நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***
-: குறளமுதம் :-
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு..106
*
-: அருளமுதம் :-
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை..
திருப்பாடல் - 14
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்..14
*
-: ஆழ்வார் திருமொழி :-
மாலுங் கருங்கடலே என்நோற்றாய் வையகமுண்டு
ஆலின் இலைத்துயின்ற ஆழியான் - கோலக்
கருமேனிச் செங்கண்மால் கண்படையுள் என்றும்
திருமேனி நீதீண்டப் பெற்று.. 2100
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-
*
-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்
திருத்தலம்
திருக்கருகாவூர்
இறைவன்
ஸ்ரீ முல்லைவனநாதர்
அம்பிகை
ஸ்ரீ கர்ப்ப ரக்ஷாம்பிகை
ஸ்ரீ கரு காக்கும் நாயகி
தீர்த்தம் ஷீர தீர்த்தம்
தலவிருட்சம்
முல்லைக் கொடி
கர்ப்பம் தரிக்கவும்
கரு நழுவாதிருக்கவும்
திருவருள் புரிந்து
கருவினைக் காத்து
கைகளில் தருபவள்..
குழந்தைப் பேறு வேண்டி
கண்ணீர் சிந்தும்
தம்பதியர்க்கு தாயாகி நிற்பவள்
ஸ்ரீ கர்ப்ப ரக்ஷாம்பிகை..
கண்ணாரக் காணும் உண்மை இது..
நந்தி கணபதி
முல்லைவன நாதர் மூவரது திருமேனியும் சுயம்பு..
தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து அடிக்கடி பேருந்துகள் இயங்குகின்றன..
*
முத்தி லங்குமுறுவல் உமை அஞ்சவே
மத்த யானைமறுக உரி வாங்கிய
கத்தை போர்த்தகட வுள்கரு காவூர் எம்
அத்தர் வண்ணம் அழ லும் அழல் வண்ணமே.. 3/46
-: ஸ்ரீ ஞானசம்பந்தப் பெருமான் :-
*
-: திருவாசகத் தெள்ளமுதம் :-
திருகோத்தும்பி
திருப்பாடல் எண் - 14
கருவாய் உலகினுக் கப்புறமாய் இப்புறத்தே
மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி
அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ..
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
மாசற்ற மாலவன், சிறப்பான சிவனின் தாள் வணங்குவோம்.
பதிலளிநீக்குஶ்ரீரங்கநாயகித்தாயார் தரிசனத்துக்கும் கர்பரக்ஷாம்பிகை தரிசனத்துக்கும் நன்றி. திருக்கருகாவூர் பல முறை போயாச்சு. இங்கே ஶ்ரீரங்கத்திலிருந்து காலை கிளம்பிப் போனால் பதினோரு மணிச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துடலாம். அம்மாதிரியும் 2,3 முறை போனோம்.
பதிலளிநீக்குநம்ம அப்பாதுரையோட தாத்தா ஊர் திருக்கருகாவூர். (அம்மாவழி)
பதிலளிநீக்குஇறைவியர் தரிசனம் அருமை.
பதிலளிநீக்குகர்பரஷாம்பிகை என்றாலே எனக்கு உடனே சென்னை மருத்துவர் ஜெயம் கண்ணன் அவர்கள் நினைவுக்கு வந்துவிடுவார்கள். அவர் தன் மருத்துவமனைக்கு இப்பெயர் தான் வைத்துள்ளார். நல்ல மருத்துவர். இக்கோயிலுக்கு அவர் நிறைய செய்வதுண்டு என்றும் கேள்விப்பட்டதுண்டு
கீதா
ஓம் நம சிவாய...
பதிலளிநீக்குஇறைவனின் தாள் போற்றுவோம்.
பதிலளிநீக்குதுளசிதரன்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திருப்பாவை, ஆழ்வார் பாடல், திருவாசக பாடல்கள் எப்போதும் போல் அருமை. திருக்கருகாவூர் ஸ்ரீகர்ப்பரஷாம்பிகையை தரிசித்து கொண்டேன்.குழந்தைச் செல்வம் இல்லாதவருக்கு அச்செல்வத்தை அருளும்படி வேண்டிக் கொண்டேன். தாயே நீயே துணை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.