நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 22
வெள்ளிக்கிழமை.
இன்று திரு ஆதிரைத் திருநாள்..
வேத நாயகன் வேதியர் நாயகன்
மாதின் நாயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயகன் ஆதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.. 5/100/1
-: திருநாவுக்கரசர் :-
வாழ்வும் வளமும்
எங்கும் நிறைந்திட
ஈசன் எம்பெருமானை
வேண்டிக் கொள்வோம்..
**
தமிழமுதம்
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.. 151
*
திவ்யதேச தரிசனம்
திரு அழுந்தூர்
தேரழுந்தூர்
ஸ்ரீ தேவாதிராஜன்
ஸ்ரீ ஆமருவியப்பன்
ஸ்ரீ செங்கமலவல்லி நாச்சியார்
ஸ்ரீ ஆமருவியப்பன் |
காவிரி,
தர்சன புஷ்கரிணி.
நின்ற திருக்கோலம்
கிழக்கே திருமுக மண்டலம்
கருட விமானம்.
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
45 பாசுரங்கள்.
(நன்றி: காமகோடி.org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 22
அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய். 495
*
திவ்யதேசத் திருப்பாசுரம்
திருவாழ் மார்வன் தன்னை திசை மண்நீர் எரிமுதலா
உருவாய் நின்றவனை ஒலிசேரும் மாருதத்தை
அருவாய் நின்றவனை தென்னழுந்தையில் மன்னிநின்ற
கருவார் கற்பகத்தை கண்டுகொண்டு களித்தேனே.. 1604
-: திருமங்கையாழ்வார் :-
(நன்றி : நாலாயிர திவ்யப்ரபந்தம்)
**
சிவதரிசனம்
திருத்தலம்
திருவலம்புரம்
(மேலப்பெரும்பள்ளம்)
ஸ்ரீ வலம்புரநாதர்
ஸ்ரீ வடுவகிர்கண்ணி
பனை
பிரம்ம தீர்த்தம்
ஊர் நலம் காப்பதற்காக
திருவலஞ்சுழி காவிரியில் மூழ்கிய
ஹேரண்ட முனிவர் கரையேறிய தலம்.
திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
*
தேவாரம்
ஸ்ரீ வலம்புர நாதர் |
நீறணி மேனியன் நெருப்புமிழ் அரவினன்
கூறணி கொடுமழு ஏந்தியோர் கையினன்
ஆறணி அவிர்சடை அழல்வளர் மழலைவெள்
ஏறணி அடிகள்தம் இடம்வலம் புரமே.. 7/72/3
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-
*
திருவாசகம்
திருவெம்பாவை
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா து எப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கு இப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோர் எம்பாவாய்.. 19
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோர் எம்பாவாய்.. 20
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
திருவெம்பாவைத்
திருப்பாடல்கள்
நிறைவு பெறுகின்றன.
திருச்சிற்றம்பலம்
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
சிவனும் திருமாலும் சிந்தையில் நிறைந்து அருள் புரியட்டும். உங்கள் உடல் தொந்தரவுகளையும் தீர்க்க அவர்களை பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
நலம் வாழ்க..
திருவாதிரை நாளில் சிவன், பெருமாள் தரிசனங்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ந்தோம்.
பதிலளிநீக்குநலம்பெற பிரார்த்திக்கின்றேன்.
அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
நீக்குநலம் வாழ்க..
ஓம் நம சிவாய...
பதிலளிநீக்குஓம் சிவாய நம..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
இத்திருப்பாவை பாசுரத்தை தினமும் சொல்வதுண்டு. குறிப்பாக இப்பாடலின் அர்த்தம்...இதை கீதாக்காவின் பதிவு ஒன்றிலும் சொல்லியிருந்தேன், ரஞ்சனி அக்கா அவங்க நான் சொன்ன விளக்கம் பொருளைப் பாராட்டிச் சொல்லியிருந்த நினைவு.
பதிலளிநீக்குஅங்கண்மா ஞாலத்து அரசர் - அன்று மகாபாரதப் போருக்கு படைகள் வேண்டி கிருஷ்ணனைக் காண துரியோதனாதியரும், பாண்டவரும் வருவார்கள். பார்த்தனொ முதலில் என் கண்ணில் படுபவர்களுக்கே என் படை என்பார்... துரியோதனன் பார்த்தனின் தலைமாட்டில் நிற்பான், பாண்டவர் வந்ததும் அர்சுனன் பார்த்தனின் பாதத்தின் அருகில் மண்டியிட்டு அமர்ந்திருக்க துரியோதனன் அர்ச்சுனன் பாதத்தின் அருகில் இருப்பதைக் கொஞ்சம் நையாண்டிடுவான். கிருஷணர் கண் மலரும் போது பார்ப்பது முதலில் அர்ச்சுனனை. அவனோ பார்த்தன் மட்டும் போதும் படை வேண்டாம் என்று சரணாகதி! துரியோதனன் நினைப்பான், இவன் என்ன மடையன் முதலில் பார்த்தும் படையைக் கேட்கவில்லையே என்று உள்ளூர சந்தோஷப்படுவான். கிருஷ்ணனின் படை அவனுக்கு. இறைவனே கூட நிற்கும் போது வேறேது வேண்டும். அவன் கண் மலர்ந்து பார்த்திட்டால் வேறேது வேண்டும் அப்படி நாங்களும் உன் பாதத்தில் வந்து நிற்கிறோம் உன் கண் மலர்ந்து எங்களை நோக்கியால் பாபத்தை களைவாய் என்று..
இது சரணாகதியை விளக்கும் பாடல்
கீதா
நீயே என்னுடன் இருக்கும்போது வேறென்ன வேண்டும் எனக்கு!..
நீக்குஉண்மையான சரணாகதி இதுதான்..
அன்பின் வருகையும் தரிசனமும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ ..
நலம் வாழ்க
இதன் தொடர்ச்சியாக இன்னும் ஒரு படி மேல் போய் சொல்லியிருப்பதாக நான் கருதுவது சிற்றஞ்சிறுகாலே ...
நீக்குகீதா
வாழ்க வையகம்.
பதிலளிநீக்குஓம் நமசிவாய....
வாழ்க வளமுடன்..
நீக்குசிவாய நம ஓம்..
மகிழ்ச்சி.. நன்றி ஜி..
நலம் வாழ்க..
இன்று திருவாதிரை நாள் ஆருத்ரா தரிசனம்! நீங்களும் சென்றிருப்பீர்கள்னு நினைக்கிறேன் துரை அண்ணா..
பதிலளிநீக்குஇங்கும் தரிசனம் கிடைத்தது காலை!
கீதா
கால் வீக்கத்தின் காரணமாக நான் இன்று செல்ல வில்லை..
நீக்குஅன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி சகோ..
நலம் வாழ்க
திருவாதிரை நாளில் அருமையான தரிசனம்.
பதிலளிநீக்குமாயவரத்தில் இருக்கும் போது அடிக்கடி சென்று தரிசனம் செய்த கோயில்கள்.
தாங்கள் இக்கோயில்களைத் தரிசித்து இருப்பீர்கள் என்பதை அறிவேன்..
நீக்குஅன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி
நலம் வாழ்க..