நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 07, 2024

நிறைகனி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
விநாயக சதுர்த்தி

ஆவணி 22
சனிக்கிழமை

அனைவருக்கும்
விநாயக சதுர்த்தி
நல்வாழ்த்துகள
..

ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைப்
போரானைக் கற்பகத்தைப் பேணினால் - வாராத
புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்
சத்திதரும் சித்திதரும் தான்..
-: பழந் தமிழ்ப் பாடல் :-


கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக ... னடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியி லுறைபவ
     கற்பகம் எனவினை ... கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
     மற்பொரு திரள்புய ... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு ... பணிவேனே..


முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ... முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த ... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புனம் அதனிடை ... இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
     அக்கண மணமருள் ... பெருமாளே.
-: அருணகிரிநாதர் :-

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா..
:- ஒளவையார் :-


சில ஆண்டுகளுக்கு முன்பு எளியேன் எழுதிய
போற்றி மாலை மீண்டும்
இன்றைய பதிவில்..


ஓரானைக் கன்று என 
வந்தானை போற்றி
சிவசக்தி வலம் செய்து 
நின்றானை போற்றி..

மாமேரு மலைதன்னில்
மலர்ந்தானை போற்றி
மா பாரதம் தன்னை 
வரைந்தானை போற்றி..

அன்றமரர் துயரங்கள்
தீர்த்தானை போற்றி
ஔவைக்கு அருந்தமிழ்
தந்தானை போற்றி..

காவேரி கடுஞ்சிறை
தீர்த்தானை போற்றி
கைதொழ எல்லாமும்
ஆனானை போற்றி..


அரங்க மாநகர் தனை
அளித்தானை போற்றி
ஆங்கொரு குன்றிலே
அமர்ந்தானை போற்றி..

தேவாதி தேவர் தொழ
நின்றானை போற்றி
தேவாரம் தனை மீட்டுத்
தந்தானை போற்றி..

அச்சிறுத் தருள் செய்த
அழகானை போற்றி
ஆயிரத் தெழுவருடன்
வந்தானை போற்றி..

புன்கூரில் குளமொன்று
புரிந்தானை போற்றி
புறம்பயத்தில் தேனோடு
பொலிந்தானை போற்றி..

மருதீசர் மலைக் குன்றில்
மிளிர்ந்தானை போற்றி
உப்பூரில் வெயில் தனில்
அமர்ந்தானை போற்றி..


அமரர்க்கு அமுதென்று
ஆனானைப் போற்றி
கந்தனுக்கு வள்ளிதனைத்
தந்தானை போற்றி..

கும்பமுனி கும்பிடக்  
குளிர்ந்தானை போற்றி
குறை தீர்த்து குலங்காத்து
நிறைந்தானை போற்றி..

வாதாபி தனை வென்று
வந்தானை போற்றி
வளர்பிறை அதனுடன்
நின்றானை போற்றி

கலங்காமல் உயிர்தனைக்
காத்தானை போற்றி
கருதியே வந்தார்க்கு
கதியானை போற்றி..

ஓங்கார ரூபமாய்
ஒளிர்ந்தானை போற்றி
ஓலமிட்டொரு குரல்
விளித்தானை போற்றி..


செவிகேட்டு செந்தமிழ்
மகிழ்ந்தானை போற்றி
விதிமாற்றி விளக்கேற்றி
வைத்தானை போற்றி..

ஞானமே வடிவாக
வந்தானை போற்றி
தானமே தவமாக
இருந்தானை போற்றி..

கோள்வினைகள் எல்லாமும்
தீர்த்தானைப் போற்றி
நாளெலாம் நல்வினை
சேர்த்தானை போற்றி..

கல்லானைக் கவியென்று
காத்தானை போற்றி
பொல்லானைப் பொறுத்தருள்
புரிந்தானை போற்றி..18

போற்றியே போற்றி எனப்
போற்றிடு மனமே..
போற்றியே போற்றி என
வாழ்த்திடு மனமே..
**

ஓம் கம் கணபதயே நம:

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. வெவ்வினைகளை விநாயகர் அகற்ற, முருகன் அண்ணனுடன் சேர்ந்து நம்மை காக்கப் பிரார்த்திப்போம்.  விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. ஆவணி விநாயக சதுர்த்தி நாளில் சிறப்பான முதல் வணக்கம் நம் ஆனைமுகத்தானுக்கு.

    அனைவருக்கும் அவனருள் கிடைக்க பிரார்த்திப்போம்.

    பாடல்கள்பாடி வணங்கிக்கொண்டோம்.

    உங்கள் பாமாலை நன்று அவனருள் என்றும் உங்களுக்கு உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு
  3. அனைவருக்கும் சற்றே தாமதமான விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..