நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஆடிப்பூரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆடிப்பூரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 28, 2025

ஆடிப்பூரம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 12
 திங்கட்கிழமை

ஆடிப்பூர நன்னாள்


திரு ஆடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே..

திருவீழிமிழலை

சந்திர சடாதரி முகுந்த சோதரி துங்க சலசுலோசன மாதவி சம்ப்ரம பயோதரி சுமங்கலி
சுலட்சணி சாற்றரும் கருணாகரி
அந்தரி வராகி சாம்பவி அமர தோதரி அமலை செக சால சூத்ரி அகிலாத்ம காரணி வினோத சய நாரணி

அகண்ட சின்மய பூரணி
சுந்தரி நிரந்தரி துரந்தரி வரை ராச சுகுமாரி கௌமாரி உத்துங்க கல்யாணி புஷ்ப அஸ்த்ராம் புயபாணி தொண்டர்கட்கு அருள் சர்வாணி
வந்து அரி மலர்ப் பிரமராதி துதி வேத ஒலி வளர் 
திருக்கடவூரில் வாழ் வாமி சுபநேமி புகழ் நாமி
சிவசாமி மகிழ் வாமி அபிராமி உமையே!..
-: அபிராமி பட்டர் :-
**
இல்லங்கள் தோறும்
மங்கலங்கள் பெருகட்டும்
சகல சௌபாக்கியங்களும்
நிறையட்டும்..

ஓம் சக்தி ஓம்
ஓம் நம சிவாய 
**

புதன், ஆகஸ்ட் 07, 2024

ஆடிப்பூரம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஆடி 22  
புதன்கிழமை
ஆடிப்பூர தரிசனம்

தஞ்சை கரந்தை
ஸ்ரீ பெரியநாயகி











திரு ஐயாறு
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி











ஸ்ரீ ஆண்டாள் தரிசனம்


திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்தப் பெண்பிள்ளாய் வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்தி மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப்பதங்கள் வாழியே..
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

ஞாயிறு, ஆகஸ்ட் 04, 2019

ஆடிப் பூரம்

இன்று மங்களகரமான ஆடிப்பூரம்..

அம்பிகை - பொங்கும் மங்கலத்தில் பூத்து நின்ற நாள்  - பூரம்!..

ஊழிகளின் தொடக்கத்தில் - புவனம் முழுதையும் பூத்து அருள்வதற்காக - ஜகத் ஜனனியாகிய அம்பிகை - புஷ்பவதியாக பூத்து நின்றருளினள்.

அந்த மங்கலம் அனுசரிக்கப்படும் நாளே - ஆடிப் பூரம்!..

அம்மன் சந்நிதிகள் கோலாகலமாக விளங்கும் நாள்..

பற்பல திருக்கோயில்களிலும் ஆடிப்பூர வைபவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன...

சிவனடியார் திருக்கூட்டம் மற்றும்
நண்பர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற படங்கள் இன்றைய பதிவில்..

நிகழ்வுகளை வலையேற்றிய நன்னெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி...

ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி - திருஐயாறு 
ஆடி அமாவாசையன்று திருவையாற்றில் நிகழ்ந்த
அப்பர் பெருமான் கயிலாய தரிசனக் காட்சியும் ஆடிப்பூர தரிசனமும்...









கடந்த வெள்ளியன்று
தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மனுக்கு பூச்சொரியல் வைபவம்..





ஸ்ரீ அபிராமவல்லி - திருக்கடவூர் 
ஸ்ரீ அபிராமவல்லி - திருக்கடவூர் 
ஸ்ரீ மங்களாம்பிகை 
ஸ்ரீ மங்களாம்பிகை
கும்பகோணம் 
மதுரையம்பதியில் முளைக்கொட்டு உற்சவம் ...


ஸ்ரீ மீனாம்பிகை 
நெல்லையில் நிகழும் ஆடிப்பூர திருநாள் விழாவில்
ஸ்ரீ காந்திமதியம்மனின் திருக்கோல தரிசனம்...





ஸ்ரீ காந்திமதியம்மை - நெல்லை 
ஆடிப் பூரம் - சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாளின் இம்மண்ணில் தோன்றிய நாள்..

ஸ்ரீ வில்லிபுத்தூரில் கோலாகலமாக விழா நடந்து கொண்டிருக்கின்றது....



ஸ்ரீ ஆண்டாள் திருக்கோலம் 
எத்தனை எத்தனையோ மங்கலங்களுக்கு இருப்பிடம் ஆடி மாதம்!..

ஆடித் தள்ளுபடி!.. அது.. இது!.. -  என அலைவோர் மத்தியில் -
தெய்வ தரிசனம் கண்டு உய்வடைவோர் ஆயிரம்.. ஆயிரம்..

இந்த நாட்களில் - ஒருவருக்கொருவர் முகமன் கூறி - அன்பினைப் பரிமாறிக் கொள்ளுவதே சிறந்த நலன்களுக்கு அடிப்படை என்கின்றனர் ஆன்றோர்.

ஆடி மாதத்தில், அம்மன் கோயில்களில் - ஆடம்பரமின்றி -
ஏழை எளியவர்க்கு கூழ் வார்த்து வேண்டுதல் செய்வது அன்பின் வெளிப்பாடு..

மஞ்சள், குங்குமம், சந்தனம், வளையல் இவற்றுடன் தாம்பூலம் வைத்து அக்கம்பக்கம் அண்டை அயலாருடன் நட்பைப் பேணுதல் சிறப்பு..

அதிலும் முக்கியமாக -

ஏழைப் பெண் குழந்தைகளுக்கு இயன்றவரை புத்தாடை வளையல்களை வழங்கி மகிழ்வித்தால் - அம்பிகையை மகிழ்வித்ததாக ஆகின்றது..

அம்பிகை மனம் மகிழ்ந்தால் - நிலையான செல்வம் நமது வீட்டில் குடி கொள்ளும் என்பது திருக்குறிப்பு..

ஆயுளும் ஆரோக்யமும் ஐஸ்வர்யமும் பெருகி - இல்லத்தில்
மகிழ்ச்சி நிலையாக குடிகொள்வதில் அனைவருக்கும் விருப்பம்!..

அவ்வண்ணம் நிகழ்வதற்கு அம்பிகையை வேண்டுவோம்!..

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து..

ஓம் சக்தி ஓம்..
* * *