நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 26
ஞாயிற்றுக்கிழமை
மதிப்புக்குரிய கமலாஹரிஹரன் அவர்களது தளத்தில் 2022 ஜூலை 15 அன்று வெளியான கீரைப் புராணம் என்ற பதிவிற்காக நான் எழுதிய பாடல் இது..
செங்கீரை சிறுகீரை
அகத்தியுடன் அரைக்கீரை
புளிக்கீரை புகழ் முருங்கைத்
தளிர்க்கீரை
பசலையுடன் வருகீரை
வல்லாரை கண்ணியென
வகுத்தார் வகுத்த வகைக்கு
மேலுண்டோ வாழ்வில் நெறி..
இதனைப் பாராட்டி மைசூரில் இருந்து
தவமணி என்ற வலைப்பதிவர் -
வேறொரு நூலின் பாடல் என்று இதைக் கருதி - அந்த நூலின் மேல் விவரங்களைத் தருமாறு சில தினங்களுக்கு முன் கேட்டிருந்தார்..
தவமணி அவர்கள் முதல் முறையாக நமது தளத்திற்கு வந்திருக்கின்றார்.. அவர்களுக்கு நல்வரவு...
செங்கீரை சிறுகீரை அகத்தியுடன் - என்ற பாடல் ஐயன் அருள் கொண்டு நினைத்த மாத்திரத்தில் எளியேன் எழுதியதே.. இதற்காக நானேதும் திட்டமிடவில்லை..
இந்நிலையில் மூல நூலின் பெயரை எவ்விதம் சொல்வது?..
அன்றைய பதிவில்
ஸ்ரீ அகத்தியர் தமது நல்லாசிகளுடன்
என் மனதில் உருவான கீரைப் புராணம் மீண்டும்
தங்களுக்காக!..
கேளப்பா சிறுமதலாய்
கீரைகளின் பெருமைதனை
ஆதியிலே அகத்தியரும்
ஆங்கமர்ந்து உரைத்தாரே..
அகத்திக்கீரை |
சித்தத்தை இரத்தத்தைத்
தெளிவிக்கும் அகத்தியுடன்
சேராத இடம் சேர்ந்து சேர்த்து
வந்தநோய் தீர்க்கும் சிறுபசலை
பலங்கொண்ட மேனிக்குப்
பெரும் பசலை நன்றாகும்
வெந்தயக் கீரையது
வாதத்திற் கென்றாகும்..
கருமணிக்கீரை (மணித்தக்காளி |
கருமணிக் கீரையும் தான்
கடுவயிற்று வலிக்காகும்
நன்னாறி அதுவுந்தான்
நாவறட்சி தனைப் போக்கும்..
கற்பூர வல்லியவள்
சஞ்சீவி என்றாகி
கறி வேப்பிலை கூட
அருமருந்து ஆகிடுதே..
அறங்கொண்ட ஆண்மைக்கு
ஓரிதழை உணர்வாயே
ஆயிரம் நன்மைக்கு
அரைக்கீரை அறிவாயே..
முருங்கைக்கீரை |
முளை கொண்ட பயறுடனே
முருங்கையின் கீரையது
பேறடைந்த பெண்ணுக்கு
பெருவிருந்து ஆகுமே..
வலி கொண்ட மூட்டுக்கு
முடக்கத்தான் போதுமே..
குப்பையிற் மேனியால்
வீக்கமும் வெருண்டோடுமே..
ஆவாரை |
நல்லாரைக் காத்து வரும்
வல்லாரை இகழாதே
பொன்னாரைப் போலிருக்க
ஆவாரை மறவாதே..
கண்ணுக்குக் கண்ணியுடன்
கனிவுடன் கேளப்பா
காமாலை வந்தக்கால்
கீழ் நெல்லி பாரப்பா..
தூதுவளை |
காபாலம் குளிரத்தான்
கரிசாலை தான் படைத்தான்
தூதுவளை துயர் தீர்க்கும்
ஈளையுடன் பிணி போக்கும்..
தருதருங் கீரையுடன்
செடிக்கீரை கொடிக்கீரை
சிறப்பான விருந்தாகுமே
குலத்துக்கு மருந்தாகுமே..
