நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 7
வெள்ளிக்கிழமை
திருப்புகழ்
-: திருப்பரங்குன்றம் :-
தனத்தனந் தந்தன தனத்தனந் தந்தன
தனத்தனந் தந்தன ... தந்ததான
பொருப்புறுங் கொங்கையர் பொருட்கவர்ந்
தொன்றிய பிணக்கிடுஞ் சண்டிகள் ... வஞ்சமாதர்
புயற்குழன் றங்கமழ் அறற்குலந் தங்கவிர்
முருக்குவண் செந்துவர் .. தந்துபோகம்
அருத்திடுஞ் சிங்கியர் தருக்கிடுஞ் செங்கயல்
அறச்சிவந் தங்கையில் ... அன்புமேவும்
அவர்க்குழன் றங்கமும் அறத்தளர்ந் தென்பயன்
அருட்பதம் பங்கயம் ... அன்புறாதோ
மிருத்தணும் பங்கயன் அலர்க்கணன் சங்கரர் விதித்தெணுங் கும்பிடு ... கந்தவேளே
மிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழு
மிசைக்கிடுஞ் செந்தமிழ் ... அங்கவாயா
பெருக்குதண் சண்பக வனத்திடங் கொங்கொடு திறற்செழுஞ் சந்தகில் ... துன்றிநீடு
தினைப்புனம் பைங்கொடி தனத்துடன் சென்றணை திருப்பரங் குன்றுறை ... தம்பிரானே..
-: அருணகிரிநாதர் :-
மலை போன்ற தனங்களுடன்
பொருள் தனைக் கவர்ந்து
அதனால் பிணக்கம் கொள்கின்ற
வஞ்சனையுடைய பெண்கள்
மேகம் போலச் சுருண்டுள்ள
கூந்தல் அழகியதாய் மணம் கமழ்வதாய்
கருமணற் கூட்டம் போல விளங்கி, முருக்கின் இதழ் போன்ற
வளம் மிக்க செம்பவள இதழ்களால் போகத்தைத் தந்து, விஷம் போன்ற மோகத்தை ஊட்டுகின்றவர்கள்..
எதிர்வாதம் செய்து செங்கயல் போன்ற கண்கள் மேலும் சிவக்கும்படி பொருள் மீது ஆசை வைக்கின்ற
பொது மகளிரிடத்தில் நான் உழன்று, திரிந்து உடலும் மனமும் தளர்வதால் என்ன தான் பயன்?..
உனது திருவடித் தாமரைகளில் என் மனம் அன்பு கொள்ளாதோ?..
பிறவியைத் தருகின்ற நான்முகப் பிரமனும்
மலர்க் கண்களை உடைய திருமாலவனும் சிவ பெருமானும்
முறைப்படி எப்போதும் வணங்குகின்ற கந்தவேளே..
மிகுத்து வந்த சமணர்கள் பெருங் கழுவில்
ஏறும்படி வைத்த, செந்தமிழ்த் திருஞானசம்பந்தனே..
குளிர்ந்திருக்கின்ற சண்பகக் காட்டில்
நறுமணத்துடன் சந்தனமும் அகிலும்
நெருங்கி வளர்ந்துள்ள
தினைப்புனத்தில்
வள்ளி எனும் பசுங்கொடியைத் தழுவி
திருப்பரங்குன்றில்
வீற்றிருக்கின்ற பெருமாளே..
**
முருகா முருகா
முருகா முருகா..
*
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
முருகா சரணம்
பதிலளிநீக்குஓம் நமசிவாய
முருகா சரணம்..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஜி..
ஓம் நமசிவாய! அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குமுருகா சரணம்..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி வெங்கட்..
திருப்புகழை பாடி திருப்பரங்குன்றம் முருகனை வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குமுருகா சரணம்..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ..
திருப்பரம் குன்று பெருமானே ஓம் சரணம்.
பதிலளிநீக்குமுருகா சரணம்..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி மாதேவி..