நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

கிருத்திகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிருத்திகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜனவரி 20, 2024

கிருத்திகை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை  6
சனிக்கிழமை

இன்று 
தை கிருத்திகை..


ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிச்செய்த
கந்தர் அலங்காரத்தின் சில பாடல்கள்..


பேற்றைத் தவம் சற்று மில்லாத என்னை ப்ரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழிவிட்டவா செஞ்சடா அடவிமேல்
ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.. 1


தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலும் என்
பாவடி ஏட்டிலும் பட்டதன்றோ படி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன் தன் சிற்றடியே.. 15


மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதாரையும் அங்கு வாழவைப்போன் வெய்ய வாரணம்போல்
கைதான் இருபதுடையான் தலைப் பத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.. 22


பால் என்பதுமொழி பஞ்சென்பது பதம் பாவையற்கண்
சேல் என்பதாகத் திரிகின்ற நீசெந்திலோன் திருக்கை
வேல் என்கிலை கொற்ற மயூரம் என்கிலை வெட்சித் தண்டைக் 
கால் என்கிலை மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே... 30


நாளென் செயும்வினை தான் என் செயும் எனை நாடிவந்த
கோள் என் செயும் கொடுங் கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளுங் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.. 38


சேல் பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால் பட்டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல் பட்டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டழிந்தது இங்கு என்தலை மேலயன் கையெழுத்தே.. 40
**
வெற்றி வேல் போற்றி
வீரவேல் போற்றி..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வியாழன், ஜூலை 16, 2020

கதிர்வேல் போற்றி

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்று ஆடி மாதப் பிறப்பு..
தக்ஷிணாயன புண்ய காலம்..
கிருத்திகை நட்சத்திரம்..


கலைமட வார்தஞ் சிலைய தனாலுங்
கனவளை யாலுங் - கரைமேலே

கருகிய காலம் பெருகிய தோயம்
கருதலை யாலுஞ் - சிலையாலுங்

கொலைதரு காமன் பலகணை யாலுங்
கொடியிடை யாள்நின் றழியாதே

குரவணி நீடும் புயமணி நீபம்
குளிர்தொடை நீதந் - தருள்வாயே...



சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்
திருமகள் நாயன் - தொழும் வேலா

தினைவன மானும் கநவன மானும்
செறிவுடன் மேவும் - திருமார்பா

தலமகள் மீதெண் புலவர் உலாவும்
தணிகையில் வாழ்செங் - கதிர்வேலா

தனியவர் கூருந் தனிகெட நாளும்
தனிமயில் ஏறும் - பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வீரவேல் முருகனுக்கு அரோகரா..
ஃஃஃ