நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூன் 21, 2014

இப்படி ஒரு கேள்வி

அன்பின் வணக்கம். 

வாரம் ஒருமுறை வியாழனன்று இரவு பத்து மணி முதல் வெள்ளிக் கிழமை பகல் ஒரு மணி வரை வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை!.. 

மீண்டும் வெள்ளிக்கிழமை இரவு பத்து மணி முதல் சனிக்கிழமை காலை ஆறு  மணி வரை வேலை!..

இத்தகைய சூழ்நிலையில், நேற்று மதியம் இரண்டு மணிக்கு அறைக்குத் திரும்பியதும்  தளத்தில் நுழைந்தால் - 


இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?..

திரு. கில்லர்ஜி அவர்கள் எனக்கு கொக்கி போட்டு வைத்திருக்கின்றார்.  

இப்படி ஒரு கேள்வி (!) என்று ஆரம்பித்து பத்து கேள்விக் கணைகள்..

இந்தக் கணைகளை நானும் பத்து நண்பர்களுக்குத் திருப்பி விட வேண்டும். 

அந்தப் பக்கம் - அம்பாளடியாள்
மற்றும் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் ஆகியோரும் 

முன்னதாகவே கணைகளை வீசி விட்டார்கள்.. 

நான் தொடரும் தளங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எனது தளத்தை தொடர்ந்து வருபவரும் சிலரே!..

அப்படியிருக்க, எனது வட்டத்தில் இருப்பவர்கள் - நான் தேடும் முன்னரே அவர்களுடைய கேள்விக் கணைகளுக்கு இலக்கு ஆகி விட்டார்கள்..

ரசனையான விளையாட்டுத்தான்!.. ஆனாலும் - 

மேலும் - புதிதாக பத்து நண்பர்களை எங்கிருந்து தேடுவேன்!?..

யார் யாருக்கு என்னென்ன பிரச்னைகளோ!..
எந்தெந்த சூழ்நிலைகளில் இருக்கின்றார்களோ?.. அறியேன்!..

எனவே - பத்து நண்பர்களை இதில் இணைப்பதற்கு  எனக்கு இயலவில்லை.

இருப்பினும் - 

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?..

தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இதோ!..
1. உங்களுடைய நூறாவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?..

அவ்வளவு தூரத்திற்கெல்லாம் ஆசைப்படவில்லை. இருப்பினும்,

கன்றாத வளமையும், (மனதில்) குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும் இருக்கும் பட்சத்தில் - 

எனைத் தொடர்ந்துவரும் அன்பின் இனிய உறவுகளுடன் - அன்பு மனைவியின் கரம் பிடித்தவாறு  ஆதரவற்ற உயிர்களை அரவணைத்து  அம்பாளின் சந்நிதியில் நூறாவது பிறந்த நாளைக் கொண்டாடுவேன்.

2. என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?..

உலகில் உள்ள நல்ல விஷயங்களை எல்லாம்!..

3. கடைசியாக  நீங்கள் சிரித்தது எப்போது - எதற்காக ?..

கடைசியாக என்பதில் உடன்பாடு இல்லை.
இன்னும் எத்தனையோ மகிழ்ச்சிகள் காத்துக் கிடக்கின்றன. இருப்பினும் - இன்று வீட்டில் உள்ளோருடன் ஸ்கைப் -ல் முகம் பார்த்து பேசியது  மகிழ்ச்சி.

4. 24 மணி நேரம் பவர் கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?..

இருக்கவே இருக்கின்றது இயற்கை - இணைந்து வாழ்வதற்கு!.. 

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாள் அன்று அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன ?..

அன்பு ஒன்று தான் அனைத்துத் தடைகளையும் தகர்க்கும் . எனவே எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது ஒருவருக்கொருவர் அன்பாக வாழுங்கள்..

6. உலகத்தில் நடக்கும் பிரச்னைகளை உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்தப் பிரச்னையை நீங்கள் தீர்க்க விரும்புவீர்கள் ?..

நாரதரே!.. உலகம் என்றால் என்ன?.. பிரச்னை என்றால் என்ன?..
உலகம் தான் பிரச்னை!.. பிரச்னை தான் உலகம்!..
நன்றாகச் சொன்னீர்கள்!.. நாரதரே!..


எனினும் - 
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தீர்வதற்கு விரும்புகின்றேன்!..

7. உங்களுக்கு ஒரு பிரச்னை அதைத் தீர்க்க யாரிடம் அட்வைஸ் கேட்க விரும்புவீர்கள் ?..

அட்வைஸ் யாரிடமும் கேட்பதில்லை. ஆலோசனை எனில் - அன்பு அகலாத மனைவியிடம் தான்!..

8. உங்களைப் பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார். அதைக் கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?..

செய்தி தான் தவறாயிற்றே!.. இருந்தாலும்,
அவன் எடுத்த மண்வெட்டி அவனுக்கே!..  - என்று விட்டு விடுவேன்.

