இன்று ஸ்ரீ கந்த சஷ்டித் திருவிழா
சிக்கலில் வேல் வாங்கி
செந்தூரில் போர் முடித்த நாள்...
ஸ்ரீ சிங்காரவேலன் - சிக்கல் - திருஆரூர்(Dt).. |
செந்தூரில் போர் முடித்த நாள்...
ஆணவ மாயா கன்மம் எனும் மும்மலங்களின்
மொத்த வடிவாய்த் திரிந்த அசுரர்க் கூட்டம் அழிந்த நாள்..
இன்றைய பதிவில்
அருணகிரியார் அருளிச் செய்த
கந்தர் அலங்காரத் திருப்பாடல்கள்..
ஸ்ரீ முத்துக்குமாரஸ்வாமி.. பண்பொழில் - தென்காசி.. |
பேற்றைத் தவஞ்சற்று மில்லாத என்னைப்ர பஞ்சமென்னும்
சேற்றைக் கழிய வழிவிட்ட வா - செஞ் சடாடவிமேல்
ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே..(001)
தேரணி யிட்டுப் புரமெரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரெளஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடக நெளிந்தது சூர்ப்
பேரணி கெட்டது தேவந்த்ர லோகம் பிழைத்ததுவே..(003)
குமாரகோயில் - வேளிமலை - கன்யாகுமரி.. |
மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற்
கைதான் இருப துடையான் தலைப்பத்துங் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே..(022)
நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
காலத்தை வென்றிருப்பார் மரிப் பார்வெறுங் கர்மிகளே..(026)
ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி - எண்கண் - திருஆரூர்(Dt).. |
பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கும் அமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே..(047)
நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற நீலவள்ளி
முற்றாத் தனத்திற் கினிய பிரானிக்கு முல்லையுடன்
பற்றாக்கை யும்வெந்து சங்க்ராம வேளும் படவிழியாற்
செற்றார்க் கினியவன் தேவந்த்ர லோக சிகாமணியே..(058)
***
திருச்செந்தில்நாதன்.. |
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே..(072)
-: கந்தர் அலங்காரம் :-
-: கந்தர் அலங்காரம் :-
*** *** ***
ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானையுடன் ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி - விராலிமலை.. |
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க
வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க
செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியாரெல்லாம்..
-: கந்தபுராணம் :-
******
ஆன்றோர்கள் அருளிய உரை வழி நின்று
கடந்த ஐந்து நாட்களும்
கந்தனின் கருணை சிந்திக்கப்பட்டது...
மனமறிந்த திருப்பாடல்களைப் பகிர்ந்த வேளையில்
மேலும் விவரங்கள்
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..
நாளும் தளத்திற்கு வருகையளித்து
ஊக்கப்படுத்திய தமிழ் நெஞ்சங்கள்
அனைவருக்கும் வணக்கம்..
***
முருகா சரணம்... முதல்வா சரணம்...
முத்துக் குமரா... சரணம் சரணம்...
வெற்றி வேல்.. வீரவேல்..
ஃஃஃ
பகை முடித்த நாள் என்பதற்கு மாற்று வார்த்தை போடுதல் நலம். இறைவனுக்கேது பகை? குட்மார்னிங்.
பதிலளிநீக்குஅது சூரனின் பகை! குமரனுக்கு அல்ல! சூரனைக் கொல்லாமல் அவன் தன்னிடம் கொண்டிருந்த பகையைத் தானே முடித்து வைக்கிறார்.
நீக்குகந்த சஷ்டிக்கொரு திருநாள்... நம் வாழ்வில் சுடரொளிப் பெருநாள்...
பதிலளிநீக்குதரிசனம் செய்துகொண்டேன்.
கந்தர் அலங்காரம் வாசித்தேன். கந்தனின் அலங்காரம் ரசித்தேன், திளைத்தேன்.
பதிலளிநீக்குபாடல்கள் பாடி மகிழ்ந்தேன்.படங்கள் நல்ல தேர்வு.
பதிலளிநீக்குமுருகனை சிந்தித்து மகிழ்ந்தோம் கந்த சஷ்டி நாளில்.
வாழ்த்துக்கள்.
கந்தர் அலங்கார பாடல்கள் அருமை.
பதிலளிநீக்குமிகவும் அருமை ஐயா... நன்றி...
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஉருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை..
வெற்றி வேல்
முருகனுக்கு அரோகரா
அரோகரா...
முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்
பதிலளிநீக்குசிக்கல் வேலவன் சிக்கல் இல்லா வாழ்வை எல்லோருக்கும் நல்க வேண்டும்...சரணம்!!
படங்கள் பாடல்கள் வழக்கம் போல் அருமை அண்ணா..
கீதா
நல்ல பதிவுக்கு நன்றி. பக்கத்திலே இருந்தாலும் விராலிமலைக்கு இன்றுவரை போனதும் இல்லை. ஏன்னே தெரியலை! தொலைக்காட்சியில் திருச்செந்தூர் காட்டிக் கொண்டிருந்தனர். பார்த்தோம். கூட்டம் தான் மலைக்க வைக்கிறது.
பதிலளிநீக்குஇன்னும் சூர சம்காரம் ஆகவில்லை. இப்போத் தான் சூரன் முருகனை எதிர்க்க வந்திருக்கான்.
பதிலளிநீக்கு