நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 04, 2020

மார்கழி தரிசனம் 19

தமிழமுதம்

அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை..(036) 
***

அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 19


குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்தனைப் போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்!..
***

ஆழ்வார் அமுதம்

ஸ்ரீ கலியுக வரதராஜப்பெருமாள்
அரியலூர் 
கழல் தொழுதும் வா நெஞ்சே கார்கடல் நீர்வேலை
பொழிலளந்த புள்ளூர்திச் செல்வன் எழிலளந்தங்கு
எண்ணற்கரியானை எப்பொருட்கும் சேயானை
நண்ணற்கரியானை நாம்..(2288)
-: பேயாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
***

சிவ தரிசனம்
திருந்துதேவன்குடி
(தற்காலத்தில் நண்டாங்கோயில்)

இத்தலத்தில் நண்டு வழிபட்டு உய்ந்ததாக ஐதீகம்.
இன்று இவ்வூர் இல்லை..
திருக்கோயில் மட்டுமே உள்ளது..


ஸ்ரீ கற்கடகேஸ்வரர்
கடக ராசியினருக்கு உகந்த கோயில் என்றறியப்படுகின்றது..
கண்நோய் தீர்க்கும் திருத்தலம்.. 
ஸ்வாமியை தாமரை மலர்கொண்டு வழிபடுவது சிறப்பு..



கும்பகோணத்தை அடுத்த திருவிசநல்லூரில் இருந்து
இரண்டு கி.மீ தொலைவில் வயல்வெளிகளுக்கு
நடுவிலுள்ளது இத்திருக்கோயில்..

ஸ்ரீ கற்கடகேஸ்வரர்
திருந்துதேவன்குடி 
மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை
திருந்துதேவன் குடித்தேவர் தேவெய்திய
அருந்தவத்தவர் தொழும் அடிகள் வேடங்களே..(3/25)
-: ஞானசம்பந்தப் பெருமான் :- 


திருக்கரத்தில் அமிர்த கலசத்துடன்
ஸ்ரீமஹாவிஷ்ணு
திருந்துதேவன்குடி  
செவிகள் ஆர்விப்பன சிந்தையுட் சேர்வன
கவிகள் பாடுவ்வன கண் குளிர்விப்பன
புவிகள் பொங்கப் புனல் பாயுந் தேவன்குடி
அவிகள் உய்க்கப்படும் அடிகள் வேடங்களே..(3/25)
-: ஞானசம்பந்தப் பெருமான் :- 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை




அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுது என்றெல்லாமும் 
சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னமும் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்!.. 7

கோழி சிலம்பச் சிலம்பும் குருகுஎங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.. 8
***

தேவி தரிசனம்

ஸ்ரீ அருமருந்து நாயகி - திருந்துதேவன்குடி 
இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்ச்ல் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒருகாலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே..(054)
-: அபிராமிபட்டர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

10 கருத்துகள்:

  1. அரியலூர் கலிவரதரை இரு ஆண்டுகள் முன்னர் தான் தரிசிக்கும் பேறு கிட்டியது. நண்டாங்கோயில் பற்றித் தெரியாது. கேட்டதில்லை. அடியக்கமங்கலம் பக்கம் ஓர் தேவங்குடி உள்ளது. அது வேறே, இது வேறே தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு நல்வரவு...

      கும்பகோணத்துக்குப் பக்கத்தில் திருவிசநல்லூருக்கு அருகில் உள்ளது
      ஸ்ரீ கற்கடேஸ்வரர் திருக்கோயில்...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. தரிசித்தேன்.   குறிப்பிட்டிருக்கும் எந்தக்கோவிலும் தெரியாது.   போனதில்லை.(ரொம்பப் பெருமைதான் என்று முகவாயையும், தோள்பட்டையையும் இணைக்க வேண்டாம்!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      தங்களுக்கு விரைவில் இத்தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு கிட்டுவதாக...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. அன்பு துரை,
    அதிசயமான திருத்தலங்கள்.
    நண்டாங்கோயில் என்று அழைக்கப்படும்
    ஈசனார் கோவில்.
    கூடவே அருமையான ஈஸ்வரி.
    பேரனுக்குக் கடக ராசி. சளித்தொல்லையால் அவதிப் படுகிறான்.
    அவனுக்காக தெய்வத்திரு கற்கடேஸ்வரரையிம் அன்னை

    அருமருந்து நாயகியையும் பிரார்த்திக்கிறேன்.
    கலியுக வரதன் மிகப் புதுமை.
    எல்லாத் தெய்வங்களும் எல்லொரையும் காக்க வேண்டும்.
    மிக மிக நன்றி மா துரை.

    பதிலளிநீக்கு
  4. இன்றைய தரிசனமும் நாங்கள் அடிக்கடி வீட்டுக்கு வரும் உறவினர்களை அழைத்துக் கொண்டு செல்லும் கோவில்.

    கலியபெருமாள் கோவில் தரிசனம் திருந்துதேவன் குடி எல்லாம் போய் இருக்கிறோம். பிரசித்தி பேறமல் பாழ் அடைந்து கிடந்த போதும் கும்பாபிஷேகம் ஆகி கூட்டம் நிறைய வரும் போது போய் இருக்கிறோம். மாயவரத்திலேயே இருந்து இருக்கலாம் என்று தினம் நினைக்க வைக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. முதல் படம் ரொம்பவே அழகு....

    நல்ல பகிர்வு. தொடரட்டும் பக்தி உலா.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..