நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 23, 2024

தக்ஷிணமேரு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 7 
  திங்கட்கிழமை

(பதிவிலுள்ள படங்கள் 
சென்ற ஆண்டில் கிடைத்தவை)


அதுவரைக்கும் வரலாற்றில் இல்லாதபடிக்கு தஞ்சை மாநகரில் -  விண்ணுயரத்துக்கு பெருங்கோயில் ஒன்றினை தட்சிணமேரு என்று மாமன்னர் ஸ்ரீ ராஜராஜ சோழர் எழுப்பியபோது, அந்த ஸ்ரீ விமானத்தில் கயிலாயத் திருக்காட்சியைப் பதித்து வைத்தார்..



கயிலை  என்று இன்றைக்கு நாம் காணும் காட்சி கயிலாயத்தின் தென்முக தரிசனம் ஆகும்..

ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன் - 
மாமன்னர் உருவாக்கித் தந்த  கயிலாயத் திருக்காட்சி - இன்று நாம் காணும் தென்முக தரிசனத்தை ஒத்து இருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்..

திருக் கயிலாயம்

மாமன்னர் ராஜராஜ சோழர்  கயிலையங்கிரிக்குச் சென்று தரிசித்ததாக எந்தச் சான்றும் கிடையாது.. ஆயினும் இப்படி கயிலாயக் காட்சி அமைக்கப்பட்டது எப்படி?..


கயிலாயத்தின் தென் முகத்தை மன்னனுக்கும் சிற்பிகளுக்கும் உணர்த்தி இன்று நாம் தரிசிக்கும்படிக்கு செய்வித்த சக்தி எது!?..


 நேற்று
தக்ஷிணமேரு எனப்பட்டதன் விளக்கம் 
இப்போது தெரிந்திருக்கும்!..

தஞ்சை சிவாலயக் கோட்டை வலம் 
மூன்று கிமீ., என்கின்றனர்..

நெரிசலில் அதிக பட்சம் 
ஒன்றரை மணி நேரம் ஆகியிருக்கலாம்..


உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்
உருத்திர கோடி மறைக் காட்டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
வீரட்டம் மாதானம் கேதாரத்தும்
வெஞ்சமாக் கூடல் மீயச்சூர் வைகா
வேதிச்சுரம் விவீச்சுரம் ஒற்றியூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையுங்
கயிலாய நாதனையே காண லாமே.  6/70/8
-: திருநாவுக்கரசர் :-
**

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. திருநாவுக்கரசர் தஞ்சையைக் குறிப்பிட்டபோது பெரியகோவில் இல்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை அவர்களுக்கு நல்வரவு

      திருநாவுக்கரசர் தஞ்சையைக் குறிப்பிட்டபோது பெரியகோவில் இல்லை தான்..

      தஞ்சையில் தளிக்குளம் இருந்தது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  2. மாமன்னன் சென்று வந்திருக்க மாட்டார். தலைமைச் சிற்பி சென்று வந்திருப்பாரோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருந்தாலும் இருக்கும்

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி.. ஸ்ரீராம்

      நீக்கு
  3. துரை அண்ணா, தக்ஷிண மேரு தகவல்கள் சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..