த்தினி தரிசனமும் மிக அருமை..

    பதிலளிநீக்கு
  4. மகபேறு கிட்டாமல் வருந்துபவர்களுக்கு தேவிய வவ்விய என்று ஆரம்பிக்கும் இந்த தேவார பாடலை பாட சொல்வார்கள் என் மாமனார், மகபேறு உண்டானபின் நல்லபடியாக பிறக்கவும் பாடச் சொல்வார்கள். திருவெண்காடு பாடல், திருச்சிரப்பள்ளி பாடல்கள் பாட அவர்கள் கைபட எழுதி கொடுப்பார்கள்.

    இறைவன் தரிசனம் மிக அருமையாக இருந்தது இன்று.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு நன்றி...

      தேவாரப் பதிகங்களில் பாராயணப் பலன் சொல்வார்கள் சான்றோர்....

      அது முற்றிலும் உண்மை..
      அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி...

      நீக்கு
  5. சிறப்பான தரிசனம். தொடரட்டும் பக்திப் பரவசம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களது கருத்துரைக்கு நன்றி...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..