இன்று சர்வதேச புகையிலை எதிர்ப்பு நாள்!..
புகைப் பழக்கம் உள்ளவர்களால் சுற்றுச்சூழல் கெடுகின்றது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புகைப்பழக்கத்தால் நுரையீரலில் புற்று நோய் ஏற்படுகின்றது என்று இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட ஆண்டு - 1950.
புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பேர்களுள் - இந்தியாவில் இருந்து வருடந்தோறும் ஐந்து லட்சம் பேருக்கு மேல் பரலோகத்திற்குப் பயணமாகின்றார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புகைப்பவர்களிடமிருந்து தள்ளி நிற்பதை விட தூரமாகச் சென்று விடுவது நலம்..
சிகரெட் புகையில் அடர்ந்திருக்கும் கார்பன் மோனாக்ஸைடு மிகக் கொடியது.
சிறு துளி நிகோடின் - ஒரு பூனையை முடித்து விடுகின்றது என்பது ஆய்வு..
சிகரெட் புகையினால் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன என்கின்றார்கள் .
என்றாலும் திருந்துவோரைக் காணோம்!..
புகைப்பவர்களின் நுரையீரல் கெட்டுப் போய் விடுகின்றது.
அதனால் சுவாச பிரச்னைகள் - மற்றவர்களுக்கும் பரவுகின்றது.
எனவே பச்சிளங்குழந்தைகளை அவர்களிடம் அனுமதிக்காமல் இருப்பது சாலச் சிறந்தது.
புகையிலையினால் என்ன நன்மை என்பது தெரியவில்லை..
அது விளைவிக்கும் கேடுகள் பற்பல..
எதையும் அறியாமல் புகையின்பத்தில் (!?) ஆழ்ந்து தமக்குத் தாமே தீ மூட்டிக் கொள்வதால் -
தம்மைச் சேர்ந்தவர்களையும் பெருந்துன்பத்துக்கு ஆளாக்குகின்றனர்.
புகையிலையினுள் புதைந்திருக்கும் நிகோடின் புகைப்பவர்களைப் புதைத்து விடுகின்றது.
எரிந்து புகையும் சிகரெட் புகைப்பவனையும் எரித்து விடுகின்றது.
காசு கொடுத்து புகையிலைப் பொருட்களுடன் புற்று நோயையும் வாங்குவதில் படித்தவனும் படிக்காதவனும் சிறப்பிடம் பெறுகின்றனர்.
ஒவ்வொரு சிகரெட்டும் - புகைப்பவனின் வாழ்நாளில் 18 நிமிடங்களைக் குறைக்கின்றது என்பது கூடுதல் செய்தி..
புகைப்பவனை நவீன எரிமேடைக்கு அனுப்பி வைப்பதைத் தவிர வேறொரு நல்லதையும் - புகையிலை செய்வதில்லை..
எந்த ரூபத்தில் பயன்படுத்தினாலும் -
வாய், கன்னம், தொண்டை, நுரையீரல், கல்லீரல், உணவுக்குழாய்,
வயிறு, சிறுநீரகம் - என முழு உடலையும் சீரழித்து சிதைத்து -
சிதைக்கு அனுப்பி வைக்கும் வல்லமை பெற்றது - புகையிலை!..
சிகரெட் புகைப்பதனால் -
பக்கவாதம், ஒவ்வாமை, காசநோய், மலட்டுத் தன்மை, மாரடைப்பு - ஆகிய அதிரடிகள் நிச்சயம்!..
இவற்றுக்கும் மேலாக -
வாய், நுரையீரல்,சிறுநீரகம் - முதலான உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படுவது உறுதி!..
தற்காலத்தில் - ஆண்களுக்கு இணையாக பெண்களும் புகைப்பிடிக்கத் தொடங்கியிருப்பது - குறிப்பிடத்தக்கது..
இத்தகைய புகையிலையின் தாயகம் - தென் அமெரிக்கா!..
