நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஆடிச் செவ்வாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆடிச் செவ்வாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஆகஸ்ட் 13, 2019

செவ்வாய்ப் பிள்ளையார்

மண்ணெல்லாம் மணக்கும் மாதம் - ஆடி..

மனமெல்லாம் மணக்கும் மாதம் - ஆடி... 


நினைக்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கின்றது...

ஆடி மாதத்தை முழுக்க முழுக்க பெண்மைக்கே -
என்று நம் முன்னோர்கள் அர்ப்பணித்து விட்டனர்.

ஏன்?.. எதற்கு?.. என்று எந்த ஆணும் எதிர்த்துக்
கேள்வி கேட்க முடியாதபடிக்கு ஒரு விசேஷம்  -
இந்த ஆடி மாதத்தில் நிகழ்கின்றது...

மிகவும் வற்புறுத்திக் கேட்டாலோ - கிடைக்கும் ஒரே பதில் -

''..எல்லாம் உங்க நல்லதுக்குத்தாங்க!..''

இன்னும் சொல்வதானால்- அந்த விசேஷத்தில் கலந்து கொள்ள -
பெண்ணாகப் பிறந்தவர்க்கு மட்டுமே ஏகமனதாக அனுமதி!..

பெற்று வளர்த்து பேணிக் காத்த தந்தையோ,
கண்ணின் மணியாகக் கலந்து பிறந்த அண்ணனோ தம்பியோ,
அன்பின் வடிவான அருமைக் கணவனோ, 
மாமனோ மைத்துனனோ - யாராயிருந்தாலும் - அவ்வளவு ஏன்!...

ஆறு அல்லது ஏழு வயது ஆன -
ஆண் பிள்ளைகளுக்கே அங்கு அனுமதி கிடையாது. 

ஆறு வயது தொடங்கி - பற்றற்று, பற்களும் அற்று -
பழமாக விளங்கும் பாட்டன்களுக்குக் கூட
அந்த விசேஷத்தின் நிவேத்யங்கள் கிடைக்காது என்றால் -
அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை!.

''அதென்ன?.. அப்படிப்பட்ட விசேஷம்!..'' -  என்கின்றீர்களா!..

உங்களுக்கும் தெரிந்திருக்கும்!..

ஆடியில் முதல் அல்லது மூன்றாவது செவ்வாய்க் கிழமைகளில் -
பெண்கள் - பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு விருப்புடன் நிகழ்த்தும் -


செவ்வாய் பிள்ளையார் வழிபாடு!...

இது தென்மாவட்டங்களில் ஒளவையார் நோன்பு என்று வழங்கப்படுகின்றது. 

தஞ்சைப் பகுதியில் - செவ்வாய் பிள்ளையார் கும்பிடுவது என்றே சொல்கின்றனர்... 

அல்லது வேறு பெயர்கள் ஏதேனும் உண்டா? - என்பது தெரியவில்லை...

தமிழகம் முழுவதுமே செவ்வாய் பிள்ளையார் வழிபாடு  உண்டு என்கின்றனர். 

நன்றி - ஓவியர் இளையராஜா  
செவ்வாய்க்கிழமைக்கு முன்னதாகவே - பூஜையில் கலந்து கொள்ளும் சூழ்நிலையில் உள்ள பெண்கள் ஒன்றாகக் கூடிப் பேசி அல்லது ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு - யார் வீட்டில் வழிபாட்டினை நடத்தலாம் என்று நிச்சயித்துக்கொண்டு அடுத்த கட்ட வேலைகளை ஆரம்பிக்கின்றனர். 

எத்தனை பேர் என்று - சமயத்தில் ஒரே குடும்பத்தில் இருந்து  தாயும் மகளுமாக கலந்து கொள்வதானால் அதற்கு ஏற்றபடி -
கணக்கிட்டுக் கொண்டு எல்லாம் நடைபெறுகின்றன.

அன்றைய தினம் விடியலில் எழுந்து குளித்து முழுகி -
சுத்தமான ஆடைகளை அணிந்து விரதம் ஏற்கின்றனர். 

