நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 14, 2023

மலர் 30

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 30
  சனிக்கிழமை.

தமிழமுதம்
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற 
செய்யாமை செய்யாமை நன்று.. 297
*
திவ்யதேச தரிசனம்
திருத் தஞ்சை மாமணிக்கோயில்
- மூன்று கோயில்கள் -

தஞ்சை மாமணிக்கோயில்
 


ஸ்ரீ நீலமேகப்பெருமாள்
ஸ்ரீ செங்கமலவல்லி.

மகிழம்
 அம்ருத தீர்த்தம் வெண்ணாறு.

வீற்றிருந்த திருக்கோலம் 
கிழக்கே திருமுக மண்டலம்.
சௌந்தர்ய விமானம்.
*
மணிக்குன்றம்



ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாள்
ஸ்ரீ அம்புஜவல்லி.

மகிழம்
ஸ்ரீ ராம தீர்த்தம்.

வீற்றிருந்த திருக்கோலம், 
கிழக்கே திருமுக மண்டலம்.
மணிக்கூட விமானம்
*
ஞ்சை யாளி நகர்



ஸ்ரீ வீர நரஸிங்கப் பெருமாள்
ஸ்ரீ தஞ்சை நாயகி.

மகிழம்
சூர்ய புஷ்கரிணி, 
ஸ்ரீ ராமதீர்த்தம்.
 
வீற்றிருந்த திருக்கோலம் 
கிழக்கே திருமுக மண்டலம்.
வேதசுந்தர விமானம்.

மங்களாசாசனம் 
திருமங்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
நம்மாழ்வார்
5 பாசுரங்கள்
(நன்றி: காமகோடி.org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 


வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை-
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே சொன்ன
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.. 503


இந்த அளவில் திருப்பாவைப் பாசுரங்கள்
நிறைவடைகின்றன..


திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணியுகந்தருளிதாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே 

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
**

திவ்யதேசத் திருப்பாசுரம்


எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்  
எனக்கரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி  
அவருயிர் செகுத்த எம் அண்ணல்
வம்புலாம் சோலை மா மதிள் தஞ்சை 
மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன் 
நாராயணா என்னும் நாமம்.. 953
-: திருமங்கையாழ்வார்:-
(நன்றி : நாலாயிர திவ்யப்ரபந்தம்)
**

சிவதரிசனம்

திருத்தலம்
திரு தஞ்சபுரி
தஞ்சாவூர்

ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர்

ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர்
ஸ்ரீ ஆனந்தவல்லி

வன்னி
வெண்ணாறு

ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் கரந்தை

ஸ்ரீ பெரிய நாயகி

தேவாரம்

ஸ்ரீ தஞ்சை விடங்கர்
அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத்து நீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.. 6/95/1
-:திருநாவுக்கரசர் :-


தஞ்சை தளிக்குளம்
என்று அருளப்பெற்ற
தலம் எதுவென்று அறிதற்கு 
இயலவில்லை..

தஞ்சைத் தளிக்குளத்தார் என்பது 
திருநாவுக்கரசர் திருவாக்கு.. 

குளம் நான்கு என்பது 
திருஞானசம்பந்தர் திருக்குறிப்பு..
**
திரு இசைப்பா


பன்னெடுங் காலம் பணிசெய்து பழையோர்
தாம் பலர் ஏம்பலித் திருக்க
என்னெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த
எளிமையை என்று நான் மறக்கேன்
மின்னெடும் புருவத்து இளமயி லனையார்
விலங்கல்செய் நாடக சாலை
இன்னடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத்து இவர்க்கே.. 9/16/8
-: கருவூர் சித்தர் :-
*
திருவாசகம்

ஸ்ரீ ப்ரஹன்நாயகி 
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.. 8/37/3
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
ஸ்ரீ வடபத்ரகாளி
ஸ்ரீ வராஹி
ஸ்ரீ மாரியம்மன்
ஸ்ரீ ஸ்வர்ண காமாட்சி

ஸ்ரீ கருவூரார்

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி
ஊழிமலி திருவாத வூரர்திருத் தாள்போற்றி..
-: உமாபதி சிவாசாரியார் :-

திருச்சிற்றம்பலம்
**

இந்த அளவில் மார்கழிப் பதிவுகள்
நிறைவடைகின்றன.