இதன் காலம் கி.மு. 6000 என்கின்றார்கள்..
இந்த கொடூரத்தை - அங்கிருந்த பழங்குடி மக்களிடமிருந்து கைப்பற்றி - ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப் படுத்திய பெருமை -
இந்தியாவுக்குக் கடல் வழி கண்டு பிடிக்கின்றேன் என்று கிளம்பி - வழி தவறிப் போன கொலம்பஸுக்கு உரியது.
அந்தவகையில் கொலம்பஸ் செய்த கேடுகளுள் இதுவும் ஒன்று என்பர்.
நமது நாட்டில் இந்த புகையிலையை அறிமுகம் செய்தவர்கள் - ஐரோப்பியர்.
ஆயினும், அக்காலத்திலேயே - புகையிலையின் தீங்குகளை அறிந்திருந்தனர்.
அதனால் தான் - மற்ற நாடுகளிலும் பரப்பி விட்டார்கள் போலிருக்கின்றது!..
புகைப் பழக்கத்தை விட்டுத் தொலைப்பதற்கு உறுதுணையாக இருப்பது - உலர் திராட்சை.
அவ்வப்போது உலர் திராட்சையை சுவைப்பதனால் புகைக்க வேண்டும் என்ற உணர்வு கட்டுப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும் - புகைப்பதால் இரத்தத்தில் கலக்கும் நிகோடினை - உலர்திராட்சை கரைத்து விடுகின்றது என்றும் கண்டறிந்திருக்கின்றனர்.
புகைப் பழக்கம் உள்ளவர்களால் சுற்றுச்சூழல் கெடுகின்றது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புகைப்பழக்கத்தால் நுரையீரலில் புற்று நோய் ஏற்படுகின்றது என்று இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட ஆண்டு - 1950.
புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பேர்களுள் - இந்தியாவில் இருந்து வருடந்தோறும் ஐந்து லட்சம் பேருக்கு மேல் பரலோகத்திற்குப் பயணமாகின்றார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புகைப்பவர்களிடமிருந்து தள்ளி நிற்பதை விட தூரமாகச் சென்று விடுவது நலம்..
சிகரெட் புகையில் அடர்ந்திருக்கும் கார்பன் மோனாக்ஸைடு மிகக் கொடியது.
சிறு துளி நிகோடின் - ஒரு பூனையை முடித்து விடுகின்றது என்பது ஆய்வு..
சிகரெட் புகையினால் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன என்கின்றார்கள் .
என்றாலும் திருந்துவோரைக் காணோம்!..
புகைப்பவர்களின் நுரையீரல் கெட்டுப் போய் விடுகின்றது.
அதனால் சுவாச பிரச்னைகள் - மற்றவர்களுக்கும் பரவுகின்றது.
எனவே பச்சிளங்குழந்தைகளை அவர்களிடம் அனுமதிக்காமல் இருப்பது சாலச் சிறந்தது.
புகையிலையினால் என்ன நன்மை என்பது தெரியவில்லை..
அது விளைவிக்கும் கேடுகள் பற்பல..
Final Stage |
தம்மைச் சேர்ந்தவர்களையும் பெருந்துன்பத்துக்கு ஆளாக்குகின்றனர்.
புகையிலையினுள் புதைந்திருக்கும் நிகோடின் புகைப்பவர்களைப் புதைத்து விடுகின்றது.
எரிந்து புகையும் சிகரெட் புகைப்பவனையும் எரித்து விடுகின்றது.
காசு கொடுத்து புகையிலைப் பொருட்களுடன் புற்று நோயையும் வாங்குவதில் படித்தவனும் படிக்காதவனும் சிறப்பிடம் பெறுகின்றனர்.
ஒவ்வொரு சிகரெட்டும் - புகைப்பவனின் வாழ்நாளில் 18 நிமிடங்களைக் குறைக்கின்றது என்பது கூடுதல் செய்தி..