துளசி |
நலந்தரு கீரையுடன்
நறுந்துளசி தும்பையும்
இஞ்சியும் மஞ்சளும்
ஏலமில வங்கமும்
குறுமிளகு சீரகம்
கோதிலா கல்லுப்பு
எல்லாமும் மருந்துதான்
துயரங்கள் தான் தீர்க்குமே
வேப்பிலை |
வேப்பிலையின் மகிமைதனை
வித்தகனே நீயறியாய்
காப்பிலை யாம் மாவிலையை
விரித்துரைக்க ஆகாதே
விடங்கொண்ட கீரையும்
இவ்விடத்தில் மிகவுண்டு
தக்கதொரு குரு கண்டு
தகவறிதல் வேண்டுமே..
செங்கீரை அதனோடு
மா வடுவை உண்ட சிவமணி
பதந்தனைசிந்தை வைத்தேன்
செம்மையது சேர்க என்று..
செழுங்கீரை அது
கொண்ட சீர் எல்லாம்
சொல்லி வைத்தேன்
வையகமும் வாழ்க என்று..
***
தனது மகளின் ஆய்விற்கு (Project) தேவைப்படுவதாக சொல்கின்றார்...
எனது பதிவு ஒன்று ஆய்வுக்கு ஆகின்றது என்பது ஆச்சர்யம் தான்!..
நாம் அனைவரும் அக்குழந்தைக்காக பிரார்த்தனை செய்து கொள்வோம்..
தவமணியின் மதலைக்கு
தக்கதொரு தகவளித்து
நவமணியின் ஒளியாக
நல்லவளம் தானளிக்க
திருமணியாள் வருகவே
திருவருளும் புரிகவே
சிவமணியும் அருள்கவே
மனமணியும் ஒளிர்கவே..
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
அருமையான பாடல் கீரைகளின் பயன்களை பற்றி.
பதிலளிநீக்குகுழந்தை தவமணிக்கு கிடைத்த பேறு இந்த பாடல்.
இயற்கை நலம் சேரும் பாடல்.
சரஸ்வதியின் அருளும் உங்களின் ஆசியும் தவமணியை மேலும் உயர வைக்கும் கல்வியில்.
தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நீக்குநாமும் வாழ்த்துவோம்..
நன்றி..
கீரைகளின் பயன் பற்றிய பாடல் அருமை. தவமணி அவர்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும்
நீக்குமகிழ்ச்சி...
நன்றி ஸ்ரீராம்..
கவிதைகள் மிகருமை. நன்னாரி... றி வராது
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நீக்குநெல்லை அவர்களுக்கு நன்றி..
கீரைகளில் பயன்கள் பற்றிய பாடல்கள் அருமை.
பதிலளிநீக்குஆய்வுசெய்யும் மாணவிக்கு உங்கள் பாடல்கள் உதவியளிக்கிறது. உங்களுக்கு வாழ்த்துகள்.
அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி...
நீக்குநன்றி மாதேவி..
பயனாகும் பதிவு பெருமையான விடயமே...
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நீக்குநன்றி ஜி..
சிறப்பு. உங்கள் பாடல் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஉங்களது கீரைப்பதிவு படங்களுடன் அருமை. மீண்டும் படித்து ரசித்தேன். உங்களது கவிதை ஒரு மாணவிக்கு பயனுள்ளதாக அமையப் பெற்றிருக்கிறது. கவிதையை அழகாக எழுதிய உங்களுக்கும், அதைக் கொண்டு தன் கல்விக்காக பயன்படுத்திக் கொண்ட சகோதரிக்கும் எனது அன்பான வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நாமும் வாழ்த்துவோம்..
நீக்குஇந்தப் பதிவுக்குத் தாங்கள் வர வேண்டுமே என்று இருந்தேன்..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நன்றி ..
அன்பின் வருகையும் கருத்தும்
பதிலளிநீக்குவாழ்த்தும்
மகிழ்ச்சி...
நன்றி வெங்கட்..
துரை அண்ணா உங்க கவிதையை பற்றி சொல்லணுமா...முன்பு வாசித்த நினைவும் வருகிறது. எல்லா வகையும் உட்படுத்தி!
பதிலளிநீக்குபாருங்க உங்க கவிதை யைப் பார்த்து புதிய நட்பு தவமணி அவர்கள் நூலின் பாடல் என்று கருதி கேட்கும் அளவிற்கு இருந்திருக்கு பாருங்க! பாராட்டுகள் துரை அண்ணா.
உங்கல் பாடல் அவருடைய மகளுக்கு உதவியாக இருப்பதும் சிறப்பு.
கீதா
எல்லாம் தாங்கள் அளித்த ஊக்கமும் உற்சாகமும் தான்..
நீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நன்றி சகோ..