நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 32
வியாழக்கிழமை
காசியம்பதிக்கு சமமானதாகச்
சொல்லப்படும் ஆறு தலங்களுள்
மூன்றாவது திருத்தலம்
விண்கொண்ட வெண்காடும் ஐயாறும் இரு
கண்கொண்ட மயிலாடு துறையோடு இடைமருது
மண்கொண்ட சாய்க்காடும் வாஞ்சியமும் தமிழ்ப்
பண்கொண்ட காசிக்கு இணையென்றே பாடு..
திருமயிலாடுதுறை
இறைவன்
ஸ்ரீ மயூரநாதர்
அம்பிகை
ஸ்ரீ அபயாம்பிகை
தீர்த்தம் ரிஷப தீர்த்தம், காவிரி
தல விருட்சம் மாமரம்
கௌரிமாயூரம்..
ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பது பழமொழி..
இத்தலத்தில் அம்பிகை மயில் வடிவாகி ஈசனை வழிபட்ட போது ஈசனும் மயிலாகத் தோன்றி மயூர தாண்டவம் நிகழ்த்தியதாக ஐதீகம்..
இத்தலத்தில் ஸ்வாமி, அம்பாள் சந்நிதிகள் கிழக்கு நோக்கியவை..
துலா மாதம் எனும் ஐப்பசியில் கங்கையானவள் இங்கே காவிரியுடன் கலந்து பாய்வதாக தலபுராணம்..
அதனால் ஐப்பசியில் பெருந் திருவிழா நிகழ்கின்றது..
இங்கு காவிரியின் துலாக் கட்டம் வெகு சிறப்புடையது..
குதம்பைச் சித்தர் முக்தி நலம் எய்தியது இத்தலத்தில் தான்..
அவரது ஜீவ சமாதி கோயிலில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு அருகில் உள்ளது..
இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் திருப்பதிகங்கள் இரண்டும் நாவுக்கரசர் திருப்பதிகம் ஒன்றும் கிடைத்துள்ளன..
மாவட்டத் தலைநகரான மயிலாடுதுறைக்கு பேருந்து ரயில் வசதிகள் தாராளமாகவே உள்ளன..
பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிமீ., தூரத்தில் ஸ்ரீ அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது..
சில ஆண்டுகளுக்கு முன் இத்தலத்தை தரிசித்திருக்கின்றேன்..
தணியார் மதிசெஞ் சடையான் தன்
அணியார்ந் தவருக் கருளென்றும்
பிணியா யினதீர்த் தருள்செய்யும்
மணியான் மயிலா டுதுறையே..1/38/5
-: திருஞானசம்பந்தர் :-
வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான்
அஞ்சி றப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மாமயி லாடு துறையுறை
அஞ்சொலாள் உமைபங்கன் அருளிலே.. 5/39/4
-: திருநாவுக்கரசர் :-
**
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
இத்தலத்தைத் தரிசிக்கும் வாய்ப்பு இன்னும் எனக்கு கிட்டவில்லை.
பதிலளிநீக்குநிச்சயமாக வாய்ப்பு கிட்டும்..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
மயிலாடுதுறை கோவில் கும்பாபிஷேகம் 3.9.2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது வாய்ப்பு இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். பத்திரிக்கை அனுப்பி இருக்கிறார்கள் மயிலாடுதுறை நட்புகள்.
பதிலளிநீக்குபடங்களும் , தல வரலாறும் அருமை.
பதிகங்களை பாடி தரிசனம் செய்து கொண்டேன்.
மயிலாடுதுறை கோயில் திருக் குடமுழுக்கு பற்றிய தகவலுக்கு மகிழ்ச்சி..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
தலம் பற்றிய விஷயங்கள் சிறப்பு.
பதிலளிநீக்குகீதா
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
நீக்குசிறப்பு...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
ஓம் நம சிவாய..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
மாயவரம் வழி அடிக்கடி போனாலும் கோயிலைச் சில வருடங்கள் முன் தான் பார்த்தேன். அப்படியே சித்தர் காடும் போனோம். பெருமாளூம் காட்சி கொடுத்தார்.
பதிலளிநீக்குமயிலாடுதுறையில் ஸ்ரீ பரிமள ரங்கன் கோயிலுக்குச் சென்றதில்லை..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி அக்கா..
ஒரு முறை செல்லும் பாக்கியம் கிடைத்தது.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்கு