நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 23, 2014

உவரியில் தேரோட்டம்

புகழ் பெற்ற ஸ்ரீஉவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்  தேரோட்டம் ஜனவரி பதினேழாம் தேதி கோலாகலமாக நடந்தது. 

கடற்கரையில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று சிவ தரிசனம் செய்தனர்.

நெல்லை மாவட்டத்தின் கடலோரத்தில் உள்ள  கிராமம் உவரி.

இங்குதான் புகழ் பெற்ற சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.


சிவபெருமான் சுயம்புலிங்கமாகத் தோன்றியருளிய திருத்தலம் - உவரி. 

தென் தமிழகத்திலுள்ள புகழ் பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக இத்திருக் கோயில் விளங்கி வருகின்றது.


மேலும் - மார்கழி மாதத்தின் எல்லா நாட்களிலும் காலையில் சூரியனின் இளங்கதிர்கள்  கருவறையில் படரும் பெருஞ்சிறப்பினை உடையது  - உவரி ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயில்.

இத்திருக்கோயிலில் - ஆண்டுதோறும் சிறப்புடன் நிகழும் தைத்திருவிழா கடந்த - ஜனவரி ஒன்பதாம் தேதி வியாழக்கிழமை அன்று காலை ஆறு மணி அளவில் அதிர்வேட்டுகள் முழங்க துவஜாரோகணம் நிகழ்ந்தது.


முன்னதாக அதிகாலை மூன்று மணியளவில் திருநடை திறக்கப்பட்டது. நித்ய வழிபாடுகளுக்குப் பின் மங்கல வாத்யங்களுடன் - யானை மீது  கொடிப்பட்டம் ஊர்வலம் நடந்தது.

யதாஸ்தானத்திலிருந்து ஸ்வாமி சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகையுடன் அலங்கார மண்டபம் எழுந்தருளினார். பதினோரு வகையான அபிஷேக ஆராதனைகளுடன் உதய மார்த்தாண்ட பூஜை செய்விக்கப்பட்டது.


தொடர்ந்து விநாயகர் திருவீதி உலா, உச்சி காலபூஜை, சிறப்பு அபிஷேகம்.  மாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப் பின் சுவாமி இந்திர விமானத்தில் ரதவீதிகளில் எழுந்தருளினார்.

தைத்திருவிழா ஜனவரி ஒன்பது முதல் ஜனவரி பதினெட்டாம் தேதி வரை வெகு சிறப்பாக நடந்தது.

திருவிழா நாட்களில் தினமும் காலை 8.30 மணிக்கு விநாயகர் வீதி உலா.

ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு மேல் சுவாமி சந்திரசேகரர்  மனோன்மணி அம்பிகை சமேதராக -

வெட்டி வேர் சப்பரம் மற்றும் கஜ வாகனம், அன்ன வாகனம், இந்திர விமானம், காமதேனு வாகனம், குதிரை வாகனம், கைலாய பர்வதம் - என, பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா எழுந்தருளினர்.

ஒன்பதாம் திருநாள் - பதினேழாம் தேதி வெள்ளிக் கிழமை காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனை. உதய மார்த்தாண்ட பூஜை.

திருக்கோயிலில் இருந்து சுவாமி - அம்பிகையுடன் மேளதாளம் முழங்க  தேருக்கு புறப்பாடு செய்தனர்.

திருத்தேரில் ஸ்வாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

காலை 7.50 மணியளவில் விநாயகர் தேர் இழுக்கப்பட்டவுடன் - 7.55 மணி அளவில் பக்த கோஷங்கள் முழங்க பெரிய திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது.

அப்போது வானில் கருடன்கள் வட்டமிட்டதைக் கண்டு பக்கர்கள் ஆனந்த முழக்கமிட்டனர்.

ஹரஹர கோஷங்களுடன்  திருத்தேர் இழுக்கப்பட்டது.

ரத வீதிகளில் வலம் வந்த தேரை பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

உவரி சுயம்புலிங்க சுவாமி  திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ளது.

வங்கக்கடல் ஒரு புறமும்  பக்தர்கள் வெள்ளம் ஒருபுறமுமாக திருத்தேர் அசைந்து வந்த காட்சி, கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. 

நன்றி - தினத்தந்தி
கடற்கரையில் தேரோடும் அழகை காண்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து குவிந்தனர்.

மதியம் பன்னிரண்டு மணிக்கு தேர் நிலைக்கு வந்தது.

வழக்கம் போல தைப்பூச விழாவையொட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள், பெட்டியில் கடலில் இருந்து மண் எடுத்து சுமந்து வந்து கரையில் கொட்டி, தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தினார்கள்.

குலதெய்வமாக வழிபடும் அன்பர்களுடன் - நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் கேரளத்தைச் சேர்ந்த திரளான பக்தர்களும்   கலந்து கொண்டனர்.
 