செவ்வாய்க்கிழமை ராகு காலம் கழிந்த பின்னர் -
வேலையை ஆரம்பிக்கின்றனர்..
சுத்தம் செய்து ஊறவைத்த பச்சரிசியை -
உரலில் இட்டு இடித்து -   மாவாக்கிக் கொள்வார்கள். 

உரலில் மாவு இடிப்பது, அம்மியில் ஆட்டுரலில் அரைப்பது,
கிணற்றில் நீர் இறைப்பது, குனிந்து கோலம் போடுவது - இதெல்லாம், இடுப்புக்கும் தோள்களுக்கும் மார்புகளுக்கும் நல்ல பயிற்சிகள்.. 

இன்றைய நாட்களில் நோகாமல் நுங்கு எடுப்பது மாதிரி
தரையில் ஒட்டி வைக்கும் கோலங்கள் வந்து விட்டன.. என்றாலும்
அங்கொன்றும் இங்கொன்றுமாக - மாக்கோலங்கள் இழைந்திருக்க
மற்றவை எல்லாம் நம்மால் கைவிடப்பட்டு விட்டன?....

சில சந்தர்ப்பங்களில் மாவு இடிப்பது முதற்கொண்டு -
எல்லாவற்றையும் முன்னிரவில்  - செய்வதும் உண்டு...

வழிபாடு தொடங்கும் முன் - முதற்கட்டமாக -
வழிபாடு நடத்தப்படும் வீட்டில் உள்ள ஆண்கள்
அன்புடன் அப்புறப்படுத்தப்படுகின்றனர்!.. 

பூஜை நடத்தப்படும் இடம்  சுத்தம் செய்யப்பட்டு - அழகாகின்றது!..


இந்த விசேஷத்தின் நடுநாயகம் -
சிவநாயகம் தந்தருளிய கணநாயகம்!...

அத்தனைப் பெண்களின் மத்தியில் அவர் ஒருவர் தான் - ஆண் பிள்ளை!..
அவர் ஆண் பிள்ளை என்றாலும் - நீலி திரிசூலி நீங்காத பொட்டுடைய
ஒரு பெண்ணின் பிள்ளை!... 

ஆம்!.. நித்ய கன்னி - நித்ய சுமங்கலியாகிய அம்பாள், தன் திருமேனியில் திகழ்ந்த மஞ்சளைத் திரட்டி -  உருவாக்கி உயிர் கொடுத்து உலகுக்கு அளித்த பிள்ளை!..

இருந்தாலும் - அந்தப் பிள்ளையும் - இறைவனின் கோபத்திற்கு ஆளானது. 

ஏனென்றால், தானொரு பங்காயிருந்தும் தன்னை மீறி - சக்தி மட்டுமே,
அந்தப் பிள்ளையை உருவாக்கியதால் -

இந்தப் பிள்ளை யார்?. எனப் - பெருமான் கேட்டு, பெரும் பிரச்னையாகி - பிள்ளையின் தலை தனியாகப் போனது!.. 

பின்  - அதுவே ஆனைத்தலை கொண்டு  அனைத்திற்கும் தலையானது!..

இப்படி தனி நாயகம் ஆன கணநாயகம் -
இந்த விசேஷத்தின் போது மஞ்சளில் பிடித்து வைக்கப்படுவதில்லை. 

ஈனாக் கன்று!. சூல்கொள்ளாத பசுங்கன்றின் -சாணத்தில் பிடிக்கப்படுவார்.

அரிசி மாவினால் அம்சமாகக் கோலமிட்டு, புங்கமரத்தின் இலைகளைப் பரப்பி அதில் பிள்ளையாரை எழுந்தருளச் செய்து, பிள்ளையாருக்கு திலகமிட்டு, அருகம்புல் மற்றும் நறுமலர்களைச் சூட்டி  - குத்து விளக்கேற்றி வைப்பர்.

