நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***
-: குறளமுதம் :-
அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.. (96)
*
-: அருளமுதம் :-
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை..
திருப்பாடல் - 11
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்..
*
-: ஆழ்வார் திருமொழி :-
வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை,
இடராழி நீங்குகவே என்று.. 2082
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-
*
-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்
திருத்தலம் - பிரமபுரம்
(சீர்காழி)
இறைவன்
ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்
ஸ்ரீ தோணிபுரத்தீசர்
அம்பிகை
திருநிலைநாயகி
ஸ்ரீபிரஹன்நாயகி
தீர்த்தம் - பிரம்மபுரம்
தலவிருட்சம் - பவளமல்லி
பன்னிரண்டு பெயர்களை உடையது இத்திருத்தலம்.. அவை 1) பிரமபுரம், 2) காழி, 3) வேணுபுரம், 4) புகலி,
5) வெங்குரு, 6) தோணிபுரம்,
7) பூந்தராய், 8) சிரபுரம்,
9) புறவம், 10) சண்பை,
11) கொச்சைவயம்,
12) கழுமலம் - என்பன..
ஆதியில் நான்முகன் வழிபட்ட் தலம்.. ஊழியிலும் பெயராத திருத்தலம் என்பதால் தோணிபுரம்..
ஞான சம்பந்தப் பெருமான்
திருத்தோற்றமுற்ற
திருத்தலம்..
பிரம்ம தீர்த்தக்
கரையில் தான்
சம்பந்தருக்கு ஞானப் பாலூட்டினாள் அம்பிகை..
ஸ்ரீ சட்டநாதர் சந்நிதி விசேஷமானது..
*
எம்பிரான் எனக்கமுதம் ஆவானுந் தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானுந் தழலேந்து கையானுங்
கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்
வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே.. (2/40)
-: ஸ்ரீ ஞானசம்பந்தப் பெருமான் :-
*
-: திருவாசகத் தெள்ளமுதம் :-
- திருக்கோத்தும்பி -
திருப்பாடல் எண் - 1
பூவேறு கோனும்
புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும்
நாரணனும் நான்மறையும்
மாவேறு சோதியும்
வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே
சென்றூதாய் கோத்தும்பீ..
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
இக்கோயில் சென்றிருக்கிறேன், சட்டநாதரையும் தரிசித்திருக்கிறேன். ஒரே ஒரு முறை. ஆயினும் பிரமபுரம் திருத்தலத்தின் பிற பெயர்களையும் உங்கள் வழி அறிந்து கொண்டேன். நன்றி துரை அண்ணா. தோணிபுரம் அழகான பெயர்.
பதிலளிநீக்குகீதா
ஹரி ஓம் நமச்சிவாய...
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திருப்பாவை பாடல் அருமை. படங்கள் மனதை பக்தியோடு நிறைக்கின்றன. சீர்காழி பிரமபுரம் ஈஸ்வரரை வணங்கி கொண்டேன். இத்திருத்தல கோவிலின் பன்னிரண்டு பெயர்கள் குறித்த தகவலும் அறிந்து கொண்டேன். திருஞான சம்பந்தருக்கு அருளிய அன்னை உமையாள் அனைவரையும் அன்போடு காத்தருள வேண்டும். திருவாசக தெள்ளமுதம் பாடி நடராஜரை நமஸ்கரித்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஓம் நம சிவாய...
பதிலளிநீக்குவாழ்க வையகம்...
பதிலளிநீக்குசீர்காழிக்கு ஒரே ஒரு முறைதான் போனோம். அருமையான தரிசனம் கிடைத்தது. இன்னொரு தரம் வாய்ப்புக் கிடைத்தும் போக முடியலை. :(
பதிலளிநீக்குமுகில்வண்ணன் - மழைநீர் கட்டி நிற்கும் கருத்த திரண்ட மேகம் போல,கருணை வெள்ளம் பொழிய நிற்கும் கிருஷ்ணபகவானை போற்றி பாடுவோம் ..
பதிலளிநீக்கு