அருள்தரும் சொரிமுத்து ஐயனார் தரிசனத்துக்கு முன்பாக
பாபநாசத்தில் எடுக்கப்பட்ட மேலும் சில படங்கள்
இன்றைய பதிவில்!...
நெல்லை மாவட்டத்தில் சிறப்பாகக்
குறிப்பிடப்படும் நவ கயிலாயத் திருத்தலங்களுள்
முதன்மையானது - ஸ்ரீ பாபநாச நாதர் திருக்கோயில்...
நவ கயிலாயம் எனப்படும் திருத்தலங்கள்
நவக்கிரக தலங்களாகவும் இன்றைய நாட்களில் குறிக்கப்படுகின்றன...
கயிலாயத்துக்கு இணையான திருத்தலங்களை
நவக்கிரகங்களுக்கு உரிய தலங்கள் என்று சொல்வது எப்படி!?...
புரியவில்லை!...
நவக்கிரக தோஷ பரிகாரத் தலங்கள்
என்று சொல்லப்படும் அளவில்
பாபநாசம் - முதலாவதாகின்றது..
இங்கு தாமிரபரணியில் நீராடி ஈசனை வழிபடுவதனால்
பித்ரு தோஷம் நீங்குகின்றது என்பது சிறப்பு...
எனவே இங்கு தோஷ பரிகார வழிபாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன..
அமாவாசை நாட்களில் பெருந்திரளாக மக்கள் வந்து வழிபடுகின்றனர்...
எனினும் திருக்கோயில் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றது.
திருக்கோயிலில் மழைநீர் சேகரிப்பது பாராட்டுக்குரியது..
தாமிரபரணியின் படித்துறையும் சுற்றுப் புறங்களும்
சொல்லும் நிலையில் இல்லை...
ஈரத்துணிகளைக் கழற்றிப் படித்துறையில் போட்டுவிட்டுக் கரையேறுவதையே மக்கள் இலட்சியமாக் கொண்டிருக்கின்றனர்...
அங்கே வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளில்
பழந்துணிகளைப் போடுவார் மிகக் குறைவே...
படித்துறைகளில் எண்ணெய் மற்றும் ஷாம்பு தேய்த்துக் கொண்டு
அந்தக் கழிவுப் பைகளை அங்கேயே விட்டுவிட்டுச் செல்கின்றனர்..
அவை எல்லாம் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தானவை
என்பதை உணர்ந்து கொள்வதேயில்லை..
தாமிரபரணியின் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும்
பாறைச் சிற்பங்களின் மீது சோப்பு ஷாம்பு முதலியவற்றின்
இரசாயனங்கள் படிந்திருப்பதைக் காண்பதற்கு வருத்தமாக இருந்தது...
அதேபோல
இந்த மக்கள் செய்யும் தவறுகளுக்குள் மிகப் பெரிய தவறு
பாலிதீன் பைகளில் உணவுப் வகைகளைக் கொண்டு வந்து
தின்று விட்டு மிச்சம் மீதியை அப்படியே குரங்குகளிடத்தில் எறிவது...
மேலே காணும் படத்திலுள்ள அறைகள் -
தாமிரபரணியில் குளித்து விட்டுக் கரையேறும் பெண்கள்
உடை மாற்றுவதற்கானவை..
ஆனால், இந்த அறைகளைப் பயன்படுத்துவதற்குக் காசு வசூலிக்கிறார்கள்...
என்ன நியாயம் என்று தெரியவில்லை...
பாலிதீன் பையைக் கைப்பற்றிய குரங்கு
அதில் ஏதோ அமிர்தம் இருப்பதைப் போல
அதை எடுத்துக் கொண்டு ஓடுவதும்
மற்ற குரங்குகள் அதைத் துரத்துவதும் -
அந்தப் பாலிதீன் பையை தாறுமாறாகத்
தலையில் மாட்டிக் கொண்டு தடுமாறுவதும் - கொடுமை....
அந்தக் காட்டுக் குரங்குகளின் அல்லலைப் பார்த்து
இந்த நாட்டுக் குரங்குகள் சிரித்து மகிழ்வது அதைவிடக் கொடுமை...
இயற்கையையும் மற்ற விலங்குகளையும்
வாழவிட வேண்டும் என்பதில் கொஞ்சங்கூட
ஆர்வமேயில்லை....