9. உங்கள் நண்பரின் மனைவி இறந்து விட்டால் அவரிடம் என்ன சொல்வீர்கள் ?..

ஆறுதல் வார்த்தைகளையும்  - கடந்து சொல்வதானால் - அவருடைய வயது - சூழ்நிலையினைப் பொறுத்தது.

10. உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ?..

நான் பாதுகாத்து வைத்திருக்கும் - எனது கதை, கவிதை, கட்டுரைகளை படித்துக் கொண்டிருப்பேன்.

வருகை தரும் அன்பு நண்பர்கள் - கருத்துக்களுடன் விடைகளையும்  பகிர்ந்து கொள்ளுங்கள்.. 

தங்களுடைய விடைகளைக்  காண ஆவலுடன் இருக்கிறேன்.

வாழ்க வளமுடன்!.. வளர்க நலமுடன்!..
* * *

30 கருத்துகள்:

  1. /// நாரதரே உலகம் என்றால் என்ன
    பிரச்சினை என்றால் என்ன//
    அருமையான விளக்கம் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. /// அவன் எடுத்த மண்வெட்டி அவனுக்கே! ///

    அப்படிச் சொல்லுங்க ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. முத்தான பதில்கள் ! அன்பு நிறைந்த தங்களின் உள்ளத்தை வெளிக்காட்டிய கேள்விக் கணைகளுக்கு நன்றி சொல்லிக்கொள்கின்றேன் ஐயா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தாங்கள் வருகை தந்து கருத்துரைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  4. வணக்கம் ஐயா!

    தெள்ளத் தெளிவான பதில்கள் அத்தனையும். அருமை!
    பகிர்வினுக்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. /அவன் எடுத்த மண்வெட்டி அவனுக்கே// அருமை..

    //நாரதரே..// இதுவும் அருமை..

    பதில்கள் அனைத்தும் மனம்திறந்த அருமையான பதில்கள். பகிர்விற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. ஒவ்வொன்றும் அருமை ஐயா அதிலும் தங்களது எட்டாவது பதிலை ரசித்தேன் என்பதைவிட, நேசித்தேன் என்பதைவிட, அதிலொரு வாழ்க்கைப்பாடம் படித்தேன் என்பதே சரி.
    குறிப்பு - எனது வார்த்தைக்கு மதிப்பளித்து பதிலில் பதிப்பிட்டதற்கு நன்றி
    அன்புடன்
    KILLERGEE

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      உண்மையில் நான் தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
      எண்ணங்களை எடுத்துரைக்க ஒரு இனிய வாய்ப்பு கிடைத்தது எதிர்பாராமல்!.
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

      நீக்கு
  7. சாரே பதில்கள் அனைத்தும் சூப்பர் அதிலும் /அவன் எடுத்த மண்வெட்டி அவனுக்கே// மிக அருமை.

    உங்கள் தளத்தில் பாலோவராக சேர முயற்சித்தேன் ஆனால் We're sorry...

    We were unable to handle your request. Please try again or return a bit later. அந்த கெட்ஜெடில் பிரச்சனை என நினைக்கிறேன்.. திண்டுக்கல் தனபாலனை தொடர்பு கொள்ளவும் பிரச்சனை தீரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      அந்த கெட்ஜெட்டில் உள்ள பிரச்னையை விரைவில் சரி செய்து விடுகின்றேன்..

      அன்புடன் வருகை தந்து கருத்துரைத்ததற்கு மிக்க நன்றி..

      நீக்கு
  8. உண்மையான நல்ல அருமையான பதில்கள் மண்வெட்டி அருமை.!வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகை தந்து கருத்துரைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  9. அய்யா பதில்கள் அனைத்தும் அருமை !!
    இந்த மண்வெட்டி இதற்கு முன் கேட்டதே இல்லை!!
    வித்தியாசமான விடை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களின் முதல் வருகை. அன்புடன் வரவேற்கின்றேன்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

      நீக்கு
  10. ஒவ்வோர் வரிக்கும் உளமோடு மெய்யுருக்கி
    செவ்வெனத் தந்தீர் சிறப்பு !

    யதார்த்தமான விடைகள்
    அருமை ,,,,,, வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் இனிய சீராளன் அவர்களுக்கு நல்வரவு!..
      கனிவான கவிதையுடன் - வாழ்த்தியததற்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  11. ஐயா தங்களின் பதில்கள் மிக வித்தியாசமாக இருக்கிறது.

    ஒவ்வொன்றையும் ஒரு முறைக்கு இரு முறை படித்தேன் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சொக்கன்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  12. முத்துக்கு முத்தாக
    பத்துக்குப் பத்தாக
    கேள்வி - பதில்
    நன்றாக இருக்கிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுடைய முதல் வரவு கண்டு மகிழ்ச்சி..
      தங்களின் அன்பின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  13. எல்லா கேள்விகளுக்கும் பதிலை அருமையாக சொன்னீர்கள் .
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. நாரதர் மூலமாய் நீங்கள் சொன்ன விளக்கம் அருமை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜீ..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  15. பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..