உடல் நலம் சற்று சரியில்லை என்ற நிலையிலும் உறுதுணையாய் இருந்த இறைவனுக்கும்
உற்சாகப்படுத்திய தங்களனைவருக்கும்
நன்றி.. நன்றி..


அனைவருக்கும்
அன்பின் இனிய
பொங்கல்
நல்வாழ்த்துகள்..
**
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

  1. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் சிவாய நம..
      வாழ்க வளமுடன்..

      மகிழ்ச்சி.. நன்றி ஜி

      நீக்கு
  2. ஓம் நச்சிவாய; ஹரி ஓம் நாராயணாய..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹரி ஓம் நமோ நாராயணாய..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. உடல் நலம் சரியில்லாதபோதும் சிறப்பாக மார்கழி மாத தரிசனத்திற்கு படங்கள், பாடல்களை தொகுத்து வழங்கியது சிறப்பு. விரைவில் நலமடைய இறைவன் அருள்வார்.
    இன்றைய பதிவு அருமை.
    பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // விரைவில் நலமடைய இறைவன் அருள்வார்.. //

      தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தாங்கள் உடல் நலமில்லாத போதினிலும் இதுவரை மார்கழி பதிவுகளை , அருமையான பாடல்கள், மற்றும் படங்களுடன் தொகுத்து தந்ததற்கு இறைவன் அருளினார் எனும் போது இறைவன் மேல் பக்தி மேலிடுகிறது. அவனன்றி எதுவும் அசையாது என்ற தங்கள் நம்பிக்கைக்கு மனமார்ந்த வாழ்த்துகள். வணக்கங்கள். தங்கள் உடல் நலம் விரைவில் முழுமையாக குணமடையவும் இறைவன் அருள்வார்.

    இன்றைய பதிவும் காண கண் கொள்ளாகாட்சியாக இருக்கிறது. அருமையான படங்களின் வாயிலாக பல தெய்வங்களை தரிசித்துக் கொண்டேன். அம்மன் படங்கள் மனதிற்கு நிறைவை தந்து மகிழ்வூட்டின. தங்களுக்கும், போகி, மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அவனன்றி எதுவும் அசையாது என்ற தங்கள் நம்பிக்கைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.. //

      அன்பின் வருகையும் விரிவான கருத்தும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

      நீக்கு
  5. நீண்ட பகிர்வு சிறப்பாக இருந்தது.
    தஞ்சை மாமணிக் கோவில், ஆண்டாள், சிவ ,அம்மன் தரிசனங்கள் பெற்றோம் .நன்றி.

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி.

      அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

      நீக்கு
  6. இறைவன் இறைவிகளின் படங்களுடன் நந்தி எம்பெருமான் ஆஞ்சு அழகு!! பதிவு மலர் 30 நிறைவுறுகிறது. தை பிறக்கிறது. உங்கள் உடல் நலன் நன்றாகி மீண்டும் பழையபடி நலம் பெற வேண்டும்.

    தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துகள் துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // உடல் நலன் நன்றாகி மீண்டும் பழையபடி நலம் பெற வேண்டும்.. //

      அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி.

      அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

      நீக்கு
  7. தஞ்சைத் தளிக்குளத்தைத் தான் அழித்து அங்கே பெருவுடையார் கோயிலின் ஒரு பகுதி இருப்பதாய்க் கேள்வி. எது உண்மை என்று தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சை தளிக்குளம் கோயிலைப் புனருத்தாரணம் செய்தே பெருவுடையார் கோயில் எழும்பியது...

      மேற்கு திருமாளிகைப் பத்தியில் நந்தி பிரதிஷ்டையுடன் ஸ்ரீ உலகநாயகி சமேத உலக நாயகர் விளங்குகின்றார்.. இவரே தளிக்குளத்தார் என்றும் நம்பப்படுகின்றது.. இது பலருக்கும் தெரியாத தகவல்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றியக்கா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..