நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை
செவ்வாய்க்கிழமை
இப்போதெல்லாம் கைத்தல பேசியில் எதுவும் வாசிக்க முடிவதில்லை..
தட்டச்சு செய்வதும் சிரமமாக உள்ளது...
பல பிரச்னைகள்..
சற்று நேரம் வெளியே சென்று காலார நடந்து வரலாம் எனில் -
(வீட்டைச் சுற்றிலும் இருக்கின்ற சாலைகள் தலை கீழாகப் புரண்டு கிடப்பதால் நெடுஞ்சாலை ஓரம் தான் நடப்பதற்கு...
ஆனாலும், நான்
நடப்பதில்லை..
முழங்காலில் வலி காரணம்.. )
அங்கே -
சுய கட்டுப்பாடு இல்லாத மனிதர்களே அதிகம்...
உரிய ஒழுங்கு இல்லாமல் வாகனங்களை இயக்குபவர்களும்
ஒரே வழித்தடத்தில் நேருக்கு நேர் படு வேகமாக வருபவர்களும் தான் அதிகம்....
சாலை சந்திப்புகளின் நடுவே அமைக்கப்பட்டுள்ள வட்ட வடிவ ஒழுங்கை மீறி குறுக்காகப் பாய்ந்து செல்கின்ற மனித ஜந்துகளே அதிகம்...
சாலை சந்திப்புகளில் பொது மக்கள் குறுக்காகச் செல்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டிருக்கும் வெள்ளைப் பட்டைகளை மதிக்காத வாகன ஓட்டிகளும் அதிகம்...
சாலை விதிகள் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமல் மனம் போன போக்கில், வாகனங்கள் இயக்கப்படுவதே நிதர்சனம்...
இன்னும் எவ்வளவோ இதைப் பற்றிச் சொல்லலாம்..
சுதந்திர நாட்டின் பொது வாழ்வில் எவரையும் குறை சொல்வது நோக்கம் அல்ல..
சாலைப் போக்குவரத்தில்
பிறரால் நமக்கு இடையூறு ஏற்படுவதன் காரணமாக மனதில் எழுகின்ற ஆதங்கமே இது..
நகர்ப்புறச் சாலைகளும் கிராமத்துத் தெருக்களும் ஒன்றாகவே மிளிர்கின்றன... எங்கெங்கும் கவனக் குறைவான ஆபத்தான வாகன இயக்கமே...
வாகனங்கள் அலறி அடித்துக் கொண்டு செல்கின்ற நிலையே உள்ளது.
இதனைக் கட்டுப்படுத்த, ஆங்காங்கு போக்குவரத்து
காவலர்களை நியமித்து சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது அவசியம்.
ஆனால், எங்கெங்கும் ஒழுங்கீனமே நிறைந்து இருக்க - இதெல்லாம் நடக்கின்ற காரியமா?...
இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்..
வாழ்க நலம்
***

கண்கள்தான் படுத்துகின்றன என்றால் எல்லாமேவா... நீங்கள் கண்களை சரியாக பாதுகாக்கவில்லை என்று தோன்றுகிறது. சரியான மருத்துவரை பார்க்கவில்லை. பொறுமையாக தொடர்ந்து செல்லவேண்டும். அவர்களிடமும் பொறுமையின்மை இருக்கலாம். ஆனாலும் நம் காரியம் முக்கியம் என்று தொடர்ந்து சென்று சரிசெய்து .கொள்ளவேண்டும்.
பதிலளிநீக்குகண்களைச் சரியாகத் தான் பாதுகாக்கின்றேன் .
நீக்குஇருப்பினும் வணிக மருத்துவத்துக்குள் சிக்கிக் கொண்டதனால் சற்றே பிரச்னை
ஒழுங்கான சாலைகள், ஒழுங்கான மக்கள், சட்டத்தை மதிக்கும் அல்லது பயப்படும் மக்கள், அரபு நாடுகளிலும், சிங்கப்பூரிலும் சாத்தியம். இந்தியா இப்படிதான். நாம் நம் நிம்மதியை காத்துக்கொள்ள இவர்களை கண்டு கொள்ளாமல் இருக்க பழகவேண்டும்..
பதிலளிநீக்குஉண்மை தான்...
நீக்குஇவர்களை கண்டு கொள்ளாமல் கடந்து செல்வதற்குப் பழக வேண்டும்..
மகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்