நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 16, 2019

வெள்ளி மலர் 5

இன்று ஆடி கடைவெள்ளி...

அனைவரது இல்லத்திலும் செல்வமும் செழிப்பும்
தழைத்தோங்கிட வேண்டிக் கொள்கிறேன்...

ஸ்ரீ அபிராமவல்லி - திருக்கடவூர் 
ஸ்ரீ உண்ணாமுலையாள் 
ஸ்ரீ மீனாம்பிகை - மதுரை 
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி 
ஸ்ரீ கற்பகாம்பிகை - திருக்கோடிக்கா
ஸ்ரீ கற்பகாம்பிகை - திருக்கோடிக்கா 
ஸ்ரீ கற்பகவல்லி - திருமயிலை 
சகல செல்வங்களும் தரும் இமயகிரி ராச தனயை மாதேவி நின்னைச்
சத்யமாய் நிதயம் உள்ளத்தில் துதிக்கௌம் உத்தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில் நோயின்மை கல்வி தனதானியம் அழகுபுகழ் பெருமை இளமை
அறிவு சந்தானம் வலி துணிவு வாழ்நாள் வெற்றி ஆகுநல்லூழ் நுகர்ச்சி
தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுகானந்த வாழ்வளிப்பாய்
சுகிர்தகுணசாலி பரிபாலி அநுகூலி திரிசூலி மங்கள விசாலி
மகவு நான் தாய் நீ அளிக்கொணாதோ மகிமை வளர் திருக்கடவூரில்வாழ்
வாமி சுபநேமி புகழ்நாமி சிவசாமி மகிழ்வாமி அபிராமி உமையே!..
-: அபிராமிபட்டர் :-  

ஸ்ரீ ரங்கநாயகி -- திரு அரங்கம் 
ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் - உறையூர்
ஸ்ரீ பெருந்தேவித்தாயார் - திருக்காஞ்சி
ஸ்ரீ அலர்மேல்மங்கை 
ஸ்ரீ ஆண்டாள்
வடதிசைக் காவல் விசாலாட்சி - என்றும் 
தென் திசைக் காவல் மீனாட்சி
மேல் திசைக் காவல் காமாட்சி - எங்கள்
கீழ்த் திசை வாசலில் மனசாட்சி!..
-: கவியரசர் :- 

மனசாட்சி என்ற ஒன்று நம்மிடையே இருக்கும் வரையில்
தெய்வம் நம்மை விட்டு அகலாதிருக்கும் என்பது ஆன்றோர் வாக்கு!..


கீழ்த்திசை வாசல் என்பது நாளின் தொடக்கம்...

ஏனைய திசைகளில் தெய்வம் காவல் இருந்தாலும்
நாம் மனசாட்சிக்குக் காவல் இருத்தல் வேண்டும்...
மனசாட்சி நமக்குக் காவல் இருத்தல் வேண்டும்...


அஃதில்லையேல் - 
வாழும் நாள் எல்லாம் வாழும் நாட்களே அல்ல.. வீழும் நாட்கள்!...

என்ன அண்ணா... கதை விடுகிறீர்கள்!...
மனசாட்சியற்றவர்கள் எல்லாம் மகோன்னதமாக வாழ்கின்றார்களே?..
- என்று, ஆச்சர்யத்துடன் கேட்டால் -

அது வேறு விதமான கணக்கு..
அதைப் பற்றி வேறொரு பொழுதில் பேசுவோம்!...

இன்று நீங்கள் கேட்க இருக்கும் இனிய பாடல் 
இருளும் ஒளியும் என்ற திரைப்படத்திலிருந்து...

பாடல் - கவியரசர்
பாடியவர் - P. சுசிலா
இசை - திரை இசைத் திலகம் K.V. மகாதேவன்...



மங்கலம் வாழ்க..
மனையறம் வாழ்க..

ஓம் சக்தி ஓம் 
ஃஃஃ

24 கருத்துகள்:

  1. திருமகள் தேடி வந்தது சிறப்பு...

    குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
  2. வேறு கணக்கில் மனசாட்சி அற்றவர்கள் மகோன்னதமான வாழ்வது காலத்தின் கோலம்தான். நாம்தான் மனசைத் தேற்றிக்கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...
      மனசாட்சி மகோன்னதமாக வாழ்வது என்பது...

