நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
சனிக்கிழமை
பாயசம்
(நாலு வகை)
பாயஸான்ன ப்ரியாயை நம
தேவியின் அஷ்டோத்திர நாமங்களில் ஒன்று.
1/ ஷெமாய் பாயசம்
(சேமியா பாயசம்)
தேவையான பொருட்கள்:
சேமியா 200 gr
பால் 500 ml
சர்க்கரை 150 gr
நெய் 2 Tb sp
முந்திரி 150 gr
திராட்சை 50 gr
ஏலக்காய் 5
செய்முறை:
வாணலியில் நெய்யை ஊற்றி
முந்திரி, திராட்சையை வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்..
சேமியாவையும் வறுத்துக் கொண்டு. பாலில் கொதிக்க விடவும்.
முதல் கொதி வந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.
இறக்குவதற்கு முன்
ஏலக்காய் முந்திரி, திராட்சை வறுத்து சேர்க்கவும்.
அவ்வளவு தான்!..
வங்கத்து ஷெமாய் தான் நம்ம ஊரில் சேமியா..
2/ குறுநொய் பாயசம்
(குறுணைப் பாயசம்)
தேவையான பொருட்கள்:
பச்சரிசி குறுநொய் 50 gr
ஜவ்வரிசி 25 gr
பசும் பால் ½ ltr
சர்க்கரை 100 gr
ஏலக்காய் தூள் சிறிதளவு
நெய் 1 Tb sp
முந்திரி, திராட்சை விருப்பமான அளவு
செய்முறை
பச்சரிசியை கழுவி சிறிது நெய்யில் வறுக்கவும்.
பாலை சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும்.
அரிசி நன்றாக வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.
ஏலக்காய், முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.
குறுநொய் பாயசம் தயார்
விருப்பத்திற்கு ஏற்ப, இதனை
சிறு தானிய பாயசமாக மாற்றிக் கொள்வது உங்கஎ திறமை..
3/ தேங்காய்ப் பால் பாயசம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி குறுநொய் 150 gr
வெல்லம் 150 gr
தேங்காய்ப்பால் முதல் நிலை
100 ml
தேங்காய்ப்பால் இரண்டாம் நிலை 150 ml
ஏலக்காய்த் தூள் சிறிது
நெய் 1Tb sp
முந்திரி திராட்சை
செய்முறை
அரிசியை சற்று ஊற வைத்து அலசிக் கொள்ளவும்..
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்..
வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
அரிசியுடன் இரண்டாம் நிலை
தேங்காய்ப் பால் வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும், முதல் நிலை தேங்காய்ப் பாலைச் சேர்க்கவும். ஏலக்காய், முந்திரி திராட்சை சேர்த்துக் கிளறவும்.
நெய் வாசத்துடன் தேங்காய்ப் பால் பாயசம்
பாயசம் இறுக்கமாக இருந்தால் சற்று தளதளப்பாக வைத்துக் கொள்வது உங்கள்
திறமை
4/ சிறு பருப்புப் பாயசம்
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு 450 gr
வெல்லம் 200 gr
தேங்காய்ப் பால் 250 ml
ஏலக்காய்த் தூள் ¼ tsp
நெய் 2 Tb sp
முந்திரி 100 gr
திராட்சை 50 gr
தேவையான அளவு
செய்முறை :
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்..
பாசிப் பருப்பை சுத்தம் செய்து கொண்டு நெய்யில் வறுத்து சரியான அளவு தண்ணீருடன் வேக வைக்கவும்.
பக்குவமாக வெந்ததும் வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி இதனுடன் ஊற்றி
மிதமான சூட்டில் வைத்து சற்றே நீர் வற்றும் போது தேங்காய் பால் சேர்க்கவும்.
'தள தள ' என கொதித்து வருகின்ற போது
வறுத்த முந்திரி, திராட்சை
ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கவும்..
நிவேதனமாக சமர்ப்பிக்க ஏற்ற பாரம்பரிய பாயசம்..
சர்க்கரை என்றால் பாரம்பரியம் தான்.. சீனி அல்ல...
இனிப்பு என்றால்
மகிழ்ச்சி.. இருப்பினும் அளவில் கவனம் தேவை..
நமது பாயசம் இயற்கை உணவுகளில் ஒன்று.
நமது நலம்
நமது கையில்
ஓம் சிவாய நம
**

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..