புகைப்பவனை நவீன எரிமேடைக்கு அனுப்பி வைப்பதைத் தவிர வேறொரு நல்லதையும் - புகையிலை செய்வதில்லை..
மனிதனை அழிப்பதற்கு மனிதனால் உருவாக்கப்பட்டவை -
புகையிலை, பீடி, சுருட்டு, சிகரெட், பான்பராக், குட்கா - போன்றவை!..எந்த ரூபத்தில் பயன்படுத்தினாலும் -
வாய், கன்னம், தொண்டை, நுரையீரல், கல்லீரல், உணவுக்குழாய்,
வயிறு, சிறுநீரகம் - என முழு உடலையும் சீரழித்து சிதைத்து -
சிதைக்கு அனுப்பி வைக்கும் வல்லமை பெற்றது - புகையிலை!..
சிகரெட் புகைப்பதனால் -
பக்கவாதம், ஒவ்வாமை, காசநோய், மலட்டுத் தன்மை, மாரடைப்பு - ஆகிய அதிரடிகள் நிச்சயம்!..
இவற்றுக்கும் மேலாக -
வாய், நுரையீரல்,சிறுநீரகம் - முதலான உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படுவது உறுதி!..
புகைப்பவர்கள் பத்து பேரினுள் - இருவர் பெண்கள் என்கின்றது உலக சுகாதார நிறுவனம்!..
இத்தகைய புகையிலையின் தாயகம் - தென் அமெரிக்கா!..
இதன் காலம் கி.மு. 6000 என்கின்றார்கள்..
இந்த கொடூரத்தை - அங்கிருந்த பழங்குடி மக்களிடமிருந்து கைப்பற்றி - ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப் படுத்திய பெருமை -
இந்தியாவுக்குக் கடல் வழி கண்டு பிடிக்கின்றேன் என்று கிளம்பி - வழி தவறிப் போன கொலம்பஸுக்கு உரியது.
அந்தவகையில் கொலம்பஸ் செய்த கேடுகளுள் இதுவும் ஒன்று என்பர்.
நமது நாட்டில் இந்த புகையிலையை அறிமுகம் செய்தவர்கள் - ஐரோப்பியர்.
ஆயினும், அக்காலத்திலேயே - புகையிலையின் தீங்குகளை அறிந்திருந்தனர்.
அதனால் தான் - மற்ற நாடுகளிலும் பரப்பி விட்டார்கள் போலிருக்கின்றது!..
புகைப் பழக்கத்தை விட்டுத் தொலைப்பதற்கு உறுதுணையாக இருப்பது - உலர் திராட்சை.
அவ்வப்போது உலர் திராட்சையை சுவைப்பதனால் புகைக்க வேண்டும் என்ற உணர்வு கட்டுப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும் - புகைப்பதால் இரத்தத்தில் கலக்கும் நிகோடினை - உலர்திராட்சை கரைத்து விடுகின்றது என்றும் கண்டறிந்திருக்கின்றனர்.
சேர்ந்தாரைக் கொல்லும் சினம்!..
சினத்திடம் சென்று சேர்ந்தாலும் சரி!..
சினம் வந்து சேர்ந்தாலும் சரி!..
அத்தகைய சினத்துடன்
சரியாசனத்தில் அமர்ந்திருப்பது - புகை!..
சரியாசனத்தில் அமர்ந்திருப்பது - புகை!..
புகை நல்வாழ்வுக்குப் பகை!..
நம் வாழ்வு நம் கையில்!..
வாழ்க நலம்!..