      ஒய்யாரக் கொண்டையாம்... தாழம்பூவாம்... என்பார்களே..

      அதைப் போலத்தான்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  3. அனைவருக்கும் நலம் பெருகி சிறக்கட்டும். ஆடி வெள்ளி சிறப்பு அனைத்து நாட்களிலும் நிறையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமெல்லாம் பெருகி
      நன்மையெல்லாம் சிறக்கட்டும்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. திருமகள் தேடி வந்தாள். நல்லதொரு பாடல், அனைத்துப் படங்களும் அழகோ அழகு என்றாலும் மீனாம்பிகையும், கற்பகாம்பிகையும் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தார்கள். அதிலும் கற்பகாம்பிகை நிற்கும் எழில் கோலம்! முன், பின் இருபக்க தரிசனமும் கண்ணுக்கு நிறைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சியக்கா..

      ஸ்ரீரங்க தரிசனம் பலமுறை...

      கம்லவல்லி நாச்சியாரை மட்டும் இன்னும் தரிசிக்க இயலவில்லை...

      அவளும் அருள்வாள் ஒருநாள்!..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. ரங்கநாயகியையும், கமலவல்லி நாச்சியாரையும் அந்த மாலையே காட்டிக் கொடுத்துவிடும். அழகு. வேடிக்கை என்னவெனில் இங்கே வந்தும் சுமார் எட்டு வருடங்கள் ஆகி விட்டன. திருச்சிக்கும் பலமுறை வந்து போயிருக்கேன். இன்னமும் கமலவல்லித் தாயாரைச் சென்று பார்க்கவில்லை. பக்கத்திலேயே இருக்கும் வெக்காளி அம்மனைப் பார்க்கப் பல முறை போயிருக்கேன். ஆனால் இது இன்னமும் கிடைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன இப்படிச் சொல்கிறீர்கள்!..

      அன்னை விரைவில் தங்களுக்குத் திருக்காட்சி அருள்வாளாக!...

      நீக்கு
    2. அசோ என்னமா இப்படி சொல்லிடீங்க ..விரைவில் கமலவல்லித் தாயாரை சேவிக்கும் பாக்கியம் கிடைக்கும் ..

      நீக்கு
  6. திருமகள் தேடி வந்தாள் பாடல் பிடித்த பாடல்.

    அழகான அம்மன் தரிசனம் . படங்கள் எல்லாம் நல்ல தேர்வு.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும்
      மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  7. கோயிலுக்குச் செல்லும்போதெல்லாம் உற்சவமூர்த்திகளை அலங்கரித்து வைத்திருப்பதை அதிகம் பார்த்து ரசிப்பேன். நம் இறைவன் மற்றும் இறைவியின் அலங்காரங்கள் மிகவும் அழகானவை. இப்பதிவில் திருக்கோடிக்காவின் அம்மனின் பின்புற அலங்காரத்தைக் கண்டு மிகவும் வியந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  8. அழகிய வெள்ளியின் தரிசனங்கள் நன்று.
    அருமையான பாடல் ஜி

    எல்லோர் வீட்டிலும் திருமகள் தேடி வரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையுடன் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அன்னையரின் அழகிய படங்களுடன் இதம் தரும் பதிவு ...

    வாழ்க நலம் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. அனைத்து அன்னையரும் இங்கு வந்து அழகான தரிசனம்...! முன்னழகு பின்னழகு என்று கற்பகாம்பிகை என்ன அழகு...நல்ல தரிசனம் அண்ணா..

    அந்த வேறு கணக்கு பல சமயம் பல கேள்விகளை எழுப்பும்...

    திருமகள் தேடிவந்தாள் அருமையான பாடல். பொருத்தமான பாடல்!

    எல்லாமே சிறப்பு துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா...
      தங்கள் வருகையுடன் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. படங்கள் அனைத்தும் அருமை...

    மஞ்சள் தந்தவள் விசாலாட்சி...
    நல்ல மலர்களைத் தந்தவள் மீனாட்சி...
    குங்குமம் தந்தவள் காமாட்சி...
    எங்கள் குடும்பத்தில் தேவியும் அரசாட்சி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையுடன் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  12. ஆடி வெள்ளியில் அருமையான தரிசனம்.

    பாடலும் சிறப்பு. மீண்டும் கேட்டு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..