நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை
வியாழக்கிழமை
நன்றி ஐயப்ப மலர்
சிவாலயங்களை நோக்கியுள்ள
ஸ்ரீ சாஸ்தா கோயில்கள்
ஶ்ரீ பரசுராமர் ஸ்தாபித்த
குளத்துப்புழை,
ஆரியங்காவு,
அச்சன்கோவில்,
சபரிமலை..
இந்த நான்கு சாஸ்தா கோயில்களும் பூகோள ரீதியாக தமிழ்நாட்டில் உள்ள நான்கு சிவாலயங்களை நோக்கி சாந்நித்யம் கொண்டிருப்பது வியப்புக்குரிய செய்தி.
குளத்துப்புழை பாலகன்
பாவநாசம் சிவனை நோக்கியும்,
ஆரியங்காவு ஐயன்
திருக்குற்றால நாதரை நோக்கியும்,
அச்சன்கோயில் அரசு
ஸ்ரீ சங்கர நாராயணரை நோக்கியும்,
சபரிகிரி வாசன்
சதுரகிரி ஸ்ரீ சுந்தர மகாலிங்கத்தை நோக்கியும் சந்நிதி கொண்டு இருக்கிறார்கள்.
இதில் கூறப்பட்டுள்ள சிவாலயங்கள் பழைமையானவை என்றால், அந்த அளவுக்குப்
பழைமையானவை சாஸ்தாவின் சந்நிதிகள்...
இது போன்ற பூகோள அமைப்பு, வேறு எங்கும் காணப்படவில்லை.
இத்தகைய அமைப்பு என்பது ஆழமான ஆகம, யோக, தத்துவ ரகசியங்களைக் கொண்டது.
இந்த நான்கு சாஸ்தா கோயில்களில் நாம் மேற்கொள்ளும் வழிபாடு என்பது, முடிவில் அது சிவானுபவத்தில் நம்மை லயம் அடையச் செய்யும் பயணமாக அமைகிறது.
மலையாள தேசத்தை ஸ்தாபித்த பரசுராமர் தமது தவத்திற்குக் காவலாக சாஸ்தாவை நான்கு கோவில்களில் ஸ்தாபிக்கிறார் என்று அறிகின்றோம்.
அவை பூமியின் சக்தி கேந்திரங்களாக, சக்தி நாளங்களாக, (energy grid) அடர்ந்த மலைத் தொடர்களில் அமைந்துள்ளன.
மலைத்தொடர் = முதுகெலும்பு
கோவில்கள் = சக்கரங்கள்
நோக்கும் திசை = சக்தி ஓட்டம்
இந்த அமைப்பு சொல்லும் மிகப் பெரிய ரகசியம் ஐயனின் வழியில் சென்று சிவம் என்ற இலக்கை அடைவது தான்!..
ஐயனின் துளசி மாலை அணிவது, விரதம் மேற்கொள்வது, அன்னதானம் செய்வது, இருமுடி தாங்குவது
மலை ஏற்றம், பதினெட்டாம் படி தரிசனம், நெய் அபிஷேக சமர்ப்பணம் மற்றும் சரணாகதி
இவை யாவும் எதைக் குறிக்கின்றன?..
இவை -
உடல் → மனம் → ஆத்ம சுத்தி ->> தத்துவமசி
- என்பதனைக் குறித்த பயணம்...
அந்த அளவில் பயணம் தொடர்கின்றது...
சரணம் ஐயப்பா
***


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..