நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
தமிழமுதம்
கற்றதனால் ஆய பயன் என்கொல்
வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.. (02)
*
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை..
திருப்பாடல் - 2
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்..
*
ஆழ்வார் திருமொழி
விரும்பிநின் றேத்த மாட்டேன்
விதியிலேன் மதியொன் றில்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம்
இறையிறை யுருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த
அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன்
கண்ணிணை களிக்கு மாறே..888
-: ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார் :-
*
-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்
பொதுத் திருத்தாண்டகம்
அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.. (6/95)
-: ஸ்ரீ அப்பர் ஸ்வாமிகள் :-
திருவாசகத் தெள்ளமுதம்
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் எண் - 2
அருணண்இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழவெழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்
திரள்நிரை அருள்பதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே..
*
-: திருவெம்பாவை :-
திருப்பாடல்கள் 3 - 4
முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்..
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக்கொண்டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்..
-: ஸ்ரீ மாணிக்க வாசகப் பெருமான் :-
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஒம்
ஃஃஃ
திருப்பாவை, திருவெம்பாவை சுவைத்தேன்.
பதிலளிநீக்குமார்கழி பகிர்வு அருமை.பாடல்களை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குமார்கழி மாதம் காலையில் குளிர்ந்த நீரில் குளித்து திருப்பாவை, தெருவெம்பாவை , திருப்பள்ளி எழுச்சி பாடி நான் செய்யும் பிரசாதம் வைத்து பூஜை செய்வார்கள் தினம் அருகில் இருக்கும் கோயில் போய் வருவோம் அந்த நினைவுகள் வருகிறது.
வானொலி, தொலைகாட்சி என்று கேட்போம்.
ஓம் நம சிவாய...
பதிலளிநீக்குமார்கழியில் நற்சுவை... ரசித்தேன்.
பதிலளிநீக்குதிருப்பாவை நன்று வாழ்க வையகம்.
பதிலளிநீக்குஇனிய தரிசனம் ...
பதிலளிநீக்குஅருமையான தரிசனம். பாடல்கள் பகிர்வுக்கு நன்றி. நம்பெருமாளின் திவ்ய தரிசனமும் கிடைத்தது.
பதிலளிநீக்குபாடல்கள் மற்றும் பதிவு அருமை.
பதிலளிநீக்குதுளசிதரன்
இனிய அமுதம்.
பதிலளிநீக்குகீதா