நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 28, 2024

தரிசனம் 2

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 12
இரண்டாம் சனிக்கிழமை

தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் இன்றைய தரிசனம்..

 நன்றி கூகிள்



இக்கோயில் தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாப சிம்மனால் கட்டப்பட்டது. 

நேபாள மன்னரால் தஞ்சை மன்னருக்கு சீதனமாகக் கொடுக்கப்பட்ட சாளக் கிராமக் கல்லினால் ஆன கோதண்ட ராமர் சிலை கருவறையில்.. 
சௌந்தர்ய விமானம்...

கூடவே, சீதாதேவி, லட்சுமணர், சுக்ரீவரோடு நின்ற கோலத்தில் .. 











ஸ்ரீ கோயிலின் திருச்சுற்றில் ஸ்ரீ இராம காதை -அழகிய சித்திரங்களாகப் பொலிகின்றன..

ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் திருச்சுற்றின் வடபுறத்தில் தெற்கு முகமாகத் தனிச் சந்நிதியில் விளங்குகின்றார்..

புன்னை  மரம் தலவிருட்சம்..





 திருக்கோயிலுக்கு மன்னர் செய்தளித்த தேர் எங்கேயோ போய் விட்டது.. 

இப்போது தேர்நிலை மட்டுமே... 


தேர்நிலையைக் காப்பாற்றுவதற்காக அங்கே ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் பிரதிஷ்டை செய்ய ப்பட்டுள்ளார்..

அனைவரும் தரிசிக்க வேண்டிய கோயில் புன்னை நல்லூர் ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில்..

இக்கோயில் புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்குப் பின் புறம் 250 மீ., தொலைவில் அமைந்துள்ளது..

ஸ்ரீ ராம ராம 
ஜெய ராம ராம

ஓம் ஹரி ஓம் 
***

14 கருத்துகள்:

  1. அருமையான கோவில் பகிர்வு. சட்டென கும்பகோணம் இராமர் கோவில் பிரகாரம் போல் தோன்றியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது நாயக்கர் காலம்..
      இது மராட்டியர் காலம்..

      ராம்... ராம்... ஜெயஜெய ராம்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நெல்லை அவர்களுக்கு நன்றி

      நீக்கு
  2. அழகாக இருக்கிறது கோவில். தஞ்சாவூரிலிருந்து எவ்வளவு நேரத்தில் இங்கு அடையலாம்? தெரிந்து வைத்துக் கொண்டால் தஞ்சைப் பக்கம் வரும்போது பார்த்து விடலாம் என்று...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சை பழைய் பேருந்து நிலையத்திலிருந்து 25 நிமிடம் தான்..

      ராம்... ராம்... ஜெயஜெய ராம்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. அழகான ஆலயம். தேர் எங்கே போனதோ? வேதனை. படங்கள் வழி நாங்களும் ஆலயம் கண்டோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராம்... ராம்... ஜெயஜெய ராம்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்

      நீக்கு
  4. சிறப்பான பதிவு தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராம்... ராம்... ஜெயஜெய ராம்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. புன்னை நல்லூர் கோதண்ட ராமர் கோவிலின் படங்கள், விபரங்கள் எல்லாம் வாசிக்க நன்றாக உள்ளது. விபரம் அறிந்து கொண்டேன். கோவிலின் தேர் எப்படி மாயமானதோ ? தேர் நிலையை காப்பற்ற அங்கு எழுந்தருளியிருக்கும் லக்ஷ்மி ஹயகீரிவரை சேவித்துக் கொண்டேன். அனைவருக்கும் எல்லா நலனையும் அவர் அருள வேண்டும்.

    இன்றைய நல்ல நாளில் ஸ்ரீ ஆஞ்சநேயர் தரிசனம் கிடைத்தது. புரட்டாசி சனிக்கிழமையன்று ஸ்ரீ ராமர் கோவில் தரிசன பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராம். ராம்..
      ஜெய ஜெய் ராம்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
  6. புன்னைநல்லூர் ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் அழகிய படங்கள் கண்டு தரிசித்துக் கொண்டோம்.

    ராம்...ராம்... ஜெயஜெய ராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராம்... ராம்... ஜெயஜெய ராம்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
  7. ஸ்ரீ கோதண்ட ராமர் கோவில் படங்கள் வரலாறு அருமை.
    படங்கள் எல்லாம் நேரில் பார்த்த உணர்வை தருகிறது.
    புரட்டாசி சனிக்கிழமை ராமர் தரிசனம் கிடைத்தது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..