நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 16, 2026

முருகனருள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 31
ஞாயிற்றுக்கிழமை


இன்று ஆடி 31... தமிழ் மாதத்தின் கடைசி ஞாயிறு. (16/8/26)

இன்றைய தினம்
 தஞ்சை மாநகரில் உள்ள முருகன் கோயில்களை   ஆறுபடை வீடுகளாகப் பாவித்து அந்த  கோயில்களுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்ய இருக்கின்றனர் ..

இதற்கு திதி நட்சத்திரம் என்று எதையும் கணக்கில் கொள்வதில்லை.. கடைசி ஞாயிறு தான் கணக்கு..

இதைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்  பதிவிட்டுள்ளேன்...

காலை ஆறரை மணியளவில்
தஞ்சை ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோயிலில் முருக தரிசனம்...

தொடர்ந்து - 
முதற்கோயில் மேல வாசல்..
மேல அலங்கம் ஸ்ரீ முருகன் கோயில்.. வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடி திருக்கோலம்..
இது சிறிய அளவிலான கட்டுமலைக் கோயில்.. கீழ்தளத்தில் பள்ளி கொண்ட பெருமாள்.. அருகில்  ஸ்ரீ பத்ர காளியம்மன் கோயில்..

இரண்டாவதாக வடக்கு வாசல் வடக்கு அலங்கம் ஸ்ரீ முருகன் கோயில்..

மேற்கு நோக்கிய கோயில்.. பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் சூரிய பூஜை..

மூன்றாவதாக கீழவாசல்
குறிச்சித்தெரு ஸ்ரீ  சுப்ரமணிய ஸ்வாமி கோயில்... இந்தக் கோயிலிலும் வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடி திருக்கோலம்..

நான்காவதாக கீழவாசல்
ஆட்டுமந்தைத் தெரு பால தண்டாயுதபாணி ஸ்வாமி கோயில்.. 
மேற்கு நோக்கிய 
கோயில் ..

ஐந்தாவதாக கீழவாசல்
அரிசிக்காரத் தெரு  சுப்ரமணிய ஸ்வாமி கோயில்... இந்தக் கோயிலிலும் வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடி திருக்கோலம்.. இங்கு ஸ்வாமிக்கு யானை வாகனம்...  இதுவும் மேற்கு நோக்கிய கோயில்..  

ஆறாவதாக பூச்சந்தை ஸ்ரீ முருகன்  திருக்கோயில்..
மாலை ஆறு மணியளவில் இக்கோயிலை அடைவர்... இந்தக் கோயிலிலும் வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடி திருக்கோலம்.. கோயிலுக்கு எதிரில் காவிரி புது ஆறு...

இதன் பின்னும் 
உடல் நலம் உடையவர்கள்
தொடர்ந்து நடந்து மீண்டும் ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோயிலில் முருக தரிசனம் செய்து நடைபயணத்தை நிறைவு செய்வர்... 

பாதயாத்திரையாக வருகின்ற 
ஆயிரக்கணக்கான பக்தர்களை அந்தந்தப் பகுதி மக்கள் வரவேற்று மகிழ்வர்..

வழி நெடுகிலும் நீர் மோர் குளிர் பானங்கள் என வழங்குவர்.

மூன்று வேளையும் அன்னதான உபசரிப்பு என்பது சிறப்பு... 

ஆறு திருக்கோயில்களிலும் மூல மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் சந்தனக் காப்பு - என  வைபவமாக இருக்கும்...


வழித்துணை வருவான்
வடிவேல் முருகன்

முருகா முருகா
***

6 கருத்துகள்:

  1. புதிய செய்தியாகத்தான் இருக்கிறது.   ஏற்கனவேயும் சொல்லி இருக்கிறீர்களா?  மறந்து விட்டேன் போல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. தஞ்சை முருகன் கோவில் பாத யாத்திரை சிறப்பான தரிசனம்.

    முன்பும் படித்த நினைவு உள்ளது. மீண்டும் எமக்கு நினைவூட்ட தந்த இன்றைய பகிர்வுக்கு நன்றி.

    ஓம் வெற்றிவேல் முருகா சரணம் உன் பாதங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா

      நீக்கு
  3. தஞ்சையில் முருகன் கோயிலுக்கு பாத யாத்திரை பற்றிய விவரம் அருமை.
    முருகனை தரிசனம் செய்து அனைவருக்கும் வழித்துணையாக வா முருகா என வேண்டிக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..