பாபநாசம் கோயிலிலிருந்து மலைக்கு மேலே
மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது அகத்தியர் அருவி...
அருவிக்கு முன்னால் முருகன் கோயிலும் அதனுடன் இணைந்ததாக
அகத்தியர் சந்நிதியும் விளங்குகின்றன...
நேரமின்மையால் அகத்தியர் அருவிக்குச் செல்லவில்லை..
முருகன் கோயிலுக்கு அருகில் எடுக்கப்பட்ட படங்கள்
இதன் கீழுள்ளவை...
இன்றைய பதிவிலுள்ள -
தாமிரபரணி பாறைச் சிற்பங்கள், பாபநாசம் கோயில் மற்றும்
சிங்கவால் குரங்களின் படங்கள் தங்களைக் கவர்ந்திருக்கும் -
என, நம்புகின்றேன்...
பாபநாசத்தில் எடுக்கப்பட்ட மேலும் சில படங்கள்
இன்றைய பதிவில்!...
நெல்லை மாவட்டத்தில் சிறப்பாகக்
குறிப்பிடப்படும் நவ கயிலாயத் திருத்தலங்களுள்
முதன்மையானது - ஸ்ரீ பாபநாச நாதர் திருக்கோயில்...
நவ கயிலாயம் எனப்படும் திருத்தலங்கள்
நவக்கிரக தலங்களாகவும் இன்றைய நாட்களில் குறிக்கப்படுகின்றன...
கயிலாயத்துக்கு இணையான திருத்தலங்களை
நவக்கிரகங்களுக்கு உரிய தலங்கள் என்று சொல்வது எப்படி!?...
புரியவில்லை!...
நவக்கிரக தோஷ பரிகாரத் தலங்கள்
என்று சொல்லப்படும் அளவில்
பாபநாசம் - முதலாவதாகின்றது..
திருக்கோயிலுக்குப் பின்னால் உள்ள ஐயனார் சந்நிதி |
பித்ரு தோஷம் நீங்குகின்றது என்பது சிறப்பு...
எனவே இங்கு தோஷ பரிகார வழிபாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன..
அமாவாசை நாட்களில் பெருந்திரளாக மக்கள் வந்து வழிபடுகின்றனர்...
எனினும் திருக்கோயில் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றது.
திருக்கோயிலில் மழைநீர் சேகரிப்பது பாராட்டுக்குரியது..
தாமிரபரணியின் படித்துறையும் சுற்றுப் புறங்களும்
சொல்லும் நிலையில் இல்லை...
ஈரத்துணிகளைக் கழற்றிப் படித்துறையில் போட்டுவிட்டுக் கரையேறுவதையே மக்கள் இலட்சியமாக் கொண்டிருக்கின்றனர்...
அங்கே வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளில்
பழந்துணிகளைப் போடுவார் மிகக் குறைவே...
படித்துறைகளில் எண்ணெய் மற்றும் ஷாம்பு தேய்த்துக் கொண்டு
அந்தக் கழிவுப் பைகளை அங்கேயே விட்டுவிட்டுச் செல்கின்றனர்..
அவை எல்லாம் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தானவை
என்பதை உணர்ந்து கொள்வதேயில்லை..
தாமிரபரணியின் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும்
பாறைச் சிற்பங்களின் மீது சோப்பு ஷாம்பு முதலியவற்றின்
இரசாயனங்கள் படிந்திருப்பதைக் காண்பதற்கு வருத்தமாக இருந்தது...
அதேபோல
இந்த மக்கள் செய்யும் தவறுகளுக்குள் மிகப் பெரிய தவறு
பாலிதீன் பைகளில் உணவுப் வகைகளைக் கொண்டு வந்து
தின்று விட்டு மிச்சம் மீதியை அப்படியே குரங்குகளிடத்தில் எறிவது...
உடை மாற்றும் அறைகள் |
தாமிரபரணியில் குளித்து விட்டுக் கரையேறும் பெண்கள்
உடை மாற்றுவதற்கானவை..
ஆனால், இந்த அறைகளைப் பயன்படுத்துவதற்குக் காசு வசூலிக்கிறார்கள்...
என்ன நியாயம் என்று தெரியவில்லை...
