நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 14, 2014

பொங்கல் திருநாள்

அனைவருக்கும் 
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!.. 

தேவர்களுக்கு பகல் பொழுது எனப்படும் உத்ராயண புண்ய காலத்தின் முதல் நாள்  - தை மாதத்தின் முதல் நாளாகும். 


சூரியன் - தை முதல் நாளில்  மகர ராசிக்குள் பிரவேசிக்கின்றான். 

மங்கலங்கள் நிறைந்த தை மாதப்பிறப்பு. காலகதியில் பத்தாவது மாதம். 

தை முதல் நாளிலிருந்து  ஆனி மாதம் முடிய உள்ள ஆறு மாதங்களும் சுப காரியங்களுக்கு உகந்தவையாகக் கருதப்படுகின்றது. 

இல்லங்கள் தோறும் மங்கல நிகழ்வுகளும் ஊர்கள் தோறும் திருவிழா வைபவங்களும் பொலிந்து விளங்கும் காலம்.


தமிழர்கள் - உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அங்கெல்லாம் மகிழ்வுடன் கொண்டாடி மகிழும் பெருமைக்கு உரியது - திருநாள்.


மார்கழியின் கடைசி நாளை - போகி என அனுசரித்து பழையனவற்றை விலக்கி - பயன்படும் பொருள்களை புதிதெனத் துலக்கி,

உள்ளமும் இல்லமும் தூய்மை கொண்டு விளங்க - பொங்கல் திருநாளின் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகும். 

தை முதல் நாள்

அவரவர் குடும்ப மரபுப்படி புதுப்பானையில் சர்க்கரைப் பொங்கலிட்டு கனிவகைகளுடன் கரும்பு, இஞ்சி மஞ்சள் கொத்துகள் என - சூரிய பகவானுக்கு சமர்ப்பித்து வணங்குவர். 







நல்ல மழை பொழிந்ததற்கும் நாடு செழித்ததற்கும் நன்றி கூறும் திருநாள் - பெரும் பொங்கல்.

தை இரண்டாம் நாள்

 
தங்கள் வயலோடும் வரப்போடும் வாழ்வோடும் பின்னிப் பிணைந்த செல்வங்களான கால்நடைகளுக்கு நன்றி கூறி அவற்றை கையெடுத்து வணங்கி மகிழும் திருநாள் - மாட்டுப் பொங்கல்.

தை மூன்றாம் நாள்

தங்கள் உயிரோடும் உணர்வோடும் ஓட்டி உறவாடும் உறவு முறைகள், தோள் கொடுத்து நின்ற தோழமைகள், இன்முகம் காட்டி உடன் வந்த நன்முகங்கள் என அனைத்து உறவுகளுடனும் கலந்து மகிழும் திருநாள் - காணும் பொங்கல். 


தொன்று தொட்டு வரும் பாரம்பர்ய பண்பாட்டிற்கு  - மேல் விளக்கங்கள் கற்பித்து எத்தனை எத்தனையோ தகவல்கள் - காணக் கிடைக்கின்றன.

அவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.

எல்லாவற்றுக்கும் மேலான - 

அன்பையும் பண்பையும் நிறைத்து ஆனந்தப் பொங்கல் வைத்து சுற்றம் சூழ - கூடிக் குளிர்ந்திருந்து கோடி நலன் பெற்று மகிழ்ந்திருப்போமாக!..


உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் 
நன்னாளாகிய தைப்பொங்கல் நாளில்

நீர் வளமும்  நில வளமும் நிறையப் பெற்று - 
வயலும் அதை முன்னிட்டு 
நமது வாழ்வும் செழித்து விளங்க 
எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

மீண்டும் 
அனைவருக்கும் 
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

25 கருத்துகள்:

  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய
    தித்திக்கும் தைப் பொங்கல் + புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட
      பொங்கலோ.. பொங்கல்!..
      அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

      நீக்கு
  2. தைப் பொங்கலைக் கண் முன் நிறுத்திடும் அழகிய பகிர்வுக்குப்
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  3. பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட
    பொங்கலோ.. பொங்கல்!..
    அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஐயா
    தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்தினுக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  5. பொங்கல் தின நல்வாழ்த்துக்கள். இந்த நாள் இந்தியா முழுவதும் வேறு வேறு பெயர்களில் கொண்டாடப் படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.. வணக்கம்.
      தாங்கள் வருகை தந்து பொங்கல் நல் வாழ்த்து கூறியமைக்கு மிக்க நன்றி!..
      அனைவருக்கும் அன்பின் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

      நீக்கு
  6. இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக.. மணிமாறன்..
      தங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  7. வணக்கம் ஐயா!

    அருமையான பதிவு! என் பக்கத்தில் தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

    பொங்கலிட்டுப் போற்றியே பூமிவளம் காத்திடுவோம்
    எங்களுக்கும் ஈய்ந்தருள் என்று!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
    இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      நிறைந்த மகிழ்வுடன் நீடூழி வாழ்க!..
      தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ச்சி!..

      நீக்கு
  8. பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  9. அன்புடையீர்..
    தங்களின் வருகையும்
    நல்வாழ்த்துக்களும் கண்டு மகிழ்ச்சி!..

    பதிலளிநீக்கு
  10. அழகான பதிவு. பொங்கல் பொங்கிற்றா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் நல்லாசிகளினால் பால் போல - மகிழ்ச்சி பொங்கியது.
      தங்களின் வருகைக்கும் அன்பின் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  11. பெயரில்லா16 ஜனவரி, 2014 00:25

    வணக்கம்
    ஐயா.

    பொங்கல் பதிவு மிக அற்புதமாக உள்ளது ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கருத்தை சொல்லுகிறது.... வாழ்த்துக்கள் ஐயா.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ரூபன்
      தங்களின் வருகைக்கும் அன்பின் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே!
    அருமையான பொங்கல் பதிவு நல்ல அழகான பொருத்தமான படங்கள், பழைய நினைவுகளை மீட்டு வந்தன. மிக்க நன்றி ,,,,,,!

    தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களின் வருகைக்கும் அன்பின் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  13. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்
      தங்களின் வருகைக்கும் அன்பின் இனிய வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  14. அன்பையும் பண்பையும் நிறைத்து ஆனந்தப் பொங்கல் வைத்து சுற்றம் சூழ - கூடிக் குளிர்ந்திருந்து கோடி நலன் பெற்று மகிழ்ந்திருப்போமாக!..

    மகிழ்ச்சிப் பொங்கல் வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..