நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 28
வியாழக்கிழமை.
தமிழமுதம்
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.. 236
*
திவ்யதேச தரிசனம்
திரு மோகூர்
ஸ்ரீ காளமேகப் பெருமாள்
ஸ்ரீ மோகனவல்லி நாச்சியார்
ஸ்ரீ மோகூர்வல்லி
நாச்சியார்
புலஸ்திய முனிவருக்கு மோகினி அவதாரத் திருக்கோலம் காட்டியருளிய தலம்.
இத்தலத்தில்
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் பிரசித்தம்
வில்வம்.
ஷிராப்த புஷ்கரணி.
சங்கு சக்கரம் ஏந்தி, வலக்கரத்தால்
பாதாரவிந்தத்தைக் காட்டிய வண்ணம்
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
கேதகி விமானம்.
மங்களாசாசனம்
நம்மாழ்வார் திருமங்கையாழ்வார்
12 பாசுரங்கள்.
(நன்றி: காமகோடி.org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 28
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.. 501
*
திவ்யதேசத் திருப்பாசுரம்
மணித் தடத்தடி மலர்க்கண்கள் பவளச் செவ்வாய்
அணிகொள் நால்தடம்தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல்லரட்டன் உறைபொழில் திருமோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே.. 3791
-: நம்மாழ்வார் :-
(நன்றி : நாலாயிர திவ்யப்ரபந்தம்)
**
சிவதரிசனம்
திருத்தலம்
திரு நாட்டியத்தான்குடி
ஸ்ரீ மாணிக்கவண்ணர்
ஸ்ரீ மங்களாம்பிகை
மாவிலங்கை
சூரியதீர்த்தம்.
நாட்டியத்தான்குடி நம்பியின்
அழகிய தரிசனம்.
அம்மையப்பன் இங்கே
சுந்தரருக்கு வயலில் நடவு நட்ட கோலத்தில்
உழவன் உழத்தியாக திருக்காட்சி நல்கினர்..
கோட்புலி நாயனாரின் இரு மகள்களான -
சிங்கடி, வனப்பகை - ஆகியோரை சுந்தரர்
தமது புதல்வியர்களாக ஏற்றருளிய தலம்.
திருப்பதிகம் அருளியோர்
சுந்தரர்
*
தேவாரம்
கல்லாதே பல கற்றேன்
நில்லேன் அல்லேன் நின்வழி நின்றார்
தம்முடை நீதியை நினைய
வல்லேன் அல்லேன் பொன்னடி பரவ
மாட்டேன் மறுமையை நினைய
நல்லேன் அல்லேன் நானுனக் கல்லால்
நாட்டியத்தான்குடி நம்பீ.. 7/15/4
-: சுந்தரர் :-
*
திருவாசகம்
திருஅம்மானை
கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன்
தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டி
தாள்தா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி
நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த
ஆட்டான்கொண் டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய்.. 8/8/6
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
திருமோகூர், நாட்டியத்தான்குடி தரிசனம் கிடைக்க பெற்றேன்.
பதிலளிநீக்குஅம்மையப்பன் உழவன், உழத்தி கோலம் அருமை.
பாடலகளை பாடி தரிசனம் செய்து கொண்டேன்.
நன்றி. வாழ்க வளமுடன்.
தங்கள் அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குநலம் வாழ்க..
பாடல்களை
பதிலளிநீக்குஓம் சிவாய நம ஓம் நமோ நாராயணாய நம;
பதிலளிநீக்குஓம் சிவாய நம..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
நலம் வாழ்க..
ஓம் நம சிவாய...
பதிலளிநீக்குஓம் சிவாய நம..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
வாழ்க நலம்..
அழகிய தரிசனம் .படங்கள் அருமை கண்டு களித்தோம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குநலம் வாழ்க..
தரிசித்து கொண்டேன்
பதிலளிநீக்குவாழ்க வையகம்.
அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..
நீக்குநலம் வாழ்க..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. பக்தியும், பாடல்களுமாய் மார்கழி பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது. தெரியாத, அறிந்து மட்டுமே கொண்ட பல கோவில்களின் இறைவனார்களையும் தங்கள் பதிவின் வாயிலாக தரிசித்து கொண்டேன். இன்றைய கோவில்கள் தரிசனமும் மன அமைதியை தருகிறது. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குநலமே வாழ்க..