நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 6
வெள்ளிக்கிழமை
இன்று
திருச்செந்தூர்
திருப்புகழ்
தானன தானன தானன தானன
தானன தானன ... தனதானா
ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை ... நெறிபேணா
ஈனனை வீணனை ஈடெழு தாமுழு
ஏழையை மோழையை ... அகலாநீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை ... இகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது ... மொருநாளே
நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் ... குறமாதை
நாடியே கானிடை கூடிய சேவக
நாயக மாமயில் ... உடையோனே
தேவிம நோமணி ஐயைப ராபரை
தேன்மொழி யாள்தரு ... சிறியோனே
சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
சீரலை வாய்வரு ... பெருமாளே...
-: அருணகிரிநாதர் :-
அம்பு போன்ற விழிகளை உடைய பெண்களை விரும்பி
அவர் பின்னே அலைந்து நிலை கெட்டவனை
மூடனை ஒழுக்கம் இல்லாத கயவனை படிப்பறிவு இல்லாத மடையனை,
விட்டு அகலாத தீவினை பிணிகள்
பலவற்றை உடையவனை,
சிறிதும் உண்மை இல்லாதவனை -
இகழ்ந்து ஒதுக்கி வைத்து விடாமல்
மணிச் சிலம்புகள் சிறந்து விளங்குகின்ற நினது
திருப் பாதங்களை, யான் முக்தி பெறுவதற்காகத்
தந்தருளும் திருக்குறிப்பும் உண்டோ?..
புலவர்களால் புகழப்பட்ட நாரத முனிவர்
வர்ணித்த குறப் பெண் வள்ளியைக் காண விரும்பி தினைப்புனத்திற்குள் சென்றவனே..
தலை சிறந்தவனே
மயில் வாகனனே..
தேவி மனோன்மணியும்
அன்னை பராபரையும் ஆகிய
தேன் மொழி உமையாளின்
இளைய மகனே
விண்ணுயர்ந்த சோலைகளின்
நிழலில் விளங்குகின்ற
திருச்செந்தூரில் அமர்ந்திருக்கும்
பெருமாளே..
**
வெற்றிவேல் போற்றி
வீரவேல் போற்றி..
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
முருகா வா... செந்தில் முதல்வா வா... கருணை செய்வாயே கந்தவேளே..
பதிலளிநீக்குவெள்ளி நாளில் திருச்செந்தூர் முருகன் பாடல் பகிர்வு நன்று.
பதிலளிநீக்குவேல் முருகனை வணங்குவோம்.
திருச்செந்தூர் திருப்புகழை பாடி முருகனை வனங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
முருகப் பெருமான் அனைவருக்கும் நல்லதையே நல்கட்டும்.
பதிலளிநீக்கு