நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 21
வெள்ளிக்கிழமை
தலம்
குன்றுதோறாடல்
தனனந் தனன தந்த .தனதான
தனனந் தனன தந்த .. தனதான
அதிருங் கழல்ப ணிந்து ... னடியேனுன்
அபயம் புகுவ தென்று ... நிலைகாண
இதயந் தனிலி ருந்து ... க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க ... அருள்வாயே
எதிரங் கொருவ ரின்றி ... நடமாடும்
இறைவன் தனது பங்கி ... லுமைபாலா
பதியெங் கிலுமி ருந்து ... விளையாடிப்
பலகுன் றிலும மர்ந்த ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
( நன்றி கௌமாரம்)
வீரக்கழல்கள் ஒலிக்கின்ற உனது
திருவடிகளை வணங்கும்
அடிமையாகிய நான்
நீயே அபயம் என்ற மெய் நிலையைக்
காணுமாறு எனது இதயத்தில்
வீற்றிருந்து கருணை புரிந்து
துன்பங்களும்
சஞ்சலங்களும் கலங்கி
ஒழிவதற்கு அருள்வாயாக..
தனக்கு நிகர் என்று எவருமில்லாமல்
ஆனந்தத் தாண்டவம் புரிகின்ற
சிவபெருமானுடைய
இடது பாகத்தில் விளங்குகின்ற
உமா தேவியின் புத்திரனே,
திருத்தலங்கள் பலவற்றிலும்
இருந்து விளையாடி
குன்றுகள் பலவற்றிலும் எழுந்து
அருள் புரிகின்ற பெருமாளே..
முருகா முருகா
முருகா முருகா..
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
முருகனை நானும் வணங்கி கொள்கிறேன்.
பதிலளிநீக்குமுருகா சரணம்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. அழகான படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடலும், அதன் விளக்கமும் படித்து முருகப் பெருமானை வணங்கி பிரார்த்தித்துக் கொண்டேன்.
முருகா சரணம்.
முத்துக் குமரா சரணம் 🙏.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முருகா சரணம்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி..
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஅனைவருடைய துன்பங்களும் சஞ்சலங்களும் ஒழிய எல்லாம் வல்லவ முருகப்பெருமான் அருள்புரியட்டும்.
எல்லாம் வல்லவ முருகப்பெருமான் அருள் புரியட்டும்.
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி வெங்லட்
'குன்றுதோறாடல் " முருகா அனைவர் நலனையும் காக்க வேண்டுவோம்.
பதிலளிநீக்குமுருகா சரணம்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி. மாதேவி