தமிழமுதம்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு..(072)
***
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 11
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
ஓம் ஹரி ஓம்
திருத்தலம்
திருக்கருகாவூர்
திருக்கருகாவூர்
இறைவன்
அருள்திரு முல்லைவனநாதர்
ஸ்ரீ மாதவி வனேஸ்வரர்
தல விருட்சம் - முல்லை
***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 05 - 06
மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்...
மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்..
திருப்பாடல்கள் 05 - 06
மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்...
மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
இனிய காலை வணக்கம் சகோ! காலையிலேயே வாசித்துவிட்டேன்...கணினி ஆனால் தளம் கருத்து போடும் போது அழுத்திய போது கணினி சோர்ந்துவிட்டதால் கருத்து போட முடியாமல் போனது...
பதிலளிநீக்குமூலனாம் மூர்த்தியையும், காஞ்சிவரதராஜரையும் தரிசனம் கண்டோம்.
விட்ட மார்கழிக் கோலத்தையும் காண்கிறோம்...
கீதா
திருக்கருகாவூர் பெருமானை தரிசித்ததுண்டு. இங்கே உங்கள் தளம் மூலம் மீண்டும் தரிசனம்.
பதிலளிநீக்குநன்றி.
திருப்பாவை, திருவெம்பாவை கண்டோம், படித்தோம். பல முறை திருக்கருகாவூர் சென்றுள்ளோம். இன்று உங்கள் பதிவின் மூலமாக மறுபடியும் சென்றோம். நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் ஜி
பதிலளிநீக்குஇன்றைய தரிசனம் கண்டேன் வாழ்க நலம்.
படித்தேன். தரிசித்தேன்.
பதிலளிநீக்குவணக்கம் ஐயா!
பதிலளிநீக்குஅற்புதத் திருக்காட்சிகளும் திருப்பதிகங்களும்
மிகச் சிறப்பு ஐயா!
மனம் நிறைந்த தரிசம்!
ஐயா!..
நேற்று நான் தேடிய ஒன்று இங்கு இன்று பதிவாகி அற்புதக் காட்சியாகப்
பிரசன்னமாகியிருப்பது கண்டு பிரமித்துப் போனேன் ஐயா!
நான் தேடியது எப்படி இன்று உங்கள் பதிவில் இடம்பெற்றது?...
எனது தேடல் அந்த இறையருளுக்கு எட்டியதும்,
அதனை உடனேயே உங்கள் சிந்தையில் சேர்த்து இன்று இங்கு எனக்குத்
தந்திருப்பதையும் எண்ணி வியந்து நிற்கின்றேன்!..
உங்கள் மூலம் எனக்குச் செய்தி தந்துள்ளான் பரமன்!..
இப்படித் தினமும் தரும் உங்கள் அரிய பதிவுகளைப் பார்க்காது
தவறவிட்டிருப்பேனாகில் கிடைக்கவேண்டிய நல்ல பேற்றினையும் தவறவிட்டிருப்பேன்.
இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி.....
திரைப்பாடல் நினைவிற்கு வருகிறது ஐயா!
என் உளமார்ந்த நன்றிகளுடன் நல் வாழ்த்துக்கள்!
அன்பின் சகோதரி..
நீக்குஎல்லாம் எனையாளும் ஈசன் செயல்!..
புகழ் அனைத்தும் அவன் ஒருவனுக்கே!..
தங்கள் வருகைக்கும் மேலதிகத் தகவல்களுக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
திருக்கருகாவூர் சென்றிருக்கிறோம் என் சின்ன பேரனை தங்கத் தொட்டிலில் கோவிலில் சுற்றியது நினைவில்
பதிலளிநீக்கு