நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஆகஸ்ட் 14, 2023

திருவெண்காடு

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 29
 திங்கட்கிழமை


காசியம்பதிக்கு சமமானதாகச் 
சொல்லப்படும் ஆறு தலங்களுள் 
முதலாவது திருத்தலம்

விண்கொண்ட வெண்காடும் ஐயாறும் இரு
கண்கொண்ட மயிலாடு துறையோடு இடைமருது
மண்கொண்ட சாய்க்காடும் வாஞ்சியமும் தமிழ்ப்
பண்கொண்ட காசிக்கு இணையென்றே பாடு..

திருவெண்காடு


இறைவன் 
ஸ்ரீ ஸ்வேதாரண்யேசுவரர்
அம்பிகை
ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை

தீர்த்தங்கள்
சூரிய, சந்திர, அக்னி 
தலவிருட்சங்கள்
ஆல், கொன்றை, வில்வம்.

இருபத்தோரு தலைமுறைகளையும் ஈடேற்றும் தலம்..

இத்தலத்தில் பிரமன் வழிபட்டு அம்பாளிடம்  உபதேசம் பெற்றதால் அம்பாளுக்கு பிரம வித்யாம்பிகை என்ற திருப்பெயர். 

இந்திரனின் - வெள்ளை யானை வழிபட்டு துர்வாச முனிவரின் சாபம் நீங்கப் பெற்றது..

மருத்துவன் என்ற அசுரன் பிரம்மனிடம் வரம் பெற்று வழக்கம் போல தேவர்களுக்கு இன்னல்கள் செய்தான்.. 

அவனை அடக்கும்படி ஈசன் நந்திகேசனை அனுப்பி வைக்க மருத்துவாசுரன் நந்திகேசனை எதிர்த்து தாக்கினான்..


ஈசன் சினம் கொண்டு
ஸ்ரீ அகோர மூர்த்தி - எனத் தோன்றினார்.. 

அவரைக் கண்டு  அச்சமடைந்த மருத்துவாசுரன் அடங்கி ஒடுங்கி  அழிந்த தலம்..

இத்தலத்தில் ஸ்வாமி அம்மன் சந்நிதிகள் கிழக்கு நோக்கியவை..

அம்மனின் சக்தி பீடங்களில் இது பிரணவ சக்தி பீடம் ஆகும்.. 


அம்மன் சந்நிதிக்கு அருகில் புதன் சந்நிதி..
நவகிரகங்களில் புதன் தொழுத நலம் பெற்ற தலங்களில் இதுவும்
ஒன்று..

பட்டினத்தடிகளின் இயற்பெயர் திருவெண்காடர் என்பதாகும்..

மயிலாடுதுறையில் இருந்தும் சீர்காழியில் இருந்தும் பேருந்துகள் இயங்குகின்றன..

சில ஆண்டுகளுக்கு முன் இத்தலத்தை  தரிசித்திருக்கின்றேன்..

இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் திருப்பதிகம் மூன்றும்
நாவுக்கரசர் திருப்பதிகம் இரண்டும் சுந்தரர் திருப்பதிகம் ஒன்றும் கிடைத்துள்ளன..


சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளநன் குடையானு முக்கணுடை இறையவனே.. 2/47/7
-: திருஞானசம்பந்தர் :-

கூடி னான்உமை யாள்ஒரு பாகமாய்
வேட னாய்விச யற்கருள் செய்தவன்
சேட னார்சிவ னார்சிந்தை மேயவெண்
காட னார் அடியே அடை நெஞ்சமே.. 5/49/6
-: திருநாவுக்கரசர் :-

குடம் எடுத்து நீரும் பூவுங் கொண்டு 
தொண்டர் ஏவல் செய்ய
நடம்  எடுத்தொன் றாடிப் பாடி
நல்குவீர் நீர் புல்கும் வண்ணம்
வடம் எடுத்த கொங்கை மாதோர்
பாகமாக வார்கடல் வாய்
விடம் மிடற்றில் வைத்த தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.. 7/6/5
-: சுந்தரர் :-

விருந்தினன் ஆகி வெண்கா டதனில்
குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும்
-: மாணிக்கவாசகர் :-
**

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

18 கருத்துகள்:

  1. திருவெண்காடு ஈசனையும் அம்மையையும்  வேண்டுவோம்.  நலம் யாவும் பெற முயற்சிப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. திருவெண்காடு ஜெயராமன் என்றொரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் உண்டு.

    பதிலளிநீக்கு
  3. ஓம் நமசிவாய வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  4. பல முறை சென்றுள்ளேன். பார்க்க வேண்டிய கோயில்களில் ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஐயா..

      நீக்கு
  5. சிறப்பான தல விவரங்கள். எனது தில்லி வாழ் நண்பர் ஒருவர் இந்த ஊரைச் சேர்ந்தவர். இன்னும் இங்கே சென்று இறைவனைத் தொழ வாய்ப்பு அமையவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நீக்கு
  6. திருவெண்காடு இறைவன் இறைவி தரிசனம் மற்றும் புராணம் சிறப்பு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  7. திருவெண்காடு பதிகங்களை பாடி மனதார வேண்டிக்கொண்டேன்.
    திருவெண்காட்டில் படித்த போது வெள்ளிக்கிழமை தோறும் பள்ளியில் கோவிலுக்கு அழைத்து செல்வார்கள், அப்போது அம்மன் சன்னதியில் சுந்தரர் தேவாரம் குடம் எடுத்து நீரும், பூவுங் பாட்டை பாடி வலம் வருவோம்.
    அம்மன் கோவில் சுவற்றில் எழுதி இருப்பார்கள் முதலில் அதை பார்த்து படித்தோம், அப்புறம் மனப்பாடம் ஆகி விட்டது.

    ஞாயிறு தோறும் என் கணவருடன் சென்று வருவேன். 7 வருடங்கள் அங்கு இருந்த காலங்கள் மனத்திரையில்.
    ஆவணி ஞாயிறு மிகவும் சிறப்பாக இருக்கும் . மூன்றாவது ஞாயிறு சங்காபிஷேகம் நடக்கும் அகோரமூர்த்திக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மேலதிக விவரங்களும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. திருவெண்காடு பல முறை போன ஊர். இங்கேயும் சிறப்பான தரிசனம் கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி அக்கா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..