முற்றிய தேங்காயை உடைத்து,  அதன் தண்ணீரை அரிசி மாவில் ஊற்றி, அந்தத் தேங்காயை சிறு சிறு துண்டுகளாகக் கீறிப்போட்டு - உப்பில்லாமல் பிசைந்து கொழுக் கட்டைகளாகவும் அடைகளாகவும் ஆக்கிக் கொள்வர். 

முன்னிரவில் தொடங்கி - இதெல்லாம் செய்வதற்கே  நடு இரவாகி விடும்.

புது மண்சட்டியில் புது வைக்கோலை பரப்பி தண்ணீர் ஊற்றி, ஆவி வந்ததும் - 

''என்னது!... ஆவியா?... நடுச் சாமத்தில் ஆவியா?..''

''ஆவின்னா - அந்த ஆவி இல்லீங்க!.   -  தண்ணீர் கொதித்து வரும் ஆவி!..'' -

''அதானே!.. நல்லவேளை!..''

வைக்கோல் மீது  பிசைந்து வைத்த கொழுக்கட்டைகளையும்  அடைகளையும் வைத்து மூடி - நன்றாக வெந்ததும்  அவற்றை எடுத்து பிள்ளையாருக்கு முன் தலை வாழையிலையில் வைத்து மற்ற பழவகைகளுடன் தாம்பூலமும் சமர்ப்பித்து தீர்த்தம் கொடுத்து - 


தூப,  தீப , கற்பூர ஆராதனைகளுடன்  வணங்கி மகிழ்வார்கள்.

அதன் பின்னர் - வயதில் மூத்தவரான பெண்மணி - பிள்ளையார் நோன்பின் கதையைச் சொல்வாராம். 

அது என்ன கதை!?..

இதுவரை ஆண்கள் யாருக்குமே தெரியாத கதை!.

பிள்ளையார் நோன்பின் கதை ரகசியம்
இன்று வரையிலும் மாதர் குல மாணிக்கங்களால்
மரபு வழுவாமல் கட்டிக் காக்கப்படுகின்றது!.. இனியும் காக்கப்படும்!..

மங்கள ஆரத்தி செய்தவுடன் அவரவர்க்கும் உரிய நிவேதனங்கள் பகிர்ந்து அளிக்கப்படும்...
பூஜையில் வைக்கப்பட்ட மஞ்சள் சரடு அவரவர்க்கும் அணிவிக்கப்படும்... சந்தனம், மஞ்சள், குங்குமம் - மலர்ச் சரத்துடன் பிரசாதமாக வழங்கப்படும்.

அத்துடன் அங்கேயே நிவேத்ய பிரசாதங்கள் உண்டு தீர்க்கப்படும். 

முன்பு சொன்ன மாதிரி ஐந்து வயதிற்குட்பட்ட இளம் பாலகர்களுக்கு மட்டுமே அடையும் கொழுக்கட்டையும் வழங்கப்படும்.  

விடிவதற்குமுன் -
ஒருவேளை கொழுக்கட்டை அடை இவை மீதம் இருந்தால், 

பூஜையில் வைக்கப்பட்ட பிள்ளையார்,  நிர்மால்யப் பொருட்கள், 
புங்க இலை புது சட்டிகளுடன் -

அவையும் ஆற்றிலோ குளத்திலோ கிணற்றிலோ கரைக்கப்படும்...

''..மீண்டும் நல்லபடியாக இந்த பூஜையைச் செய்யும் வரத்தினைத் தந்தருள வேண்டும். பிள்ளையாரப்பா!..'' - என்ற வேண்டுதலுடனும் - 

மலர்ச்சரங்களைத் தலையில் சூடி, மங்கலகரமாக, மலர்ந்த முகத்துடனும் - மஞ்சள் குங்குமத்துடனும்  - பெண்கள் தமது இல்லங்களுக்குத் திரும்பும் போது - 

கீழ்வானில் வெள்ளி முளைத்து -
புத்தம் புதிய நாள் ஒன்று - புதன் என்று தோன்றியிருக்கும்!..