அதானே.. எனக்கும் ஒன்னும் புரியலையே!.. |
நல்லவேளை.. நாம கொரங்காவே இருந்துட்டோம்!.. |
அதில் ஏதோ அமிர்தம் இருப்பதைப் போல
அதை எடுத்துக் கொண்டு ஓடுவதும்
மற்ற குரங்குகள் அதைத் துரத்துவதும் -
அந்தப் பாலிதீன் பையை தாறுமாறாகத்
தலையில் மாட்டிக் கொண்டு தடுமாறுவதும் - கொடுமை....
அந்தக் காட்டுக் குரங்குகளின் அல்லலைப் பார்த்து
இந்த நாட்டுக் குரங்குகள் சிரித்து மகிழ்வது அதைவிடக் கொடுமை...
இயற்கையையும் மற்ற விலங்குகளையும்
வாழவிட வேண்டும் என்பதில் கொஞ்சங்கூட
ஆர்வமேயில்லை....
எல்லாரும் நல்லாருக்கணும்.. பெருமானே!.. |
மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது அகத்தியர் அருவி...
அருவிக்கு முன்னால் முருகன் கோயிலும் அதனுடன் இணைந்ததாக
அகத்தியர் சந்நிதியும் விளங்குகின்றன...
நேரமின்மையால் அகத்தியர் அருவிக்குச் செல்லவில்லை..
முருகன் கோயிலுக்கு அருகில் எடுக்கப்பட்ட படங்கள்
இதன் கீழுள்ளவை...
பாலிதீன் பையுடன் அப்பாவி வானரம் |
இன்றைய பதிவிலுள்ள -
தாமிரபரணி பாறைச் சிற்பங்கள், பாபநாசம் கோயில் மற்றும்
சிங்கவால் குரங்களின் படங்கள் தங்களைக் கவர்ந்திருக்கும் -
என, நம்புகின்றேன்...
அடுத்த பதிவில் -
ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் திருக்கோயில் தரிசனம்..
வாழ்க வளமுடன்..
ஃஃஃ
குட்மார்னிங் ஸார். நவ கைலாயத் தலங்கள் எப்படி நவக்கிரஹ தலங்களாகின என்பதற்கு கீதாக்கா, நெல்லை போன்றோர் பதில் சொல்லக்கூடும்!
பதிலளிநீக்குவருக ஸ்ரீராம்...
நீக்குசில ஜோதிடர்களும் வியாபார ஊடகங்களும் தான் இவ்வாறான மடை மாற்றத்துக்குக் காரணம்...
பார்ப்போம் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று...
அவருக்கு மகிழ்ச்சி நன்றி..
இதற்கான காரணங்களாக நான் கருதுவதை இங்கு மெதுவாக எழுதறேன்.
நீக்குபொதுவா பக்தியை விட, நம்ம பிரச்சனையை உடனே தீர்க்கும் மந்திரவாதியாகவும், மருத்துவராகவும்தான் கோவில்களையும் சன்னிதிகளையும் பார்க்கிறோம். நமக்கு சொந்த வேலைகள் நிறைய இருப்பதாகவும், மருத்துவரைப் பார்த்தோமா அடுத்த வேலைக்குப் போனோமா என்பதுதான் பொதுவாக நம்மிடம் இருக்கும் உள்ளம் (பொதுவாக). ஒவ்வொரு திருத்தலத்தையும் சேவிக்கும், தரிசனம் செய்யும் முறை இருக்கு. அதையும் நாம் தெரிந்துகொள்வதில்லை, சொல்லித்தரவும் ஆட்கள் குறைவு, அதற்காக நாம் ஒதுக்கும் நேரமும் குறைவு.
நீக்குஎனக்கும் பல நேரங்களில் இவ்வாறு தோன்றுவதுண்டு. ஒரு தடவை புதன் சன்னிதியில் (ஊர் மறந்துவிட்டது.. நவக்கிரஹ தலம்தான்) சேவித்துவிட்டு, வேறு எந்த சன்னிதியையும் தரிசிக்காமல் (கோவிலில் மூலவரையும்) கிளம்பிவிட்டேன். அதுபோல் நள்ளாற்றிலும் நடந்திருக்கிறது. திருப்பதியிலும், முதலில் வராஹர் சன்னிதிக்குப் போய் சேவித்தபின்புதான், திருப்பதி கோவிலுக்கே செல்லவேண்டும். அதையும் செய்வதில்லை.
