நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 18
வியாழக்கிழமை
இன்று
ஆடிப் பெருக்கு
காவிரி அன்னையை
வாழ்த்தி வணங்குவோம்..
கலையாய் வருகின்ற காவிரி வாழ்க..
நிலையாய் வளந்தரு வாழ்வே வருக..
அலையாய் அழகாய் அமுதாய் வருக..
இலையாய் மலராய் கனியாய் வாழ்க..
கலைமிகு நின்றன் கழனிகள் வாழ்க..
விலைமிகு வேளாண் புகழுடன் வாழ்க..
சிலையொடு கோயிற் கோலம் வாழ்க..
நிலைதரு தெய்வக் களஞ்சியம் வாழ்க..
காண்கிற தெல்லாம் கவினுடன் வாழ்க..
பூண்கிற தெல்லாம் பொலிவுடன் வாழ்க..
தாங்கி நலந்தரும் தமிழ் நலம் வாழ்க
ஓங்கி வளந்தரும் உயிர்க் குலம் வாழ்க..
அன்பினில் ஆருயிர்ச் சுடர்களும் வாழ்க
நன்றியில் நின்றோர் நற்குலம் வாழ்க..
தென்றலில் தெய்வத் திருவருள் வாழ்க..
சென்றிடும் திசை தனில் செல்வங்கள் வாழ்க..
கவினுறு காவிரி கண்களில் வாழ்க
கலைதரு காவிரி நெஞ்சினில் வாழ்க
நவில்தொறும் நலங்கள் நாளும் தருக
நிலைபெறு மங்கல மாண்புகள் தருக..
அலைபுனல் காவிரி அன்புடன் வருக..
ஆருயிர்க் குலங்கள் தழைத்திட வருக..
அலைதவழ் செல்வக் காவிரி வருக..
சிலைமுக தேவி திருவருள் தருக
மனந்தொட்டு வாழ்வோர் மாண்புகள் வாழ்க
தனந்தொட்டுத் தருவோர் தகவுற வாழ்க
இதந்தொட்ட தமிழினில் வந்தனை வாழ்க
பதந்தொட்டுப் பணிந்த கவியினில் வாழ்க..
ஃஃஃ
காவிரி வாழ்க கலைகளும் வாழ்க..
கைதொழுவார் மனை மங்கலம் வாழ்க..
**
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
காவிரியால் விளைந்திட்ட கவிதை மிக அருமை.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நீக்குஆடிப்பெருக்கு வாழ்த்துகள் ஜி
பதிலளிநீக்குஆடிப்பெருக்கு நல் வாழ்த்துகள்..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி ஜி..
ஆடிப்பெருக்கு வாழ்த்துகள்1
பதிலளிநீக்குகாவிரி அன்னையை வாழ்த்தி போற்றி நீங்கள் எழுதிய கவிதை மிக அருமை. நவில்தொறும் நலங்கள் நாளும் அருள வேண்டுவோம்.
படங்கள் மிக அழகு.
ஆடிப்பெருக்கு நல் வாழ்த்துகள்..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள். காவிரித்தாயைப் பற்றி தாங்கள் இயற்றிய கவிதை நன்றாக உள்ளது. அன்னை அனைவருக்கும் நல்லருள் தர வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நீக்குத்ங்களுக்கும் ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்..
மகிழ்ச்சி.. நன்றி..
அருமை ஐயா...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
மகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
ஆடிப் பெருக்கிற்கு காவிரி அன்னையைப் போற்றி எழுதிய கவிதை அருமை, துரை அண்ணா.
பதிலளிநீக்குகீதா
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
நீக்குவைத்தீஸ்வரன் கோயிலில் இருந்தோம்.
பதிலளிநீக்கு