திருத்தேர் நிலைக்கு வந்ததும் தீர்த்த வாரி. உற்சவர் சிறப்பு அபிஷேகம், உச்சி கால பூஜை, ராக்கால பூஜை, இரவு ஒரு மணிக்கு ஸ்வாமி – அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா எழுந்தருளினர். 

ஸ்ரீ விநாயகர் திருக்கோயில்
பத்தாம் திருநாள்  - ஜனவரி 18  - காலை விநாயகர் வீதி உலாவும் ,  திருவிளக்கு பூஜையும் - தெப்ப உற்சவமும்.

சுவாமி, அம்பிகை தெப்பத்திற்கு எழுந்தருளி உற்சவமும் வெகு சிறப்பாக நடந்தது. 

பதினோராம் திருநாள்  பஞ்சமூர்த்திகள் வீதி உலா. உற்சவ சாந்தி, சுவாமி அம்பிகை, மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா இனிதே நிறைவேறியது.

விழா நாட்களில் - தேவார திருவாசக பாராயணங்களும், அன்னதானமும், மாலையில் கலை நிகழ்ச்சிகளும், சமய சொற்பொழிவுகளும்  நிகழ்ந்தன.

ஸ்ரீ வன்னியடி சாஸ்தா திருக்கோயில்
பக்தர்களின் வசதிக்காக - நெல்லை, திருச்செந்தூர்,  நாகர்கோவில், திசையன் விளை - நகர்களிலிருந்து உவரிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 

திருவிழாவின் ஏற்பாடுகளை - திருக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் திரு. ப.க.சோ.த.ராதாகிருஷ்ணன், செயலாளர் திரு.தர்மலிங்க உடையார், ராஜகோபுர திருப்பணி குழுவின் தலைவர் திரு.முருகேசன், செயலாளர் திரு.வெள்ளையா நாடார், திரு.பொருளாளர் செண்பகவேல் நாடார் மற்றும் முக்கியஸ்தர்கள் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் ஆகியோர் முன்னின்று சிறப்புற செய்திருந்தனர்.  

என் அன்பு மகளின் திருமணத்திற்கான முதல் அழைப்பாக - குலதெய்வத்தின் திருக்கோயிலில் முறைப்படி அழைப்பிதழ் வைத்திருக்கின்றனர். அத்துடன்,

திருவிழா நிகழ்வுகளும் ஆனந்த தரிசனம்.

சிவாய திருச்சிற்றம்பலம்.

17 கருத்துகள்:

  1. இதுவரை சென்றதில்லை... உவரியின் சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் சிறப்புகளுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      ஒருமுறை சென்று வாருங்களேன்..
      அதன்பின் அடுத்தடுத்து செல்வதற்குத் தோன்றும்.
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  2. உவரியின் சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் அறியாதன் அறிந்தேன் நன்றி ஐயா.
    தங்கள் அன்பு மகளின் திருமணம் தொடர்பான வேலைகள் தொடங்கிவிட்டதை அறிந்து மகிழ்ந்தேன்.
    தங்களின் மகளுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து என் மகளை அன்புடன் வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  3. மார்கழி மாதத்தின் எல்லா நாட்களிலும் காலையில் சூரியனின் இளங்கதிர்கள் கருவறையில் படரும் பெருஞ்சிறப்பினை உடையது - உவரி ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயில் பற்றி சிரப்பான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்ள்..

    மகளின் திருமணத்திற்கு இனிய வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      என் மகளை அன்புடன் வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி.
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  4. திரு. அட்வகேட் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு அன்பின் நல்வரவு!..

    பதிலளிநீக்கு
  5. இதுவரை அறிந்திராத பல கோவில்களில் இதுவும் ஒன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட் ..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  6. வணக்கம் ஐயா
    உவரியின் சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் பற்றிய தகவல்கள் எனக்கு புதிது. கோவிலின் சிறப்பை மிக சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள் தங்களுக்கு நன்றிகள்.
    திருமணத்தால் இருமணம் இணையும் தம்பதியினருக்கும் எமது அன்பு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் பாண்டியன்..
      என் அன்பு மகளை வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி.
      தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  7. வணக்கம் சகோதரா !
    உவரியின் உன்னத நிலையினை எடுத்துரை த்தமைக்கு நன்றிகள்.
    அத்துடன் மகளின் திருமணம் இனிதே நடந்தேறி அவர்கள் சிறப்புற வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      என் அன்பு மகளை வாழ்த்தியமைக்கு மனமார்ந்த நன்றி..
      தங்களது வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  8. அருமையான விரிவான பதிவு! சிறப்பான விளக்கங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சுரேஷ்..நல்வரவு.
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  9. வன்னியடி சாஸ்தா கோவில் மிக அழகு.
    உவரி சுயம்புலிங்க கோவில் பகிர்வு அருமை.
    உங்கள் அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
    மணமக்கள் பல்லாண்டு வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      என் மகளுக்கு நல்வாழ்த்து கூறிய தங்களுக்கு மனமார்ந்த நன்றி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..