பல கோவில்களில் தேவையான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவதில்லை. இதர்கு முதல் காரணம், அந்த அந்த ஊரை விட்டு மக்கள், தலைமுறையாக வெளியேறியதுதான். அதனால் சில பல வேலைகளைச் செய்து அந்தக் கோவிலுக்கு மக்களை வரவழைக்கின்றனர்.
வைணவர்கள் பொதுவா அந்நிய தெய்வத்தை வணங்குவதில்லை (கோவிலுக்குப் போவதில்லை) என்பதால், அவர்கள் செல்லும்படியான வைணவக் கோவில்களைப் பரிகாரத் தலங்களாகச் சொல்கின்றனர். உதாரணம் நெல்லை நவ திருப்பதிகள், நவக்கிரஹங்களுக்கு மாற்றாகச் சொல்லப்படுகிறது. சமீபத்தில் என்னிடம் ஒரு ஜோஸியர், ராகு கேதுவுக்கு பாம்பணைமேல் பள்ளிகொள்ளும் ரங்கனாதனையும், இதுபோல் ஒவ்வொரு கிரஹத்துக்கும் ஒன்று சொன்னார்.
இந்த சப்ஜெக்டை எழுதும்போது பல செய்திகள் மனதில் தோன்றுகிறது. முன்னோர் சொன்னது, ஆலயத்துக்கு விளக்கெரிக்க எண்ணெய் கொடுப்பது புண்ணியம், அதாவது ஆலயத்தில் விளக்கு வைப்பது புண்ணியம். அது இப்போ வியாபரமாகி, 2 ரூபாய் தீபத்தை (தீபம் என்று சொல்வதை) எதையோ ஒரு இடத்தில் ஏற்றிவைத்து மன ஆறுதல் கொள்கிறார்கள். இந்த முறையை நான் 10 வருடங்களுக்குள்ளாகவேதான் பார்த்திருக்கிறேன். வியாபாரம் என்பதால் நெய் என்ற பெயரில் கண்ட கண்ட ஆயில் போட்டு, கோவிலைப் பழுதுபடுத்துகிறார்கள்.
இதுக்கு மேலும் எழுதுவது வம்புதான்.
நன்றி நெல்லை.
நீக்குஅன்பின் நெ.த., அவர்களுக்கு நல்வரவு..
நீக்குதாங்கள் கூறியுள்ள கருத்துக்கள் அருமை..
இவற்றையே பதிவில் குறிப்பதற்குத் திட்டமிட்டிருந்தேன்..
இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு பல பதிவுகள் இடலாம்..
திட்டமிட்டுள்ள பதிவுகளுக்குப் பின் இந்தப் பொருளைப் பற்றி விரிவாக பேசுவோம்...
மகிழ்ச்சி.. நன்றி...
மிக அருமை. நாங்களும் அகத்தியர் அருவிக்குப் போகலை. அப்போல்லாம் காமிரா ஃபில்ம் போட்டுப் படம் எடுக்கும் காமிரா என்பதால் அதிகம் எடுத்துச் செல்லவில்லை. படங்களும் எடுக்கவில்லை. இத்தனைக்கும் அப்போவே எழுத்தாளி ஆயிட்டேன்! :)
பதிலளிநீக்குவருக கீதா S...
நீக்குகாமிராவில் ஃபிலிம் போட்டு எடுப்பது தனி மகிழ்ச்சி...
/// அப்ப்ப்பவே.... எழுத்தாளி///
ஆகா... மகிழ்ச்சி.. நன்றி..
மக்கள் சுய ஒழுங்குணர்வு இல்லாமல் இருப்பது வருத்தமே.
பதிலளிநீக்குகாட்டுக்குரங்குகள் - நாட்டுக்குரங்குகள் -
ஹா... ஹா... ஹா... உண்மைதான்.
ஸ்ரீராம்..
நீக்குவாயில்லா ஜீவன்களுக்கு இடையூறு செய்ய எப்படித்தான் மனம் வருகின்றதோ...
சாதாரணமாகவே வனவிலங்குகளுக்கு உணவளித்து அவைகளைச் சோம்பேறியாக்கக் கூடாது என்று சொல்வார்கள். பிளாஸ்டிக் பைகளில் அவைகளுக்கு உணவளிப்பது அநியாயம்.
பதிலளிநீக்குஸ்ரீராம்...
நீக்குநீங்கள் சொல்வது சரிதான்...
