நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 06, 2018

இப்படிக்கு..

உங்களுடன் நான்...


ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்கு ஓடுகின்ற மேகங்களைப் போல
விடுமுறை நாட்கள் ஓடிப் போயின...

வெள்ளிக்கிழமை மதியம் நலமுடன் குவைத்திற்குத் திரும்பினேன்..

இந்த விடுமுறை நாட்களில் நிறைவேறிய எண்ணங்கள் எத்தனை?..

பற்பல!.. 

ஆனாலும்,

அன்புக்குரிய நண்பர்களைச்
சந்திக்க இயலாமல் போனது மனதை உறுத்துகின்றது...

அந்த இயலாமையைச் சொல்லவும் தயக்கமாக இருக்கின்றது...

மேலும் Galaxy ல் இணைக்கப்பட்ட இணையம் -
மடிகணினியுடன் சரியாக ஒத்துழைக்கவில்லை...

பதிவுகள் அனைத்தையும் Galaxy வழியாகவே இயக்கினேன்...

இதனால், 
மாமதுரைத் திருவிழாப் பதிவுகளில் படங்கள் மட்டுமே வெளியாகின..

பதிவுகளில் எனது கைவண்ணத்தைத் தீட்ட முடியவில்லை...

இடையில் -
எங்கள் பிளாக் தளத்தில்
மூங்கில் பாலம் கதையும் வெளியானது...

பாராட்டி மகிழ்ந்த நண்பர்களுக்கு
மகிழ்வுடன் நன்றி சொல்ல முடியவில்லை...

மற்ற தளங்களை வாசித்து கருத்துரை கூறவும் முடியவில்லை..

கைத்தொலைபேசி வழியாக பதிவுகளைக் கண்டு
அவற்றில் விரிவாக கருத்துரைப்பது மிகவும் சிரமமாக இருந்தது...

அன்பின் நண்பர்கள் பொறுத்தருளவேண்டும்...



அங்குமிங்கும் பயண நேரத்தில் 
விண்ணிலிருந்தும் மண்ணிலிருந்தும் சுடப்பட்டவை இன்றைய பதிவில்!..








துபாய் விமான நிலையத்திலிருந்து 
புறப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் - கடல் நடுவே 
புதிதாக உருவாக்கப்படும் தீவு ஒன்றினைக் கண்டேன்...

ஜன்னல் ஓர இருக்கையைக் கேட்டு வாங்குவது எவ்வளவு மகிழ்ச்சி!..

இதோ அந்த மகிழ்ச்சி - தங்களுக்காகவும்!...



இனிவரும் நாட்கள் 
நலமுடன் அமைவதாக...

வாழ்க நலம்!..
ஃஃஃ

23 கருத்துகள்:

  1. பிரம்மாண்ட மேகம் முதல் படத்தில் ராட்சத யானையை அருகில் பார்ப்பது போல இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. ஸோ.. குவைத் திரும்பி விட்டீர்கள். இனிய நினைவுகளைத் தேக்கி வைத்து, அடுத்த பயணம் வரைக் காத்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      தீபாவளி முடிந்ததும் அடுத்த தீபாவளி எப்போது?.. என்று
      சின்னப் பிள்ளைகள் காலண்டரில் தேடுவார்களே -
      அதைப் போலாகி விட்டது..

      நீக்கு
  3. அனைத்துப் படங்களையும் ரசித்தேன். புதிய தீவா? அது என்னது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      பிறை நிலாவைப் போல புதிதாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்...

      நீக்கு
  4. ஊரிலிருந்து வந்து விட்டீர்களா?
    ஊரின் நினவாகவே இருக்கும்.
    பகிர்ந்த படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்...

      வீட்டு நினைவாகத் தான் இருக்கின்றது...
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. விடுமுறையைக் கழித்துவிட்டு மறுபடி திரும்பும்போது மனம் வெறுமையுடன் இருக்கும். என்ன இருந்தாலும் சொந்த, பந்தங்களுடன் இருப்பது தனி தான்! நல்லபடியாக விடுமுறை தினங்கள் கழிந்திருக்கும் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்...

      இருந்தாலும் - மகிழ்வான தருணங்களையும் பயணம் சென்ற இடங்களையும் மனம் அசை போட்டுக் கொண்டிருக்கின்றது.....
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. குவைத் திரும்பி விட்டீர்களா ஜி ?

    தங்களை சந்திக்காமல் போனது வருத்தமளிக்கிறது அலைபேசியில் உரையாடியது மகிழ்ச்சி.
    வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...

      எனக்கும் வருத்தமாகத் தான் இருக்கின்றது...
      ஆனாலும் சூழ்நிலை அப்படி ஆகி விடுகின்றது..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. ஆஹா! அண்ணா குவைத் திரும்பிவிட்டீர்க்ளா? விமானத்திலிருந்து சுடப்பட்ட படங்கள் அருமை. வான் மேகம்....

    பிறை போன்ற வடிவில் தீவா....?! மனிதர்கள் மலையையும் விடவில்லை கடலையும் விடவில்லை!

    தாய்நாட்டு அனுபவங்கள், சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கும்...கொஞ்ச நாள் வெறுமையாக இருக்கும். ஆனால் அனுபவங்களை நினைத்துக் கொண்டு மகிழ்ந்து வேலையில் இறங்கிவிட்டால் பொழுது ஓடுவதும் தெரியாதுதான்...நலமுடன் துபாயில் இறங்கியது மகிழ்ச்சி அண்னா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோ..

      தாங்கள் சொல்லியபடிதான் மனக்குதிரை ஓடிக்கொண்டிருக்கின்றது..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. நீங்கள் துபாயிலிருந்துமா எபியில் எபியில் நீங்கள் ஃபர்ஸ்ட் வரலை!! ஆஹா என்னமோ நடக்குது!! ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா...

      அப்படிப் போகின்றதா கதை!... என்ன செய்வது?..
      எபி இங்கே திறப்பதற்குள் காஃபி ஆத்தி விட்டு காலை டிபனையும் முடித்து விடுகின்றார்கள்!...

      மறுபடியும் உங்கள் தெருவில் கேபிள் வேலைக்காக
      பள்ளம் தோண்டப் போகின்றார்களாமே!?.. பட்சி சொன்னது!..

      எதுக்கும் கவனமாக இருந்து கொள்ளவும்1.

      நீக்கு
  10. ஆவ்வ்வ்வ்வ்வ் துரை அண்ணன் ஊருக்குத் திரும்பிட்டார்ர்ர்ர்ர்ர்.. வெல்கம் பக்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோ..

      தங்கள் வருகை மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. முன்பு போலிருந்தால் நானே உங்களை வந்து சந்தித்திருப்பேன் மனம் இளமையாக இருந்தாலும் உடல் வயோதிகம் தானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா.. தங்களுக்கு நல்வரவு..

      தங்களையெல்லாம் காண வேண்டும் என்பது ஆவல்..
      ஆயினும் அருகிருக்கும் கரந்தை ஜெயக்குமார்,
      தஞ்சை Dr.B. ஜம்புலிங்கம் ஆகியோரைக் கூட சந்திக்க இயல வில்லை..

      மனதில் நாணம் மிகுத்து வருகின்றது...
      என்ன செய்ய.. சூழ்நிலை அப்படியானது..

      தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..