நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி முதல் தேதி
வெள்ளிக்கிழமை
இன்றைய பதிவில்
திருவிடைக்கழி
திருப்புகழ்
தனத்த தானன தனதன ... தனதான
மருக்கு லாவிய மலரணை ... கொதியாதே
வளர்த்த தாய்தமர் வசையது ... மொழியாதே
கருக்கு லாவிய அயலவர் ... பழியாதே
கடப்ப மாலையை இனிவர ... விடவேணும்..
தருக்கு லாவிய கொடியிடை ... மணவாளா
சமர்த்த னேமணி மரகத ... மயில்வீரா
திருக்கு ராவடி நிழல்தனில் ... உறைவோனே
திருக்கை வேல்வடி வழகிய ... பெருமாளே..
-: அருணகிரி நாதர் :-
(நன்றி : கௌமாரம்)
நறுமணம் கமழ்ந்த மலர்ப் படுக்கையானது
கொதித்துச் சூடு தராமலும்,
வளர்த்த தாயும் மற்ற சுற்றத்தாரும்
(அலுப்புற்று)
வசை மொழிகளைப் பேசாமலும்
உள்ளொன்று வைத்து நட்பு கொண்டாடிய
அயலார்கள் பழித்துப் பேசாமலும் (இருப்பதற்கு)
உனது அடையாளமாகிய
கடப்ப மலர் மாலையைத் தந்து
அருள வேண்டும்..
கற்பக விருட்சத்தின் கீழ் உலவி வளர்ந்த
கொடியிடையாள் ஆகிய
தேவகுஞ்சரியின் மணாளனே..
சாமர்த்தியம் மிக்கவனே,
மரகத மணி போன்ற மயிலின் மீது
வருகின்ற வெற்றி வீரனே..
திருவிடைக்கழியில்
திருக் குரா மரத்தின்
நிழல் தனில் வீற்றிருப்பவனே,
திருக்கரத்தில்
வேல் ஏந்தி விளங்கும்
வடிவழகிய பெருமாளே.
**
திருவிடைக்கழி
மயிலாடுதுறையில் இருந்து
பதினேழு கிமீ தொலைவில்
திருக்கடவூருக்கு அருகில் உள்ளது..
திருவிடைக்கழியில் முருகன் - சிவபூஜை
செய்த நிலையில் பாவ விமோசன மூர்த்தியாக
விளங்குகின்றார்..
இங்குள்ள
குரா மரத்தின் நிழலில் முருகன்
தவம் இயற்றியதாக ஐதீகம்..
திருமுறைகளில் இடம் பெற்றுள்ள முருகன் திருத்தலங்களில் இதுவும் ஒன்று..
**
குராவடிக் குமரன்
திருவடி போற்றி!..
***
முருகனைக் கும்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே....
பதிலளிநீக்கு
நீக்குமகிழ்ச்சி.. நன்றி..
முருகா.. முருகா..
முருகா முருகா...
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். திருக்கடையூர் சென்றதுண்டு என்றாலும் இந்த தலம் குறித்து அறிந்திருக்கவில்லை. அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தால் சென்று வரவேண்டும்.
பதிலளிநீக்குமுருகா சரணம்... வாழ்க வையகம்
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. வெள்ளியன்று முருகன் திருப்புகழும், அதன் விளக்கமுமாக பதிவு நன்றாக உள்ளது. பார்வதி பரமேஷ்வரரோடு முருகனையும் வணங்கிக் கொண்டேன். திருவிடக்கழி கோவிலைப் பற்றிய தகவல்கள் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வெள்ளி நாளில் முருகன் பகிர்வு.
பதிலளிநீக்குமுருகா சரணம்.
திருப்புகழும் அதன் விளக்கமும் நன்று. திருக்கடவூருக்கு அருகேயே இருந்தும் இந்த ஊரெல்லாம் போனதே இல்லை. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்கு