நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***
-: குறளமுதம் :-
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.. 102
*
-: அருளமுதம் :-
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை..
திருப்பாடல் - 13
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்..
*
-: ஆழ்வார் திருமொழி :-
நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறிவெண்ணெய்
தோன்றவுண் டான்வென்றி சூழ்களிற்றை - ஊன்றி
பொருதுடைவு கண்டானும் புள்ளின்வாய் கீண்டானும்
மருதிடைபோய் மண்ணளந்த மால்.. 2099
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-
*
-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்
திருத்தலம்
திரு இடைமருதூர்
இறைவன்
ஸ்ரீ மஹாலிங்கேஸ்வரர்
ஸ்ரீ இடைமருதீசர்
அம்பிகை
ஸ்ரீ சுந்தரகுஜாம்பிகை
தீர்த்தம்
காவிரி, ஐராவணத் தீர்த்தம்
தலவிருட்சம் - மருத மரம்.
இத்தலத்தில்
ஸ்ரீ மூகாம்பிகையின் சந்நிதி
சிறப்புடையது..
எழிலான சுதை நந்தி
மிகப் பெரியது..
காசிக்குச் சமமான ஆறு தலங்களுள் திரு இடைமருதூரும் ஒன்று..
வரகுண பாண்டியரது ப்ரம்மஹத்தி நீங்கப் பெற்ற திருத்தலம்..
பட்டினத்தடிகளும் பத்ருஹரியாரும் இங்கு சிலகாலம் இருந்திருக்கின்றனர்..
*
பொழிலவன் புயலவன் புயலியக்கும்
தொழிலவன் றுயரவன் துயரகற்றும்
கழலவன் கரியுரி போர்த்துகந்த
எழிலவன் வளநக ரிடைமருதே.. 1/110
-: ஸ்ரீ ஞானசம்பந்தப் பெருமான் :-
*
-: திருவாசகத் தெள்ளமுதம் :-
திருக்கோத்தும்பி
திருப்பாடல் எண் - 12
நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்
சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளுந்
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ..
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
தமிழமுதைப் பருகி மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குதிருவிடைமருதூரில் மூகாம்பிகை சந்நிதி இருப்பதை இன்றே அறிந்தேன். ஓரிரு முறை போயிருந்தாலும் மூகாம்பிகையைத் தரிசித்ததில்லை. நல்ல தரிசனம்
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
பதிலளிநீக்குபொழிலவன் புயலவன்...பாடல் ஈர்க்கிறது.
பதிலளிநீக்குஅமுதமே தான். ரசித்தேன்
கீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திருப்பாவை பாடலும், திருவாசக பாடலும் அருமை. திருவிடைமருதூர் இறைவன் இறைவியை தொழுது கொண்டேன். அன்னை மூகாம்பிகையை வணங்கி கொண்டேன். மார்கழியில் கண்ணுக்கும், மனதிற்கும் உகந்ததாக தெய்வ தரிசனங்களை தரும் உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை... ராமா ராமா ...
பதிலளிநீக்கு