* * *
புகையிலைப் பொருட்களின் தீமையை விளக்கமான படங்களு்டன் சொன்னதற்கு நன்றி. உலர் திராட்சையின் மருத்துவ குணத்தினையும் பயன்பாட்டினையும் தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குஒரு பக்கம் குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்லிக் கொண்டே, சாராயக் கடைகளை நாடெங்கும் திறந்து வைத்தலைப் போன்றதுதான், ஒரு பக்கம் புகையிலை விவசாயத்திற்கு அனுமதி கொடுத்துக் கொண்டே, அதன் தீமைகளைப் பற்றியும் விளம்பரம் செய்வது.
தங்கள் அன்பின் வருகைக்கு நன்றி..
நீக்குபணப்பயிர்களுள் ஒன்றாகக் கருதப்படும் புகையிலையின் - தயாரிப்புகளின் மீது விதிக்கப்படும் வரிகளினால் அரசாங்க கஜானா நிறைகின்றதாம்..
ஆனாலும் நம் வாழ்வு நம் கையில் தானே!..
புனையிலைப் பயன்பாடு கேடு விளைவிக்கும் என்று கூறிக் கொண்டே,
பதிலளிநீக்குஅப்பொருட்களை விற்பதற்கு அரசு அனுமதிக்கிறதே
எப்படி ஐயா?
ஒரு பொருளை கையில் கொடுத்து விட்டு
சாப்பிடாதே சாப்பிடாதே என்றால் எப்படி
புகையிலையை நாமாவது புறக்கணிப்போம்
நன்றி ஐயா
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகைக்கு நன்றி..
பணப்பயிர்களுள் ஒன்றாகக் கருதப்படும் புகையிலையின் - தயாரிப்புகளின் மீது விதிக்கப்படும் வரிகளினால் அரசாங்க கஜானா நிறைகின்றதாம்..
யார் என்ன சொன்னாலும் - நாம் நம் புத்தியைக் கொண்டு முன்னேற வேண்டாமா!..
நம் வாழ்வு நம் கையில் தானே!..
உலர் திராட்சை வெல்லட்டும்...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குபுகையிலை இல்லாத உலகு ஒரு நாள் உருவாகியே தீரும்..
தங்கள் வருகைக்கு நன்றி..
எத்தனை எத்தனை மக்களை இந்த புகையிலை அடிமைப்படுத்தி விட்டது என்று நினைக்கும்போது மனதில் வலி......
பதிலளிநீக்குஅதில் கிடைக்கும் வருமானத்திற்காக அரசும் சும்மா இருக்கிறதே என்று நினைக்கும்போது இன்னும் அதிக வலி!
அன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகைக்கு நன்றி..
பணப்பயிர்களுள் ஒன்றாகக் கருதப்படும் புகையிலையின் - தயாரிப்புகளின் மீது விதிக்கப்படும் வரிகளினால் அரசாங்க கஜானா நிறைகின்றதாம்..
பிள்ளையைக் கிள்ளி விட்டுத் தொட்டிலை ஆட்டுகின்றார்கள்..
ஆனாலும் நம் வாழ்வு நம் கையில் தானே!..
புகைப் பழக்கம் கூடாது என்று சொல்வது நல்லது. எனக்கு நீண்டநாட்களாக ஒரு சந்தேகம். தேவையில்லாத இதனை ஏன் தயாரிக்க வேண்டும். உருவாக்க வில்லை என்றால் தொல்லையில்லை அல்லவா? அது சரி நாம் என்ன செய்ய முடியும். நம்மால் முடிந்தது கேடுகளைச் சொல்லியாவது புரியவைப்போம். தங்கள் விளக்கம், புகைப்படம் காலத்திற்கேற்ற பதிவு. அருமையாக உள்ளது. நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு நன்றி..
நீக்குபுகையிலை பணப்பயிர்களுள் ஒன்று.. இதன் - தயாரிப்புகளின் மீது விதிக்கப்படும் வரிகளினால் அரசாங்க கஜானா நிறைகின்றதாம்..
ஆனாலும் நம் வாழ்வு நம் கையில் தானே!..
