நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 29, 2023

வராஹி தரிசனம்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 14
வியாழக்கிழமை


தேவி வழிபாட்டில்
தை அமாவாசையை அடுத்து 
சியாமளா நவராத்திரியில் ஸ்ரீ சியாமளா தேவியையும்
பங்குனி   அமாவாசையை அடுத்து 
வசந்த நவராத்திரியில் ஸ்ரீ மஹா லக்ஷ்மியையும்
ஆனி  அமாவாசையை அடுத்து 
ஆஷாட நவராத்திரியில்  ஸ்ரீ வராஹி அம்மனையும்
புரட்டாசி மகாளய அமாவாசையை அடுத்து 
சாரதா நவராத்திரியில் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியையும் வழிபடுவது வழக்கம்..

மகாளய பட்சத்தில் வரும் நவராத்திரி மட்டுமே நாடெங்கும் கொண்டாடப்படுவது..

அந்த வகையில்
தஞ்சை பெரியகோயில்  ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா கடந்த (18ம் தேதி) கணபதி ஹோமத்துடன் துவங்கியது..


அம்மனுக்கு நாள் தோறும் காலையில் யாக பூஜையுடன் அபிஷேகமும் மாலையில்
அலங்காரமும் நடைபெற்றது..

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வாராஹி அம்மனுக்கு - 
இனிப்புகளாலும் 
மஞ்சளாலும் குங்குமத்தாலும்
 சந்தனத்தாலும் தேங்காய்ப் பூவினாலும் மாதுளை முத்துக்களாலும் தானியங்களாலும்  வெண்ணெயினாலும் கனிகளாலும் காய்களாலும் மலர்களாலும் அலங்காரம் செய்யப் பெற்றது..

கீழுள்ள படங்கள்
நன்றி: தஞ்சாவூர்  Fb

முதல் நாள் இனிப்பு
இரண்டாம் நாள் மஞ்சள்
மூன்றாம் நாள் குங்குமம்
நான்காம் நாள் சந்தனம்
ஐந்தாம் நாள் தேங்காய்த் துருவல்
ஆறாம் நாள் 
மாதுளை முத்துகள்
ஏழாம் நாள் தானியங்கள்
எட்டாம் நாள் வெண்ணெய்
ஒன்பதாம் நாள்
கனிகள்
பத்தாம் நாள் காய்கள்
 மலர் அலங்காரம்
***
ஆன வராக முகத்தி பதத்தினில் 
ஈனவராகம் இடிக்கும் முசலத்தோடு 
ஏனை எழுபடை ஏந்திய வெண்ணகை 
ஊனம் அற உணர்ந்தார் உளத்தோங்குமே!..
-: திருமூலர் :-

ஓம் சக்தி ஓம்
***

16 கருத்துகள்:

  1. வாராஹி அம்மனை தரிசித்து, வணங்கி கொண்டேன்.  க்ரூப்பில் ஒரு பெண் பதிவிட்டிருந்தார், வாராஹி அம்மனை படம் எடுத்தாராம்.  படத்தில் அம்மன் விழவில்லையாம்.  கேமிராவில் பழுதில்லையாம்.  அம்மா நினைக்காமல் படத்தில் வராதாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தஞ்சை வராஹி அம்மனை ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு நானும் படம் எடுத்துள்ளேன்.. இப்போதெல்லாம் மூலஸ்தானத்தில் மற்றும் வராஹி அம்மனை படம் எடுக்க விடாமல் விரட்டுகின்றார்கள்.. படமெடுப்பது தேவஸ்தானத்தின் அனுமதி பெற்ற்வர்கள் மட்டுமே.. ஆனாலும் தில்லாலங்கடி வேலைகளும் உள்ளன..

      வராஹி அம்மனை பட்ம் எடுத்தால் பதிவாகவில்லை என்பது அவரவர் சொந்த கருத்து..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. சிறப்பான தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அன்னை ஸ்ரீ வாராகி அம்மனை தரிசித்துக் கொண்டேன். அன்னைக்கு ஒவ்வொரு அலங்காரங்களும் சிறப்பாக உள்ளது. அன்னையின் அலங்காரங்கள் ஒவ்வொன்றையும் கண்டு தரிசித்து ஆனந்தமடைந்தேன். இவ்வகையான பக்திப் பகிர்வுக்கு உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்பது தெரியவில்லை.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இவ்வகையான பக்திப் பகிர்வுக்கு உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்பது.. ///

      இந்தப் படங்களை எடுத்தவர் யாரோ ..

      எனக்கு ஒரு முறை மட்டுமே வாய்த்தது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  4. அருமையான தரிசனம். ஸ்ரீவராகி அம்மன் அலங்காரங்கள் அருமை. ஸ்ரீவாகி அனைவருக்கும் நலங்களை அருள வேண்டுகிறேன்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///ஸ்ரீ வராகி அம்மன் அனைவருக்கும் நலங்களை அருள வேண்டுகிறேன்.///

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  5. வராகி அம்மன் அலங்காரங்கள் மிகவும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  6. வாராஹி நேற்று நம்ம வீட்டுக்கும் வந்தாள். வாராஹி நேற்று நம்ம வீட்டுக்கும் வந்தாள். எல்லா அலங்காரங்களின் படங்களும் எனக்கும் வந்திருந்தன. நாம் படம் எடுத்தால் வராது என்கின்றனரே, இவங்களுக்கெல்லாம் எப்படி வந்தது என நினைச்சுப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வராஹி அம்மனை படம் எடுத்தால் பதிவாகவில்லை என்பது அவரவர் சொந்த கருத்து..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றியக்கா..

      நீக்கு
  7. வராகி அம்மன் படங்கள் அனைத்தும் அழகு!!! அலங்காரங்களும்.. எல்லோருக்கும் நலமே விளையட்டும்.

    நல்ல தரிசனம்

    கீதா

    பதிலளிநீக்கு
  8. எல்லோருக்கும் நலமே விளையட்டும்..

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
    நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  9. எங்கள் ஊரிலும் சிறப்பாக நடைபெற்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் தகவலும் மகிழ்ச்சி..

      நன்றி தனபாலன்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..