நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஆகஸ்ட் 26, 2024

கோகுலாஷ்டமி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கோகுலாஷ்டமி
ஆவணி 10
திங்கட்கிழமை

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
நல்வாழ்த்துகள்

இன்று 
கிருத்திகையும்
இணைந்தே வருகின்றது..

கூடுதல் சுவையாக
கிருஷ்ணாவதாரத்
திருப்புகழ்..

தலம்
குன்றக்குடி


தானான தனதான தானான தனதான
தானான தனதான .... தனதான

நாமேவு குயிலாலு மாமார னயிலாலு
     நாடோறு மதிகாயும் ... வெயிலாலும்

நார்மாதர் வசையாலும் வேயூது மிசையாலு
     நாடாசை தருமோக ... வலையூடே

ஏமாறி முழுநாளு மாலாகி விருதாவி
     லேவாரும் விழிமாதர் ... துயரூடே

ஏகாம லழியாத மேலான பதமீதி
     லேகீயு னுடன்மேவ ... அருள்தாராய்..

தாமோக முடனூறு பால்தேடி யுரலூடு
     தானேறி விளையாடு ... மொருபோதில்

தாயாக வருசோதை காணாது களவாடு
     தாமோத ரன்முராரி ... மருகோனே

மாமாது வனமாது கார்மேவு சிலைமாது
     மாலாகி விளையாடு ... புயவீரா

வானாடு புகழ்நாடு தேனாறு புடைசூழ
     மாயூர கிரிமேவு ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
 நன்றி கௌமாரம்



முத்தும் மணியும்  வயிரமும் நன்பொன்னும்
தத்திப் பதித்துத்  தலைப்பெய்தாற் போல்  எங்கும்
பத்து விரலும்  மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டு இருந்தவா காணீரே
      ஒண்ணுதலீர் வந்து காணீரே.. 24




பணைத்தோள் இள ஆய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்து ஆர உண்டு கிடந்த இப் பிள்ளை
இணைக்காலில்  வெள்ளித் தளை நின்று இலங்கும்
கணைக்கால் இருந்தவா காணீரே
      காரிகையீர்! வந்து காணீரே.. 25




உழந்தாள் நறுநெய்  ஒரோர் தடா உண்ண
இழந்தாள் எரிவினால்  ஈர்த்து எழில் மத்தின்
பழந்தாம்பால் ஓச்ச  பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவா காணீரே
      முகிழ்முலையீர் வந்து காணீரே.. 26

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடைச்
சித்தம் பிரியாத  தேவகிதன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாம் நாள்  தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே
      முகிழ்நகையீர் வந்து காணீரே.. 28

பெரியாழ்வார் திருப்பாசுரங்கள்

நன்றி
நாலாயிரத் திவ்ய பிரபந்தம்

வசுதேவ சுதம் தேவம்
கம்ச சாணூர மர்தனம்
தேவகி பரமானந்தம்
கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

ஓம் ஹரி ஓம்
***

8 கருத்துகள்:

  1. அனைவருக்கும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்
    பதிவு அருமை.
    படங்களும் பாசுரங்களும் அருமை.
    பாசுரங்களை படித்து கண்ணனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்துகளும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
      நல்வாழ்த்துகள்

      நீக்கு
  2. அருமை அருமை. அத்தத்தின் பத்தாம் நாள். ரோகிணி நட்சத்திரத்தை எப்படி பெரியாழ்வார் குறிப்பிடுகிறார் பார்த்தீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் தெய்வீகம்..
      புண்ணியம் செய்தார்க்கே புரியும்..

      ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
      நல்வாழ்த்துகள்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  3. ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
  4. குட்டிக்கிருஷ்ணர் படங்கள் நன்றாக உள்ளன. அனைவருக்கும் கிருஷ்ண ஜயந்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. அருமை.  கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. தேர்ந்தெடுத்து பகிர்ந்து கொண்ட படங்கள் அனைத்தும் அழகு. தாமதமான கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..