விடியற்காலையில்  - வீட்டிற்குள் நுழைபவர்களிடம் ஏதாவது கேட்டால் - கிடைப்பது - மலரினும் மெல்லிய புன்னகை மட்டுமே!.. அதன் பொருள் - 

''..எல்லாம் உங்க நல்லதுக்குத்தாங்க!..''

அப்படியே ஆகட்டும்!.. 

இன்பங்கள் ஆவதும் பெண்ணால்!..
துன்பங்கள் அழிவதும் பெண்ணால்!..

நம்மைப் பெற்ற தாய் நமக்கு உவந்தளிக்காமல் - 
நன்மைகளை மனதில் கொண்டு தானே உண்ணுவதும்.. 

எதையும் பகிர்ந்து கொள்ளும் அன்பு மனைவி -
கணவனுடன் பகிர்ந்து கொள்ளாததுவும் எது என்றால் -
செவ்வாய் பிள்ளையார் விரதத்தின்  - நிவேத்யங்கள்!..


அடையையும் கொழுக்கட்டையையும் - தாம் உண்டு விட்டு, 
அருட்கொடையை மட்டும் நம்மிடம் வழங்கும் பெண்மை வாழ்க!..

பெண்மை
மகிழ்ந்திருக்கும் இடத்தில்
மலர்ந்திருக்கும் இடத்தில்
ஸ்ரீ மஹாலக்ஷ்மி அருள்கின்றாள்!..

பெண்மை வாழ்க!..
பேர் கொண்டு வாழ்க!..
பெருஞ்சீர் கொண்டு வாழ்க..
ஃஃஃ

செவ்வாய், ஜூலை 23, 2013

ஆடிச் செவ்வாய்

மண்ணெல்லாம் மணக்கும் மாதம்.

மனமெல்லாம் மணக்கும் மாதம் - ஆடி மாதம். 


நினைக்கும்போதே பரவசமாக இருக்கின்றது. ஆடி மாதத்தை முழுக்க முழுக்க பெண்மைக்கே - ''..பெண்மையே வாழ்க!..'' - என்று நம் முன்னோர்கள் அர்ப்பணித்து விட்டனர்.

ஏன்?.. எதற்கு?.. என்று எந்த ஆணும் எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாதபடிக்கு ஒரு விசேஷம்  - இந்த ஆடி மாதத்தில் நிகழ்கின்றது. மிகவும் வற்புறுத்திக் கேட்டாலோ - கிடைக்கும் ஒரே பதில் -

''..எல்லாம் உங்க நல்லதுக்குத்தாங்க!..''

இன்னும் சொல்வதானால்- அந்த விசேஷத்தில் கலந்து கொள்ள -

பெண்ணாகப் பிறந்தவர்க்கு மட்டுமே இன்முகத்துடன் ஏகமனதாக அனுமதி!..

பெற்று வளர்த்து பேணிக் காத்த தந்தையோ, கண்ணின் மணியாக மணியின் நிழலாகக் கலந்து பிறந்த அண்ணனோ தம்பியோ, அன்பின் வடிவான அருமைக் கணவனோ,  மாமனோ மைத்துனனோ - யாராயிருந்தாலும்  - அவ்வளவு ஏன்!...

ஆறு அல்லது ஏழு வயது ஆன - ஆண் பிள்ளைகளுக்கே அங்கு அனுமதி கிடையாது. 

ஆறு வயது தொடங்கி - பற்றற்று, பற்களும் அற்று -  பழமாக விளங்கும் பாட்டன்களுக்குக் கூட அந்த விசேஷத்தின் நிவேத்யங்கள் கிடைக்காது என்றால் - அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை!.

''அதென்ன?.. அப்படிப்பட்ட விசேஷம்!..'' -  என்கின்றீர்களா!..

உங்களுக்கும் தெரிந்திருக்கும்!..

ஆடியில் முதல் அல்லது மூன்றாவது செவ்வாய்க் கிழமைகளில் - பெண்கள் - பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு விருப்புடன் நிகழ்த்தும் -


செவ்வாய் பிள்ளையார் வழிபாடு!...