ஆனால் அங்கு பழத்தோட்டம் ஏதும் இல்லையே...
குரங்குகளும் பசி இருக்காதா!...
நாங்களும் பிஸ்கட் வாங்கிக் கொடுத்தோம்...
அதுங்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்..
படங்கள் அருமை. ரசித்தேன். முன்னோர் படங்கள் நிறையவே இடம் பெற்றிருக்கின்றன!!
பதிலளிநீக்குஸ்ரீராம்..
நீக்குஇன்னும் நிறைய படங்கள்...
அவைகளை வேறொரு பதிவில் தருகிறேன்..
நன்றி.. மகிழ்ச்சி..
ஹை, நான் ஃபர்ஷ்டோ ஃபர்ஷ்டு!
பதிலளிநீக்குஇரண்டாவது இல்லையோ....!
நீக்குகீதா S...
நீக்குஇன்னும் தூக்கம் கலையலையா!?..
க்ர்ர்ர்ர்ர்ர் இதுக்கு நான் கொடுத்த பதில் எங்கே? நான் பார்த்தப்போ யாருமே இல்லை! ஶ்ரீராம் எங்கேயோ ஒளிஞ்சுட்டு இருந்திருக்கார்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்குஆகா...
நீக்குஇவ்வளவு சீக்கிரம் காஃபி ஆத்தியாச்சா!?...
ஹாஹாஹாஹா!
நீக்குஅன்பின் ஜி
பதிலளிநீக்குஅழகிய படங்கள் தங்களது கை வண்ணத்தில் இரசித்தேன்.
தொடர்கிறேன்...
அன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
மிக அழகிய இடம்...
பதிலளிநீக்குசுத்தமான இடத்தை அசுத்தமாக மாற்றுவதே நம் மக்களின் வேலை..என்ன சொல்ல...
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...
நீக்கு2012ல போய் இருந்தோம். அருவில குளிச்சதோடு சரி. கோவில் விவரம் தெரியாது. மிஸ் பண்ணிட்டேன்ப்பா
பதிலளிநீக்குவருக ராஜி.,
நீக்குதாமிரபரணி பாபநாசம் ஆகியன அகத்திய மகரிஷி உலவிய தலங்கள்...
அங்கே ஆன்ம அதிர்வுகளை நிச்சயம் உணரலாம்..
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நவக்கிரக வழிபாடு எப்போது ஆரமிக்கபட்டதோ அப்போதே மூலவர் பின் தள்ளபட்டு நவக்கிரக வழிபாடு ஆரம்பித்து விட்டது. திருவெண்காடு கோவில் அகோரமூர்த்தி கோவில்,சுவேதாரண்யேசுவரர் கோயில் என்று முன்பு சொல்வார்கள், அது இப்போது புதன்ஸ்தலாமாய் ஆனது மட்டுமல்லாமல் இறைவன் இறைவியை பார்க்க நேரம் இல்லாமல் மக்கள் புதனை மட்டும் வணங்கி அடுத்த நவக்கிரக கோவில் வழிபட ஓடும் நிலையும் பார்க்கிறோம்.
பதிலளிநீக்குபாபநாசம் திருக்கோவில் படங்கள் எல்லாம் அழகு. தாமிரபரணி பாறைச்சிற்பங்கள் அழகு.
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்கு1970 க்குப் பிறகுதான் இப்படியெல்லாம் ஆகியது...
நவக்கிரகத் தலம் என்று சொல்லப்படும் தலங்களுக்குள் திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், ஆலங்குடி, வைத்தீஸ்வரன் கோயில் - இங்குதான் தள்ளுமுள்ளுகளும் அடாவடிகளும் அதிகம்...
சென்ற ஆண்டில் திருவெண்காடு சென்றிருந்தபோது சூழல் சற்றும் மாறுபடாமல் இனிமையாகவே இருந்தது...
திருவெண்காடு, திங்களூர் - இங்கெல்லாம் பெயர்ச்சி விழாக்கள் இல்லையே!..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
கோமதி அரசு மேடம், துரை செல்வராஜு சார் - இரண்டு கருத்துகளும் அருமை.
நீக்குதுரை சார்.. இதைப்பற்றி ஒரு இடுகை வெளியிடுங்க.
நிச்சயமாக எழுதுகிறேன்.. மகிழ்ச்சி..
