நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை
திங்கட்கிழமை
கேழ்வரகு கூழ்
அற்புதமான உணவு.
பித்தத்தால் ஏற்படும் உடல் வெப்பத்தைக் கேழ்வரகு கட்டுப்படுத்தும். இதில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து இருப்பதால், ரத்தச் சோகையைக் கட்டுப் படுத்துகிறது.
கேழ்வரகு கஞ்சியினால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுகின்றது. உடலுக்கு ஊட்டம் கிடைக்கின்றது.
காய்ச்சலில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மூட்டுகளில் வலி ஏற்படலாம்.. இது குறைவதற்கு கேழ்வரகு கூழ் ஏற்றது.
சிறு குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்...
தெரு ஓரத்துத் தயாரிப்புகளை விட நாமே கூழ் செய்து கொள்வது முதன்மையாகும்..
செய்முறை
அரை டம்ளர் கேழ்வரகு மாவினை எடுத்து அளவாகத் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்...
உத்தேசமாக மூன்று குவளை (450 ml) தண்ணீரும்
சிறிது கல் உப்பும் சேர்த்து கொதிக்க வைத்து நன்றாக வெந்ததும் இறக்கி விடவும்.
இனிப்புக்கு, பனை வெல்லத்தைக் காய்ச்சி - வடிகட்டி ஊற்றி அதனுடன் சிறிதளவு தேங்காய்த் துருவலும் இரண்டு ஏலக்காயும் சேர்த்துக் கொள்ளலாம்..
உப்புக்கஞ்சி எனில் மோர், சின்ன வெங்காயம், உப்பு, சிறிது இஞ்சி , புதினா, கொத்த மல்லி தழை சேர்த்தும் தயாரிக்கலாம்..
கேழ்வரகு கூழ் ஓரளவுக்கு நீர்க்க இருப்பது சிறப்பு..
அவ்வப்போது கையளவு
முருங்கைக் கீரை சேர்த்தும் கூழ் தயாரிக்கலாம்..
நமது நலம்
நமது கையில்..
***



சிறப்பான தயாரிப்பு, உடலுக்கு நல்லது. வீட்டிலேயே தயாரித்துக் கொண்டால் இன்னும் சிறப்பு.
பதிலளிநீக்குஏனோ இது மாதிரி ஆரோக்ய விஷயங்களில் நான் கவனம் செலுத்துவதில்லை. இத்தனை காலம் இப்படியே ஒட்டியாச்சு...
பதிலளிநீக்கு