என் 16-ம் வருடத்தில் இந்தப் பழக்கம் துவங்கி எனது 56-ம் வயது வரை நீடித்தது. இந்தப் பழக்கங்கள் நண்பர்களால் வருவது விடுவதற்கு எந்த நண்பரும் உதவ முடியாது.கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து விடுவது என்பது நடக்காதது. ஒரு வைராக்கியத்துடன் ஒரேயடியாக நிறுத்தி விடவேண்டும்
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்கள் வருகைக்கு நன்றி..
தங்களின் கருத்துரை - தங்களுடைய மன உறுதியைக் காட்டுகின்றது.
வாழ்க நலம்...
புற்றுநோய்க்கு ஆணிவேர்
பதிலளிநீக்குபுகையிலை உற்பத்திகளே!
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
நீக்குவணக்கம் ஜி சமூக நலன் வேண்டி தாங்கள் இட்ட பதிவுக்கு நன்றி இது எனக்கு இதுவரை அவசியப்படவில்லை 80தை அறியத்தருகிறேன் ஜி
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. வாழ்க நலம்..
புள்ளி விவரங்களுடன் நல்லதோர் விழிப்புணர்வு பதிவு
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. வாழ்க நலம்..
புகையிலையின் கொடுமை அறிந்து விட்டொழித்தால் நலம் பெறுவர். இன்றைய காலகட்டத்திற்கு....அவசியமான பதிவு.நன்றி
பதிலளிநீக்குதங்களின் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
நீக்குவாழ்க நலம்..
பயனுள்ள பதிவு. நம் இளைய சமுதாயத்தை வீணடித்துக் கொண்டிருக்கும் பழக்கம். நல்ல விழிப்புணர்வைத் தருகிறது தங்கள் பதிவு, அதிகமான செய்திகளுடன்.
பதிலளிநீக்குநேரமிருக்கும்போது இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த எனது நேர்காணலை வாசிக்க வருக.
http://www.ponnibuddha.blogspot.com/2015/06/tracing-footprints-of-buddhism-in-chola.html
அன்பின் ஐயா..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
தகவல் குறிப்பு கண்டு மகிழ்ச்சி..
வாழ்க நலம்..
அருமையான படங்களுடன் கூடிய விழுப்புணர்வுப் பதிவு! எத்தனைப் பேரை இது ஆட்டிப் படைக்கின்றது! மனம் வலிக்கின்றது. புகைப்பவரை விட அதை நுகர்பவருக்கு இன்னும் கெடுதல். ஏன் இப்படி இவர்கள் தங்களை மட்டுமல்லாமல் தங்களைச் சுற்றி உள்ளவர்களின் உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கின்றார்களோ...அவர்களாகத் திருந்தினால்தான் உண்டு....
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குபுகைப்பவர்களால் எவ்வளவோ தீமைகள்.. இவர்கள் மனம் திருந்தினால் வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது..
தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.. மகிழ்ச்சி..
புகை நமக்குப் பகை என்று எவ்வளவு எடுத்துச்சொன்னாலும் யாரும் திருந்தியபாடில்லை. சில சமயம் பேருந்தில் புகை பிடித்து நமக்கு இருமல் வர வைப்போரும் உண்டு. பக்கத்தில் இருந்து சுவாசிப்பவருக்கும் கேடு என்பதைப் பற்றி அவர்களுக்குத் துளியும் கவலையில்லை. நல்ல விழிப்புணர்வு ஊட்டும் கட்டுரை!
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை..
நெடுந்தூரப் பேருந்துகளின் ஓட்டுனர் சிகரெட் புகைத்துக் கொண்டு - பேருந்தை ஓட்டுவதைப் பார்த்திருக்கலாம்..
இது தவறு என்று சொன்னாலும் அவர்கள் கேட்பதில்லை..
இத்தனைக்கும் பேருந்தினுள் புகைக்காதீர் - என எழுதப்பட்டிருக்கும்..
தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..