இது தென்மாவட்டங்களில் ''ஒளவையார் நோன்பு'' என்று வழங்கப்படுகின்றது. தமிழகம் முழுவதுமே செவ்வாய் பிள்ளையார் வழிபாடு  உண்டு என்கின்றனர். 

நமது தஞ்சைப் பகுதியில் - செவ்வாய் பிள்ளையார் கும்பிடுவது என்றே சொல்கின்றனர். அல்லது இன்னும் வேறு பெயர்கள் ஏதேனும் உண்டா? - என்பது எனக்குத் தெரியவில்லை.

சரி!.. உங்களுக்கு எப்படித் தெரியும்?.. என்கின்றீர்களா!..

என் அப்பாயி நாகம்மையார் அவர்கள் செவ்வாய் பிள்ளையார் வழிபாட்டினை முன்னிருந்து  நடத்துவதை சின்ன வயதில் கண்டிருக்கின்றேன். 

வீடு முழுவதும் கோலமிட்டு நல்ல விளக்கேற்றி வைத்திருப்பார்கள். தூக்கக் கலக்கத்துடன் சாமியாடியபடி உறங்கி விடும் என்னை - விடியலில்  எழுப்பி -  கொழுக்கட்டை கொடுப்பார்கள். உண்டிருக்கின்றேன்.

மேலதிகத் தகவல்கள் - இல்லத்தரசியிடம் கெஞ்சிக் கூத்தாடித் தெரிந்து கொண்டவை!..

செவ்வாய்க்கிழமைக்கு முன்னதாகவே - கலந்து கொள்ளும் சூழ்நிலையில் உள்ள பெண்கள் ஒன்றாகக் கூடிப் பேசி அல்லது ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு - யார் வீட்டில் வழிபாட்டினை நடத்தலாம் என்று நிச்சயித்துக்கொண்டு அடுத்த கட்ட வேலைகளை ஆரம்பிக்கின்றனர். 

எத்தனை பேர் என்று - சமயத்தில் ஒரே குடும்பத்தில் இருந்து  தாயும் மகளுமாக கலந்து கொள்வதானால் அதற்கு ஏற்றபடி - கணக்கிட்டுக் கொண்டு எல்லாம் நடைபெறுகின்றன.

அன்றைய தினம் விடியலில் எழுந்து குளித்து முழுகி  - சுத்தமான ஆடைகளை அணிந்து விரதம் ஏற்கின்றனர். 

செவ்வாய் - மாலை மூன்று  முதல் நாலரை மணி வரை ராகு காலம். அதனால் நாலரை மணிக்கு மேல் -  சுத்தம் செய்து ஊறவைத்த பச்சரிசியை - உரலில் இட்டு இடித்து -   மாவாக்கிக் கொள்வார்கள். 

உரலில் மாவு இடிப்பது, அம்மியில் ஆட்டுரலில் அரைப்பது, கிணற்றில் நீர் இறைப்பது, குனிந்து கோலம் போடுவது - இதெல்லாம், இடுப்புக்கும் தோள்களுக்கும் மார்புகளுக்கும் நல்ல பயிற்சிகள். 

அங்கொன்றும் இங்கொன்றுமாக கோலம் போடுவது மட்டும் இன்னும் வாழ்கின்றது. மற்றவை எல்லாம் ?.....

சில சந்தர்ப்பங்களில் மாவு இடிப்பது முதற்கொண்டு - எல்லாவற்றையும் முன்னிரவில்  - செய்வதும் உண்டு. வழிபாடு தொடங்கும் முன் - 

முதற்கட்டமாக - வழிபாடு நடத்தப்படும் வீட்டில் உள்ள ஆண்கள் அன்புடன் அப்புறப்படுத்தப்படுகின்றனர்!.. 

பூஜை நடத்தப்படும் இடம்  சுத்தம் செய்யப்பட்டு - அழகாகின்றது!..


இந்த விசேஷத்தின் நடுநாயகம் - கணநாயகம்!...

