நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி வெள்ளி
மூன்றாம் கிழமை
ஸ்ரீ முத்துமாரியம்மன்
புன்னைநல்லூர்
தஞ்சை
தஞ்சையை ஆட்சி செய்த வெங்கோஜி மன்னரின் மகளுக்கு அம்மை நோய் வாய்த்ததனால் கண் பார்வை பறி போயிற்று...
அப்போது சிறிய குடிலாக இருந்த இக்கோயிலினுள் வந்து உறங்கிக் கிடக்க ஓர் இரவுப் போதில் இளவரசிக்கு கண் பார்வை மீண்டது...
வெங்கோஜி மன்னனால் திருப்பணி செய்யப்பட்ட திருக்கோயில்..
புற்றுருவாய் விளங்கிய அம்மனுக்கு திருமேனி அமைத்தவர் ஸ்ரீஸ்ரீ மகான் ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திரர்..
பாடகச்சேரி மகான் ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள் பல காலம் இங்கிருந்து அருட்பணிகள் செய்திருக்கின்றார்..
இன்றளவும் அம்பாள் நிகழ்த்துகின்ற அற்புதங்கள் ஆயிரம் ஆயிரம்..
நன்றி :
அம்மன் மூலஸ்தானத்தின் திருக்காட்சிகள்..
கோயில் வளாகத்தில் நான் எடுத்த சில காட்சிகளும் இங்கு இடம் பெற்றுள்ளன..
காணொளி தொகுப்பு :
தஞ்சையம்பதி
ஆடி வெள்ளியில் அம்மனின் அருட்காட்சி தரிசனம். நன்றி. படங்களை ரசித்தேன்.
பதிலளிநீக்குஅன்பின் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
இனிய பாடல் பகிர்வு. அது சரி, யு டியூப் பாடலை நேற்று எம்பெட் செய்ய முடிந்ததா? நேற்று நாங்கள் மிக சிரமப்பட்டு போனோம்.
பதிலளிநீக்குஇது முன்பே செய்து வைத்திருந்தேன்...
நீக்குமகிழ்ச்சி.. நன்றி..
ஆடி வெள்ளியில் அம்மன் தரிசனம். நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. ஆடி வெள்ளியில், அருள்மிகும் புன்னை நல்லூர் மாரியம்மன் தரிசனம் கிடைத்து மிகுந்த மன மகிழ்ச்சியடைந்தேன். அன்னை அனைவரையும் சகல நலன்களையும் தந்து நல்லபடியாக வைத்திருக்க, அன்னையை மனதாற பிரார்த்தித்துக் கொண்டேன்.
சீர்காழி அவர்களின் பாடல் பகிர்வும், காணொளியின் சிறப்பும், மனதை நிறைத்தது. கண்டு கேட்டு மெய்யுருகிப் போனேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ..
ஆடி வெள்ளி புன்னை நல்லூர் அம்மன் தரிசனம். அம்மன் அலங்காரங்கள் அழகு . கண்டு வணங்கினோம்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி மாதேவி..