நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 14, 2018

அன்புடன் நன்றி..

கடந்த ஏப்ரல் 24 அன்று
மூங்கில் பாலம் எனும் எனது கதை எங்கள் Blog ல் வெளியானது...

அன்பின் நண்பர்களும் ஏனைய பதிவர்களும் 
மனதார பாராட்டி கருத்துரை இட்டிருந்தனர்..

அன்றைக்கு இருந்த சூழ்நிலையில்
உடனுக்குடன் அனைவருக்கும் நன்றி நவில்வதற்கு இயலவில்லை....

நான் ஊரிலிருந்த வரைக்கும் -
என்னிடம் இருந்த மடிகணினியுடன் 
கைத்தொலைபேசியின் இணைய இணைப்பு 
இணைந்து இயங்காததே அதற்குக் காரணம்...

இங்கு வந்த பின்னரும் அடுத்தடுத்த பதிவுகளால்
எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வது தாமதமாகி விட்டது...

கருத்துரை வழங்கிய நல்ல உள்ளங்களுடன்
எனது மகிழ்ச்சியினைப் பகிர்ந்து கொள்ளாதது
மனதை உறுத்திக் கொண்டேயிருந்தது..

இத்தனை நாள் தாமதத்திற்கு
யாதொன்றும் மனதில் கொள்ளற்க...
***



இதோ ஒரு வழியாக இன்று உங்களுடன்!...
அன்புடன் என்னையும் உற்சாகப்படுத்தி - அவ்வப்போது
பழைய நினைவுகளை மீட்டெடுக்க வைக்கின்றார் - 

அன்பின் ஸ்ரீராம்... 
அவர் தமக்கு மனமார்ந்த நன்றி..
***


/// தஞ்சையம்பதியின் எழுத்தே தனி... ///

அன்பின் கரந்தை JK அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.. மகிழ்ச்சி..

/// இனிமையான கதை.. 50 வருடங்களுக்கு முன்னாலயா..
ஆஹா... அரசலாறு..ன்னதும் தஞ்சைக் காற்று அடித்தது..
என்ன ஒரு தன்மை பெண்ணுக்கும் பையனுக்கும்
சிலுசிலுவென்று ஓடியது கதை... ///

இந்தக் காலத்தில் -
அரசலாறு முற்றாகக் கெட்டுப்போய்க் கிடக்கின்றது...
கும்பகோணத்திலேயே அதன் நிலை விளங்கும்...
தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி.. 

/// மாப்பிள்ளைச் சாமி என்றதுமே
தேர்த்திருவிழா வர்ணனையைப் படிச்சதுமே
திருவீழிமிழலை என்பது புரிந்தது... ///

திருவீழிமிழலை மருத்துவமனையில் என் தந்தை பணிபுரிந்தார்...
அரசலாற்றைக் கடந்து தான் அக்கரையில் 
எரவாஞ்சேரிக்குப் போக முடியும்..
அந்த நினைவுகளுடன் எழுதிய கதை இது...

தாங்கள் இந்த ஊரை அடையாளம் கண்டு கொள்வீர்கள் 
என்பது எனக்குத் தெரியும்...
தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

/// கதை சித்திரமாக மலர்ந்து நினைவிலே
மண்ணின் மணத்தோடு நிலைத்தது... ///

தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

/// அந்த ஊர் கடவுள், இயல்பான நடை - மிக அருமை..
என்ன... முடிவைக் கற்பனை செய்யவிட்டுட்டீங்க... ///

தங்கள் அன்பின் வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி..

/// அழகிய கதை.. அப்படியே கிராமத்தவர் பேசுவது போலவே..
ஆனா.. மேகலா வீட்டாருக்கு மட்டும் பிடிச்சா போதுமா?..
வீழியின் பெற்றோரும் விரும்போணுமே!.. /// 

அந்த விஷயம் தெரியாதா உங்களுக்கு!..
வீழியின் வீட்டுல தான் பச்சைக் கொடி காட்டிட்டாங்களே!..
மங்கல மேளம் எல்லாம் கொட்டியாச்சு.. சந்தோசம் தானே!..

தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

/// அந்தக்கால இளைஞர்களுக்கு 
மரியாதையான அன்பும் நேசமும் இருந்தது..
கொஞ்சம் இது நடக்குமோ நடக்காதோ என்ற 
பயத்தில் நிதானமும் இருந்தது... 
கொஞ்சம் அசடாக இருந்தால் கதை வேறு... ///

உண்மைதான்... அன்பும் நேசமும் பொறுப்புணர்வும்
அதே சமயத்தில் பயமும் நிதானமும் இருந்தன...

அதுவே அவர்களது பிற்கால வாழ்க்கை 
உறுதியாக அமைந்ததற்கான காரணங்கள்..
ஆனால், இன்றைய நிலை வேறு.. எல்லாமே தலை கீழ்!..

தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

/// ஒரு சின்ன கதையில் எவ்வளவு விஷயங்களைச் சொல்லீயிருக்கிறீர்கள்!..
ஆற்றைக் கடக்க வேண்டும் என்பதால்
பெண்கள் பாதியில் படிப்பை விடுவது... ///

என்னுடன் படித்த பெண்பிள்ளைகள் பலரும் 
பதினொன்றை நெருங்குவதற்கு முன்னரே படிப்பை நிறுத்தினர் - 
பல காரணங்களுக்காக..
அவற்றுள் - ஆற்றைக் கடப்பது தலையாய காரணம்..

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

/// அசத்தலான கதையும் கதாபாத்திரங்களும் எனக்கு எங்கள் கிராமத்திலோடும் ஆற்றில் குளித்தது நினைவுக்கு வருகிறது... ///

அன்பின் ஐயா..தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

/// கிராமிய மணம் மனதை கவ்விக் கொண்டது.. அருமை..///

அன்பின் ஜி.. தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

/// நேசங்களின் உறவுகளின் மரியாதை கலந்த அன்பு எல்லாம்
ஒரு கனவுலகத்தைக் காட்டுகிறது..
ஒரு காலத்தில் நமக்குச் சொந்தமாக இருந்த உலகம்.. ///

அதனை இழந்து விட்டோம் என்றே தோன்றுகிறது..
மீண்டும் தழைக்க வாய்ப்பு இருக்கின்றதா.. தெரியவில்லை..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
/// எவ்வளவு விஷயங்கள்.. கிராமத்து காட்சிகளை கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள்... எழுத்து நடை அற்புதம்...///

தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

/// அருமையான கதை.. படிக்கும்போதே நாமும் அங்கே இருப்பது போன்ற பிரமையை உண்டாக்கியது.. கிராமிய நடை.. அழகான பேச்சுகள்... ///

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

/// உண்மையிலேயே கிராமத்தில் இருந்தது போன்ற உணர்வு.. ///

அன்பின் வெங்கட்.. தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

/// அருமையான கதை.. பாராட்டுகள்..///

தங்கள் வருகைக்கும் பாராட்டுரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

/// மிகவும் நன்று... பாராட்டுகள்.. ///

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

/// கவிதை நடையில் கதை பின்னி இருக்கிறீர்கள்.. அருமை..///

தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

/// கதை ரொம்ப அழகாக அந்த ஆற்றைப் போலவே செல்கிறது.. ஆற்றங்கரை என்றாலே காதல் விரியும் அல்லது வளரும், தொடரும் இடம் தானே.. /// 

இது தொடர்கதை தானே!..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
***


மீண்டும் ஒரு இனிய பொழுதில்
வீழி - மேகலா தம்பதியருடன் சந்திப்போம்!..
***
வாழ்க நலம்!..
ஃஃஃ

11 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    நன்றிக்கு நன்றி

    வீழி - மேகலா காதல் கீதம் விரைவில் இசைத்திடுவீர் ஆவலுடன்....

    பதிலளிநீக்கு
  2. துரை அண்ணா வந்துட்டேன்....தேம்ஸ்கு முன்னாடி வந்துட்டேன்..பொயிங்கும் 7.5 பொயிங்கி இங்கு தாவுவதற்குள் வந்துட்டேன் ஹா ஹா ஹா ஹா..

    ஹை எங்கள் கருத்து தொடரும் கதைதானே தொடர்கிறது!!! வீழி மேகலா காதல் ஓவியம் தீட்டப்பெற்று இசைத்திட அதைப் பார்த்துகேட்டு வாசித்திட நாங்கள் காத்திருக்கிறோம் அண்ண்னா.....மிக்க நன்றி நன்றி

    கீதா

    பதிலளிநீக்கு
  3. கதை மிகவும் நன்றாக இருந்தது.நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் கதைகள்.

    பதிலளிநீக்கு
  4. கருத்து அங்கே ; நன்றி இங்கே... சபாஷ்...

    பதிலளிநீக்கு
  5. எங்களைக் குறிப்பிட்டமைக்கும், என்னைச் சொன்னமைக்கும், நன்றி... நன்றி... நன்றி..

    பதிலளிநீக்கு
  6. ஆஆஆவ்வ்வ்வ்வ் இப்பூடியெல்லாம் தேடிப் போஸ்ட் போட எப்படித்தான் நேரம் கிடைக்கிறது உங்களுக்கு?...

    நன்றி நன்றி...

    பதிலளிநீக்கு
  7. நீங்க இயக்குனர் விக்கிரமன் மாதிரி. பாசிடிவ்வாக கதை எழுதறீங்க. அதனைத் தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  8. கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..