அத்தனைப் பெண்களின் மத்தியில் அவர் ஒருவர் தான் - ஆண் பிள்ளை!... அவர் ஆண் பிள்ளை என்றாலும் - நீலி திரிசூலி நீங்காத பொட்டுடைய ஒரு பெண்ணின் பிள்ளை!... 

ஆம்!.. நித்ய கன்னி - நித்ய சுமங்கலியாகிய அம்பாள், தன் திருமேனியில் திகழ்ந்த மஞ்சளைத் திரட்டி -  உருவாக்கி உயிர் கொடுத்து உலகுக்கு அளித்த பிள்ளை!.. இருந்தாலும் - அந்தப் பிள்ளையும் - இறைவனின் கோபத்திற்கு ஆளானது. 

ஏனென்றால், தானொரு பங்காயிருந்தும் தன்னை மீறி - சக்தி மட்டுமே, அந்தப் பிள்ளையை உருவாக்கியதால் - ''..இந்தப் பிள்ளை யார்?.'' எனப் - பெருமான் கேட்டு, பெரும் பிரச்னையாகி - பிள்ளையின் தலை தனியாகப் போனது!.. 

பின்  - அதுவே ஆனைத்தலை கொண்டு  அனைத்திற்கும் தலையானது!..

இப்படி தனி நாயகம் ஆன கணநாயகம் - இந்த விசேஷத்தின் போது மஞ்சளில் பிடித்து வைக்கப்படுவதில்லை. 

ஈனாக் கன்று!. சூல்கொள்ளாத பசுங்கன்றின் -சாணத்தில் பிடிக்கப்படுவார்.

அரிசி மாவினால் அம்சமாகக் கோலமிட்டு, புங்கமரத்தின் இலைகளைப் பரப்பி அதில் பிள்ளையாரை எழுந்தருளச் செய்து, பிள்ளையாருக்கு திலகமிட்டு, அருகம்புல் மற்றும் நறுமலர்களைச் சூட்டி  - குத்து விளக்கேற்றி வைப்பர்.

முற்றிய தேங்காயை உடைத்து,  அதன் தண்ணீரை அரிசி மாவில் ஊற்றி, அந்தத் தேங்காயை சிறு சிறு துண்டுகளாகக் கீறிப்போட்டு - பிசைந்து கொழுக் கட்டைகளாகவும் அடைகளாகவும் ஆக்கிக் கொள்வர்.

(குறிப்பு : - அடை கொழுக்கட்டை இவற்றில் உப்பு சேர்ப்பது இல்லை)

முன்னிரவில் தொடங்கி - இதெல்லாம் செய்வதற்கே  நடு இரவாகி விடும்.

புது மண்சட்டியில் புது வைக்கோலை பரப்பி தண்ணீர் ஊற்றி, ஆவி வந்ததும் - 

''என்னது!... ஆவியா?... நடு ராத்திரியில் ஆவியா?..''

''ஆவின்னா - அந்த ஆவி இல்லீங்க!.   -  தண்ணீர் கொதித்து வரும் ஆவி!..'' -

''அதானே!.. நல்லவேளை!..''

வைக்கோல் மீது  பிசைந்து வைத்த கொழுக்கட்டைகளையும்  அடைகளையும் வைத்து மூடி - நன்றாக வெந்ததும்  அவற்றை எடுத்து பிள்ளையாருக்கு முன் தலை வாழையிலையில் வைத்து மற்ற பழவகைகளுடன் தாம்பூலமும் சமர்ப்பித்து தீர்த்தம் கொடுத்து - 


தூப,  தீப , கற்பூர ஆராதனைகளுடன்  வணங்கி மகிழ்வார்கள்.

அதன் பின்னர் - வயதில் மூத்தவரான பெண்மணி - பிள்ளையார் நோன்பின் கதையைச் சொல்வாராம். 

அது என்ன கதை!..

பெண்களின் மனதில் ரகசியம் தங்காது - என்கின்றார்களே!. அது முழுப் பொய்!.

