நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 17
திங்கட்கிழமை
மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதாரையும் அங்கு வாழ வைப்போன் வெய்ய வாரணம் போல்
கைதான் இருப துடையான் தலை பத்துங் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே... 22
அன்பின் ஸ்ரீராம் அவர்களது ஆதங்கம் இது..
" நான் - நாள் தெரிவு செய்து தரிசனத்துக்குச் செல்கையில் இதுவரை அல்லது முன்னர் நீங்கள் தரிசித்த புழங்கிய இடங்களை நான் காண முடியாதா?.. "
எல்லாம் மாறிக் கொண்டு இருக்கின்றன.. எதையும் சொல்வதற்கு இல்லை.. நம் நாட்டுக்கு கல்வி கற்பிக்க வந்தவர்களால் தான் -
(நாடு பிடிக்க வந்த அன்னியர்களால் தான்) இந்துக் கோயில்கள் ஏற்றம் பெற்றன என்று கூட புதிய கதைகள் வருங்காலத்தில் உருவாகக் கூடும்..
கீழே உள்ளவை 2022 ஏப்ரல் மாதத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள்..
மேலே உள்ள படத்தில் காணப்படும் அலங்கார வாசல் வழியாகத் தான் நாழிக் கிணற்றுக்குச் செல்ல வேண்டும்.. தற்போது மேம்பாட்டுப் பணிகளால் ஓடு வேய்ப்பட்ட பழைமையான நடைவழி முற்றாக அப்புறப்படுத்தப்பட்டு விட்டது.. அலங்கார வளைவு மட்டுமே இருக்கின்றது.. தகரத் தகடுகளால் நிழல் அமைக்கப்பட்டுள்ளது..
ஆலயத்தை மேம்படுத்தி உருவாக்கியதாக - மௌன சுவாமி,
காசி சுவாமி ,
ஆறுமுக சுவாமி,
ஞான தேசிக சுவாமி, வள்ளி நாயக சுவாமி
எனும் துறவியர் அறியப்படுகின்றனர்..
இவர்களுக்கு ஆலய மண்டபத்தில் திருமேனிகள் அமைக்கப்பட்டுள்ளன..
இந்த உத்தமர்களை என்றும் நினைவில் கொள்வோம்..
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால்பட் டழிந்தது இங்கு என்தலை மேல் அயன் கையெழுத்தே... 40
-: கந்தர் அலங்காரம் :-
முருகா முருகா
முருகா முருகா..
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
படங்களை ரசித்தேன்.
பதிலளிநீக்குசகோதரி ராமலக்ஷ்மி வலைதளத்தில் ஒருமுறை திருச்செந்தூர் காட்சிப்படங்கள் இடம்பெற்றபோது நீண்ட அஸ்பெஸ்ட்டாஸ் போன்ற ஏதோ ஒன்றால் கூரை அமைக்கப்பட்ட நடைபாதையைக் கண்ட நினைவு. அதெல்லாமும் இருக்காதா இப்பொழுது?
ஓட்டுக் கட்டடமோ ஆஸ்பெஸ்டாஸ் கூரையோ எதுவும் இல்லை..
நீக்குதகரக் கொட்டகை தான் மிச்சம்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
திருச்செந்தூர் ஆண்டவர் கோவில் காலமாற்றத்தில் மாறிக்கொண்டு இருக்கிறது.
பதிலளிநீக்குஓம் முருகா சரணம்.
முருகா சரணம்,
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி ..
பல இடங்கள் மாற்றங்களை கண்டு வருகின்றன. பழமை மாறாமல் பாதுகாக்க, பராமரிக்க நம் நாட்டில் அத்தனை பிரயத்தனம் செய்வதில்லை என்பது வேதனை.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட் ..