சூர சங்காரம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து
இன்று திருத்தலங்கள் பலவற்றிலும்
ஸ்ரீ முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நிகழ்கின்றது...
நேற்றைய வைபவத்தின் திருக்காட்சிகள் சிலவற்றை
இன்றைய பதிவினில் காணலாம்...
உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினர் தமக்கு
மனமார்ந்த நன்றி...
ஸ்ரீ சிங்காரவேலன் - சிக்கல்.. திருஆரூர் (Dt)., |
ஆட்டுக்கிடா வாகனத்தில் சிங்கார வேலன் |
தேவியருடன் ஸ்ரீ சிங்கார வேலன்.. |
காஞ்சி குமரகோட்டம் |
சங்கரன்கோயில் |
குமார வயலூர் - திருச்சி.. |
பெருவாழ்வு பெற்ற சூரன் |
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே..
- அருணகிரியார் :-
***
இன்று அதிகாலையில்கார்த்திகைத் தீபத் திருவிழாவிற்காக
திருஅண்ணாமலையில் திருக்கொடியேற்றப்பட்டுள்ளது...
காணொளிகளையும் படங்களையும் பகிர்ந்து கொண்ட
சிவனடியார் திருக்கூட்ட நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி...
வந்தித்திருக்கும் அடியார்தங்கள் வருமேல் வினையோடு
பந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரமனுறை கோயில்
முந்தியெழுந்த முழவின்ஓசை முதுகல் வரைகள்மேல்
அந்திப்பிறைவந் தணையுஞ் சாரல் அண்ணாமலையாரே.. (1/69)
-: திருஞானசம்பந்தர் :-
ஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண்தோள் சுடர்மழுப் படையி னானே
ஆதியே அமரர் கோவே அணிஅணா மலை யுளானே
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினை விலேனே..(4/63)
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ
படங்கள் அனைத்தும் அற்புதம்...
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் மிக நன்றாக இருக்கிறது ஐயா/அண்ணா. பாடல்களும்.
பதிலளிநீக்குதுளசிதரன், கீதா
கீதா: நான் தினமும் உருவாய் அருவாய் உளதாய் இலதாய் அந்த நான்கு வரிகளைச் சொல்லுவதுண்டு...
முருகன் படங்கள் எல்லாம் அழகு.
பதிலளிநீக்குஅடுத்து கார்த்திகை விழா வந்து விட்ட்தே!
உங்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும் நன்றி.
முருகப் பெருமான் தரிசனத்துக்கு நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் ஜி
பதிலளிநீக்குகாணொளிகள் கண்டு தரிசித்தேன்
இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு கார்த்திகைக்கு. படங்களும் பகிர்வும் அருமை. மிக்க நன்றி. தெய்வானை திருமண நிகழ்வைத் தொலைக்காட்சிகளில் பார்க்கக் கிடைக்கவில்லை. :( நாளை உங்கள் படங்களில் பார்க்கலாம் என நம்புகிறேன்.
பதிலளிநீக்குகோவில் விழாக்கள் பற்றி தெரிய வாருங்கள் தஞ்சையம்பதி தளத்துக்கு
பதிலளிநீக்கு