ஏனெனில் அது உண்மையாக இருந்தால்தான் - அந்தக் கதை என்ன என்று  இந்நேரம் தெரிந்திருக்குமே!. இதுவரை ஆண்கள் யாருக்குமே தெரியாத கதை!.

பிள்ளையார் நோன்பின் கதை ரகசியம் இன்று வரையிலும் மாதர் குல மாணிக்கங்களால் மரபு வழுவாமல் கட்டிக் காக்கப்படுகின்றது!.. இனியும் காக்கப்படும்!..

மங்கள ஆரத்தி செய்தவுடன் அவரவர்க்கும் உரிய நிவேதனங்கள் பகிர்ந்து அளிக்கப்படும். பூஜையில் வைக்கப்பட்ட மஞ்சள் சரடு அவரவர்க்கும் அணிவிக்கப்படும். சந்தனம், மஞ்சள், குங்குமம் - மலர்ச் சரத்துடன் பிரசாதமாக வழங்கப்படும்.

அத்துடன் அங்கேயே நிவேத்ய பிரசாதங்கள் உண்டு தீர்க்கப்படும். 

முன்பு சொன்ன மாதிரி ஐந்து வயதிற்குட்பட்ட இளம் பாலகர்களுக்கு மட்டுமே அடையும் கொழுக்கட்டையும் வழங்கப்படும்.  

விடிவதற்குமுன் - ஒருவேளை கொழுக்கட்டைஅடை இவை மீதம் இருந்தால், 

பூஜையில் வைக்கப்பட்ட பிள்ளையார்,  நிர்மால்யப் பொருட்கள்,  புங்க இலை புது சட்டிகளுடன் - அவையும் ஆற்றிலோ குளத்திலோ கிணற்றிலோ பக்தியுடன் கரைக்கப்படும்.

''..மீண்டும் நல்லபடியாக இந்த பூஜையைச் செய்யும் வரத்தினைத் தந்தருள வேண்டும். பிள்ளையாரப்பா!..'' - என்ற வேண்டுதலுடனும் - 

மலர்ச்சரங்களைத் தலையில் சூடி, மங்கலகரமாக, மலர்ந்த முகத்துடனும் - மஞ்சள் குங்குமத்துடனும்  - பெண்கள் தமது இல்லங்களுக்குத் திரும்பும் போது - 

கீழ்வானில் வெள்ளி முளைத்து - புத்தம் புதிய நாள் ஒன்று - புதன் என்று தோன்றியிருக்கும்!.

விடியற்காலையில்  - வீட்டிற்குள் நுழைபவர்களிடம் ஏதாவது கேட்டால் - கிடைப்பது - மலரினும் மெல்லிய புன்னகை மட்டுமே!.. அதன் பொருள் - 

''..எல்லாம் உங்க நல்லதுக்குத்தாங்க!..''

அப்படியே ஆகட்டும்!.. 

இன்பம் ஆவதும் பெண்ணால்!.. துன்பம் அழிவதும் பெண்ணால்!..

நம்மைப் பெற்ற தாய் நமக்கு உவந்தளிக்காமல் - உண்ணும் ஒரே பொருள்!..

எதையும் பகிர்ந்து கொள்ளும் அன்பு மனைவி - பகிர்ந்து கொள்ளாத ஒரே பொருள்!..

செவ்வாய் பிள்ளையார் விரதத்தின்  - நிவேத்யங்கள்!..


அடையையும் கொழுக்கட்டையையும் - தாம் உண்டு விட்டு, 

செவ்வாய் பிள்ளையார்  வழங்கிய - 
அருட்கொடையை மட்டும் நம்மிடம் வழங்கும் பெண்மை வாழ்க!..

பெண்மை மலர்ந்திருக்கும் இடத்தில், மகிழ்ந்திருக்கும் இடத்தில் - 
தான் என்றும் அகலாது வாசம் செய்வதாக  
ஸ்ரீ மஹாலக்ஷ்மி அருள்கின்றாள்!..

அவ்வண்ணமே ஆகட்டும்!..

''..பெண்மை வாழ்க!.. பெருஞ்சிறப்புடன் வாழ்க!..''