நீக்குஇடுகையில் படங்களை ரசித்தேன்.
பதிலளிநீக்குஆதங்கத்தை இன்னும் ரசித்தேன். இப்படி எல்லோரும் சிந்திக்கணும். நம்மால் ஒரு மேடைகூட கட்டமுடியாது. நம் முன்னோர்கள் கட்டினதைப் பேணும் திராணியும் இல்லை. அதைக் கெடுக்காமலாவது இருக்கலாமல்லவா?
திருப்பதி புஷ்கரணியில், சபரிமலைக்குப் போய்விட்டு வரும் பக்தர்கள் தங்கள் மாலைகளைக் களைந்து போட்டுவிடுகிறார்கள். ஒருதடவை அங்கு முழுவதும் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். மலைபோல் பாசிமணி கயிறு மாலைகள். ஒரு இடத்தைக் கெடுக்கும், மற்ற பக்தர்களுக்கு ஊறு விளைவிக்கும் பழக்கத்தை யார்தான் ஆரம்பித்துவைக்கிறார்களோ..
பிளாஸ்டிக் வீசி எறிவது விலங்கைக் கொலை செய்யும் குற்றத்துக்கு நிகரானது.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
நீக்குகாட்டுக்குள்ளும் ஆற்றின் ஓரத்திலும் கூட்டமாக உட்கார்ந்து சாப்பிடுபவர்கள் தண்ணீர் பாட்டில்கள் அலுமினிய மற்றும் மெழுகு தாள்கள் இதையெல்லாம் அப்படியே போட்டு விட்டு வருகிறார்கள்...
அவர்களுக்குத் தெரியாதா
இதெல்லாம் தவறு என்று!...
எங்கெங்கும் மடையர் கூட்டம் என்றால் என்ன செய்வது?...
தங்களது கருத்துரைக்கு நன்றி..
பழந்துணிகளை இவ்வாறாகப் போடும் பண்பாடு... தவிர்க்கவேண்டிய ஒன்று.
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குதிருக்கோயில், திருச்சுற்று மற்றும் திருக்குளம் இவற்றின் தூய்மை நம் ஒவ்வொருவராலும் காக்கப்படவேண்டியதே!..
இனிய கருத்துரைக்கு நன்றி..
துரை சார்... மேலே ஒரு பின்னூட்டம் இடும்போது என் மனதில் தோன்றியது இது. நீங்களோ, முனைவர் ஜம்புலிங்கம் சாரோ, கோவில் தரிசனத்தின்போது எந்த எந்த வரிசையில் தரிசனம் செய்யவேண்டும், என்பதைப் பற்றி எழுதணும்.
பதிலளிநீக்குதங்களன்பின் விருப்பத்திற்கு மகிழ்ச்சி..
நீக்குஏதோ நானறிந்தவற்றைக் கூறுகின்றேன்.. திருவருள் துணை..
நன்றி....
துளசி: படங்கள் அழகாக இருக்கின்றன. செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் மக்கள் செய்வது மிகவும் வேதனை. கேரளத்தில் இப்படி நதிகளில் அருவிகளில் யாரும் குளிப்பதில்லை. அதனால் நீர் நிலைகள் பொதுவாகச் சுத்தமாக இருக்கின்றன. பதிவு மிகச்சிறபானபதிவு
பதிலளிநீக்குகீதா: அண்ணா சென்ற பதிவிலேயே கேட்க நினைத்தேன் அப்புறம் இங்கு பார்த்துட்டுக் கேட்கலாம் என்று நினைத்து வந்தால் நான் என்ன கேட்க நினைத்தேனோ அது படமாய்....ஆம் அந்த மண்டபம் மரம். படியிறங்கும் முன் அங்கு மண்டபம், அருகில் மரம் உண்டு அங்குதான் நாங்கள் அமர்ந்து கையில் கொண்டு சென்றதைச் சாப்பிடும் வழக்கம். இப்போதும் அப்படியே இருப்பது போல் உள்ளது.
மக்களை என்ன சொல்ல....நாட்டுக்குரங்குகள் என்று சொல்லியதை ரசித்தேன் அண்ணா. உங்கள் ஆதங்கம் அனைத்தையும் டிட்டோ செய்கிறேன். அறிவிலிக் கூட்டம். என்ன செய்ய...
படங்கள் ரொம்ப அழகு.
கீதா